ராகுல் என்ற சீரியல் மாமியார்...!இந்திய அரசியல் வானம் என்பது பல விசித்திரமான நிலவுகளை கொண்ட வினோத வானம்
இங்கே கருப்பாகவும் சந்திரன் உதிப்பான் அவன் கால் முளைத்து சூரியனையும் மிதிப்பான்
அதாவது உண்மைக்காகவே வாழ்ந்த காந்தியும் அதற்கு நேர் விரோதமான பல காந்திகளும் வாழ்வதை இங்கே மட்டுமே காண முடியும்
நான் எந்த காந்திகளை பேசுகிறேன் என்பது யாரும் அறியாத ரகசியம் அல்ல
கடந்த சில காலமாக நமது நாட்டை பொம்மைகளை வைத்து அரசாளும் சோனியா மற்றும் ராகுல் காந்திகள் அடிக்கும் கூத்துக்கள் பல நேரம் மனதிற்கு வேதனையாக இருக்கிறது சில நேரம் சிரிப்பு வருகிறது
இது அவருக்கும் நல்லது விவசாயிகளுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது
இதை அவர் செய்ய மறுத்தால் நிச்சயம் மக்கள் வாய் பூட்டு போடுவார்கள்
இங்கே கருப்பாகவும் சந்திரன் உதிப்பான் அவன் கால் முளைத்து சூரியனையும் மிதிப்பான்
அதாவது உண்மைக்காகவே வாழ்ந்த காந்தியும் அதற்கு நேர் விரோதமான பல காந்திகளும் வாழ்வதை இங்கே மட்டுமே காண முடியும்
நான் எந்த காந்திகளை பேசுகிறேன் என்பது யாரும் அறியாத ரகசியம் அல்ல
கடந்த சில காலமாக நமது நாட்டை பொம்மைகளை வைத்து அரசாளும் சோனியா மற்றும் ராகுல் காந்திகள் அடிக்கும் கூத்துக்கள் பல நேரம் மனதிற்கு வேதனையாக இருக்கிறது சில நேரம் சிரிப்பு வருகிறது
நாம் அரசியலில் புதியதாக ஜோக்கர்களை சந்திக்க வில்லை
இந்திராகாந்தி காலத்தில் ராஜ் நாராயணன்,சரண் சிங் போன்ற ஜோக்கர்களையும் வி.பி. சிங் காலத்தில் தேவிலால் சௌதாலா போன்ற ஜோக்கர்களையும் சந்தித்து இருக்கிறோம்
அப்போது எல்லாம் கூட இந்த ஜோக்கர்கள் நகைச்சுவையாக நடந்து கொண்டாலும் சிந்தனையில் கொடூரம் தெரியாது

ஆனால் இன்று இந்திய அரசியல் வானில் ஜோக்கராக பவனி வரும் ராகுல் காந்தியின் செயல்களை பார்க்கும் போது சிரிப்பாகவும் இருக்கிறது கூடவே பயமாகவும் இருக்கிறது
உத்திரபிரதேச அரசு விவசாய நிலங்களை கையக படுத்தியதை எதிர்த்து விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு கூட்டத்தில் பேசிய ராகுல்
விவசாயிகளின் துன்பத்தை பார்க்கும் போது நான் இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே வெட்கப் படுகிறேன் என வீரா வேசமாக வசனங்களை அள்ளி வீசி இருக்கிறார்
ஆடு நனைவதை பார்த்து ஓநாய் அழுத போது ஆடுகளே இறக்கப்பட்டு ஓநாய்க்கு ஆறுதல் சொன்னதாம்
அதே போலவே ராகுலின் போலியான கரிசன பேச்சை கேட்டு பல விவசாயிகள் ஐயோ பாவம் எவ்வளவு பெரிய வீட்டு பிள்ளை இப்படி நம்மக்காக வந்து குரல் கொடுக்கிறதே என அங்கலாயித்து போகிறார்கள்
விவசாயிகளின் நலனுக்காக இவ்வளவு வருத்தப்படும் ராகுல் காந்தி ஆந்திராவிலும் மராட்டியத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்யும் போது எங்கே போனார்?
ஒரு வேளை அப்போது அவர் இந்தியாவில் இல்லையா? அல்லது இந்தியராக இல்லையா? நமக்கு ஒன்றும் விளங்க மாட்டேன் என்கிறது
நாடு முழுவதும் உள்ள விவசாய நிலங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளை அடிக்க படுகிறது
ரியல் எஸ்டேட் தொழிலால் மொட்டை அடிக்கப் படுகிறது
கிராம புறங்களில் உள்ள ஏரி குளங்கள் தூர் வாரப்படாமல் கரைகள் உறுதிப்படுத்தப் படாமல் வேலி காத்தான் முளைத்து அப்படியே கிடைக்கிறது
சில சிறிய பெரிய நகரங்களில் உள்ள நீர்ஆதார பகுதிகள் அரசியல்வாதிகளால் கபளீகரம் செய்யப்பட்டு இல்லாமல் காணமல் மறைந்தே போய்விட்டது
இதனால் விவசாயமும் அதற்கு தேவையான தண்ணீரும் நாட்டை விட்டு வெகு தொலைவிற்கு போய் கொண்டே இருக்கிறது
ரசாயன உரங்களால் இந்திய மண் வகை 90 பகுதி விஷமாகி விட்டது

நவீன வேளாண்மை என்ற பெயரில் மரபு சார்ந்த வேளாண் தொழில் நுட்பம் எல்லாமே மயானத்தில் சிதையேறி விட்டன
இதனால் ஒரு மாட்டை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் பல லட்ச்சம் விவசாயிகளின் வாழ்க்கை இன்று முடியுமோ நாளை முடியுமோ என்று ஊசலாடி கொண்டு இருக்கிறது
இதனால் ஒரு மாட்டை வைத்து கொண்டு பிழைப்பு நடத்தும் பல லட்ச்சம் விவசாயிகளின் வாழ்க்கை இன்று முடியுமோ நாளை முடியுமோ என்று ஊசலாடி கொண்டு இருக்கிறது
இறந்து போக போகிறவனின் உடல் உறுப்புகள் துடிப்பதை பார்த்து கிண்டல் செய்யும் கதையாக தான் ராகுல் காந்தியின் இந்த கரிசன பேச்சை இன்றைய சூழலில் நம்மால் எடுத்து கொள்ள முடிகிறது
ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் தான் இருக்கிறது சுண்டு விரல் அசைந்தால் போதும் மக்களின் தலை எழுத்தையே ஒரே நொடியில் மாற்றி விடலாம்
அப்படி பட்ட நிலையில் இருக்கும் ஒரு மனிதன் தனது சொந்த கட்சியின் நலனுக்காக நீலிக் கண்ணீர் வடிப்பது அப்பட்டமான குரூர நகைச்சுவை ஆகும்
திடிரென இவருக்கு உத்திர பிரதேச விவசாயிகளின் மீது அக்கறை ஏற்பட்டிருப்பது இப்படிதான் நினைக்க வைக்கிறது

இது மட்டும் அல்ல அந்த கூட்டத்தில் உத்திர பிரேதேச கிராம ஒன்றில் 70 விவசாயிகளின் இறந்த உடல்கள் அடிக்கி வைக்கப்பட்டுள்ளது என இல்லாத நடக்காத ஒரு விஷயத்தை சீரியல் மாமியார் போல மற்றவர்களை அழ வைக்க பேசி இருக்கிறார்
இது என்ன அபாண்டமான பொய்யாக இருக்கிறது என்று மற்ற அரசியல் கட்சிகளும் பதிலுக்கு ஆற்பறிக்க ஆரம்பித்து விட்டன
இதில் நிஜமான வேதனை என்ன வென்றால் உத்திர பிரேதேசத்தில் மாயாவதி அரசு விவசாயிகளுக்கு பல வித இடைஞ்சல்களையும் ஏமாற்று வேலைகளையும் செய்து வருகிறது
மாயவதியின் மாயா ஜால அரசியல் சித்து விளையாட்டுகளால் விவசாயிகளில் பலர் பலவற்றை அநியாயமாக இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள்
ராகுல் காந்தியின் பக்குவமற்ற பேச்சால் விவசாயிகளின் உண்மையான பிரச்சனைகள் தேசிய அளவில் பேச முடியாமலே போய் விட்டது
உத்திர பிரேதேச விவசாயிகளின் கண்ணீர் ராகுல் என்ற குழந்தை நிழலால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு விட்டது
உண்மையில் விவசாயிகளின் வேதனை ராகுலின் இதயத்தை தொட்டால் ஓட்டுக்காக செயல் படுவதை விட்டு விட்டு அப்பாவி உழவர்களின் வீட்டு அடுப்பு எரிய எதையாவது செய்யலாம்
முடிய வில்லை என்றால் மவுன விரதம் எடுக்கலாம்இது அவருக்கும் நல்லது விவசாயிகளுக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது
இதை அவர் செய்ய மறுத்தால் நிச்சயம் மக்கள் வாய் பூட்டு போடுவார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக