வியாழன், 7 அக்டோபர், 2010

ஷெல் லங்கா-ஷெல் டேர்மினல் மக்கள்மயமாகும் : அமைச்சரவை தீர்மானம்!

ஷெல் லங்கா நிறுவனம் மற்றும் ஷெல் டேர்மினல் லங்கா லிமிட்டட் ஆகிவற்றை அரசுடமையாக்கி மக்கள் மயப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி ஷெல் லங்கா நிறுவனத்தின் 51 வீத பங்குகளையும் ஷெல் டேர்மினல் லங்கா லிமிட்டட் நிறுவனத்தின் 100 வீத பங்குகளையும் அரசாங்கம் 63 மில்லியன் அமெரிக்கன் டொலருக்கு கொள்வனவு செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.ஷெல் லங்கா நிறுவனத்தின் எஞ்சிய 49 வீத பங்குகளையும் மக்கள்மயப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக ஆய்வுகளை மேற்கொள்ள பிரதமரின் செயலாளர் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது என ஊடகப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
மஹிந்த சிந்தனைக்கு ஏற்ப அரசாங்கம் அரச நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவதைத் தடுத்து வருகிறது. அத்துடன் தனியார் மயப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை மீளப் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கெஹெலிய மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: