"நஷ்டக் கணக்கை பார்த்து அமைச்சரே, "ஷாக்' ஆகிட்டாரு வே"
""மின்சார வாரியத்துல தான் வே... இந்த வாரியம், 15 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்துல செயல்படறதா எல்லாரும் சொல்லிட்டு இருந்தாவ... இப்ப, இதோட அமைச்சரா இருக்கற நத்தம் விஸ்வநாதன் கூட, எதிர்க்கட்சி வரிசையில இருந்தப்ப, மின் வாரியம், 15 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்துல இயங்கறதா பேசினாரு வே...
""இப்ப, அவரே இந்த துறைக்கு அமைச்சரா வந்ததும், ஆய்வுக் கூட்டம் நடத்திருக்காரு... அப்ப, மின் வாரியம், 40 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்துல செயல்படறது தெரிஞ்சு, அமைச்சர், "ஷாக்' ஆகிட்டார்... அதுவும், கடந்த மூணு வருஷத்துல தான், இழப்பு அதிகமா இருந்திருக்கு... இதை எல்லாம் சரி செஞ்சு, தடையில்லா மின்சாரத்தை எப்ப கொடுக்கப் போறோம்ன்னு, மின் வாரியம் இப்ப முழிச்சிட்டு இருக்கு வே...
""மூணு மாசத்துக்குள்ள மின் தட்டுப்பாடு இருக்கக் கூடாதுன்னு முதல்வர் உத்தரவிட்டிருக்காங்க... அதனால, என்ன செய்யறது தெரியாம, அமைச்சரும், அதிகாரிகளும் கையை பிசைஞ்சுகிட்டு இருக்காங்க வே...'' எனக் கூறிவிட்டு, கிளம்பினார் அண்ணாச்சி; மற்ற பெரியவர்களும் புறப்பட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக