அழகர்சாமியின் குதிரை படத்தை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் ராஜபாட்டை படத்தை இயக்குகிறார் சுசீந்திரன். இது ஒரு ஜாலியான கமர்ஷியல் படமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு வாண்ட்டட் படத்தின் கதாநாயகி தீக்ஷா ஷேத் தான் இதில் விக்ரமுக்கு ஜோடி.
சீனுவாசன் எழுதிய கதைக்கு திரைக்கதை அமைத்து இயக்குகிறார் சுசீந்திரன். இசை யுவன் ஷங்கர் ராஜா, கேமரா மதி, பாடல்கள் யுகபாரதி என நான் மகான் அல்ல படத்தின் கூட்டணி இதில் மீண்டும் இணைகிறது. அழகர்சாமியின் குதிரை படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய பாஸ்கர் சக்தி ராஜபாட்டை படத்திற்கு வசனம் எழுதுகிறார்.
ராஜபாட்டை முழுக்க முழுக்க சென்னையில் நடக்கும் கதை என்பதால், இதன் படப்பிடிப்பு ஜூன் ஏழாம் தேதி முதல் 60 நாட்கள் சென்னையில் நடக்கிறது. பிரம்மாண்டமான செட் போட்டு மூன்று பாடல் காட்சிகளை படமாக்குகிறார்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக