புதன், 6 அக்டோபர், 2010

ஓட்டலில் தங்கி சதி செய்த 4 அமைச்சர்கள் டிஸ்மிஸ


கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கி சென்னையில் தங்கி சதி செய்த 4 அமைச்சர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
>கர்நாடக மாநிலம் நாகர்பாவில் சந்தை மதிப்பை விட மிக குறைந்த விலையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிக்கு, நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 200 கோடி ரூபாய்க்கும் மேலாக ஊழல் நடந்துள்ளதாகவும் முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்
மேலும் இந்த விவகாரத்தில் முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர் கட்டா சுப்பிரமணியம் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் குமாரசாமி கூறியுள்ளார்.
குமாரசாமியை தொடர்ந்து முதல்வர் எடியூரப்பாவுக்கு நில மோசடியில் தொடர்பு உள்ளதாக பாஜக எம்எல்ஏக்களும் குற்றம் சாட்டியுள்ளனர்.

அமைச்சர் ரேணுகாச்சாரியா உள்ளிட்ட 7 அமைச்சர்களுடன், பாஜக எம்எல்ஏக்கள் 21 பேர் எடியூரப்பா அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக அவர்கள் அனைவரும் சென்னை புதுச்சேரி இடையேயான கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ளனர்.
>இதையடுத்து எடியூரப்பாவுக்கு ஆதரவான அமைச்சர்கள் அசோக்,பசவராஜ்,ஸ்ரீராமுலு ஆகியோர் விமானம் மூலம் சென்னைக்கு விரைந்தனர். பின்னர் அவரக்ள் போர்க்கொடி தூக்கியவர்களிடம் ஹோட்டலுக்கு சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த பேச்சு தோல்வியில் முடிந்தது.
இதையத்து அமைச்சர்கள் அசோக்,பசவராஜ் ஆகியோர் பெங்களூர் திரும்பினர். அமைச்சர் ஸ்ரீராமுலு மட்டும் தொடர்ந்து சமரச முயற்சியில் ஈடுபட்டுவந்தார்.
இந்நிலையில் எடியூரப்பா இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் இருக்கும் சுயேட்டை அமைச்சர்கள் சிவராஜ்,நரேந்திரசாமி, சுதாகர்,வெங்கட் ஆகியோர் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: