பஸ் புது பஸ் ஸ்டாண்டு அருகே வந்து கொண்டிருந்த போது எரிக், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்க முயன்றுள்ளார். பஸ்ஸில் கூட்டம் இருந்ததால் அவரால் உடனடியாக டிக்கெட் எடுக்க முடியவில்லை. எரிக் டிக்கெட் எடுப்பதற்குள் பஸ் பழைய பஸ் ஸ்டாண்டுக்கு வந்துவிட்டது.
பஸ்ஸில் இருந்து கீழே இறங்கிய எரிக்கிடம் கண்டக்டர் டிக்கெட் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் எரிக், கண்டக்டரின் சட்டை பையை பிடித்து இழுத்துள்ளார். இதை பார்த்து பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்த கண்டக்டர்கள் ஒன்று சேர்ந்த எரிக்கை அடித்து, உதைத்துள்ளனர்.டிக்கெட் எடுக்காமல் பஸ்ஸில் பயணம் செய்ததோடு, தகராறில் ஈடுபட்டதாக கூறி எரிக் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டார். காயத்துடன் ஸ்டேஷனில் இருந்த எரிக்கை போலீஸார் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் பட்டப்பகலில் திடீரென்று வெளி நாட்டு மாணவர் தாக்கப்பட்ட இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது
கனேஷ் - சேலம்,இந்தியா
2010-10-08 07:28:06 IST
சில நேரங்கள்ல அந்த பைய பிடிச்சி இழுத்து பாக்கி சில்லரை எங்கடானு கேக்கனும்னு நினைக்கறோம். அத அவனாவது செஞ்சானே....
கே.karuppanan - singapore,சிங்கப்பூர்
2010-10-08 07:10:35 IST
ஏண்டா நீங்கள் எல்லாம் திருந்த மாட்டீங்கலாடா. ஒரு வெளிநாட்டு காரண எப்படி நடத்தனுமுன்னு கூட தெரியல. அவனுக்கு என்ன தெரியும். நாம தான் சொல்லி புரிய வைக்கணும். அது தாண்டா இன்னமும் இந்தியா வல்லரசு ஆகல. அட து....
செந்தில் - India,இந்தியா
2010-10-08 05:54:23 IST
அட சனியன் புடிச்சவன்களா உங்க வீரத்த காட்ட இந்த அப்பாவி வெளிநாட்டு மாணவன்தான் கிடைச்சனா? அதான் உங்கள மாதிரி ஆளுகள கவுசிலர் பையன் கூட போட்டு தாக்குறான்!...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக