ஸ்ரீலங்காவின் இராணுவ தரப்பு முற்றுகை இறுதியாக எஞ்சியிருந்த பிரிவினைவாத தமிழ் புலிக் கிளர்ச்சியாளர்களையும் கடந்தவருடம் மே மாதம் ஒரேயடியாக அழித்து கால் நூற்றாண்டு இரத்தக்கறை படிந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்தபோது, ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகத்தினால் ஒரு பிரச்சனைக்கு ஸ்ரீலங்கா முகம் கொடுக்க நேரிட்டது.
முறியடிப்பு யுத்தத்தின் போது நடந்த உரிமை மீறல்கள் சம்பந்தமாக ஒரு விசாரணையை மேற்கொள்ள வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியம் பிரேரணை ஒன்றை எழுப்பி ஸ்ரீலங்காவை நெருக்கடிக்குள்ளாக்கியது. ஸ்ரீலங்கா பிரதிநிதியாக சபையிலிருந்த தயான் ஜயதிலகா இரண்டு நேச நாடுகளான சீனாவிடமும், இந்தியாவிடமும் ஆதரவு கோரினார். அதன் விளைவாக, ஸ்ரீலங்காவை கண்டனம் செய்யும் பிரேரணைக்குப் பதிலாக 47 அங்கத்துவ நாடுகள் உள்ள சபையில் 29நாடுகள் அரசாங்கத்தை ஆதரிக்கும் படியான ஒரு பிரேரணையைப் பரிந்துரைத்தன, அதை 12 நாடுகள் மட்டுமே எதிர்த்தன, 6நாடுகள் நடுநிலை வகித்தன. நாங்கள் முற்றுமுழுதாக சீனாவிலும் இந்தியாவிலும் தங்கியிருக்கவில்லை. ஆனால் அவர்களின் ஆதரவு ஒரு சிற்றலை உணர்வை ஏற்படுத்தி ஐரோப்பிய ஒன்றியப் பிரேரணையைச் சமநிலைப் படுத்தியது. தற்சமயம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தெற்காசிய கற்கைகள் மையத்தின் வருகை விரிவுரையாளராகக் கடமையாற்றும் ஜயதிலகா “டைம்” சுக்குத் தெரிவித்தார்.
மோதலின் இறுதி மூன்று வருடங்களிலும் மகிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகள் பிரசாரத்தினால் மேற்குலக நாடுகளின் அதிகரித்து வந்த குற்றச்சாட்டுகளால் புலிகளின் கை ஓங்கியிருந்த படியால் சீனாவினதும் இந்தியாவினதும் ஆதரவு மிக அவசியமாக இருந்தது. அத்தோடு சீனா ஸ்ரீலங்காவின் ஒரு பிரதான ஆயத விநியோக நாடாகும்
“அவர்களின் உதவி இல்லாவிடில் நாங்கள் இந்த மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது” ஜயதிலகா கூறினார். சீனா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தலையீடு செய்தது. மேற்கத்திய நாடுகள் ஸ்ரீலங்காவின் தனித்துவமான நடவடிக்கைகளுக்கு எதிராக நடப்பதாக எச்சரிக்கை செய்தன.இது மற்றொரு ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரான நந்தா கொடகே என்கிற ராஜதந்திரியின் கருத்து.
போர் நிறைவடைந்து ஒரு வருடம் கடந்த பின்பும் இரு ஆசிய அதிகார இல்லங்களினதும் ஆதரவு தேய்ந்து போய்விடவில்லை. இந்தியாவும் சீனாவும், ஸ்ரீலங்காவின் இரு பெரும் வழங்குனர்களாக மாறியிருக்கின்றன. யுத்தத்தால் அழிவடைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீள் அபிவிருத்திக்காக இந்தியா 800மில்லியன் அமெரிக்க டொலர்களை குறைந்த வட்டிக்கு கடனாக வழங்கியுள்ளது. 50,000புதிய வீடுகளையும் மோதல் நிகழந்த இடங்களில் நிர்மாணித்துத் தருவதாக ஏற்றுக் கொண்டுள்ளது. இது ஐ.நா.மதிப்பீட்டின் படி தேவையான 160,000 வீடுகளில் மூன்றில் ஒரு பகுதியாகும். ஸ்ரீலங்காவின் போருக்குப் பின்னான பொருளாதாரத்தைக் பூரிக்கச் செய்வதற்காக இந்திய நிறுவனங்கள் முன்னணி வரிசையில் காத்திருக்கின்றன.
“2006 – 2009 இடைப்பட்ட காலப்பகுதிதான் எங்களைப் பின் தள்ளியிருந்தது, இப்போது நாங்கள் இங்கிருந்து குதிரையின் பின் ஏறி வேகத்துடன் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது.” இந்தியாவின் தாஜ் ஹோட்டல் பிரதான நிறைவேற்று அதிகாரி றேமன்ட் பிக்ஸன் “டைம்” க்குத் தெரிவித்தார். தாஜ் குழுமம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியில் அமைந்துள்ள ஒரு பெரிய ஹோட்டல் சொத்தினைப் பெற்று 100அறைகள் கொண்ட ஒரு மிள் அபிவிருத்தித் திட்டம் ஒன்றை ஏற்றெடுப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
“2006 – 2009 இடைப்பட்ட காலப்பகுதிதான் எங்களைப் பின் தள்ளியிருந்தது, இப்போது நாங்கள் இங்கிருந்து குதிரையின் பின் ஏறி வேகத்துடன் செல்ல வேண்டிய தேவை இருக்கிறது.” இந்தியாவின் தாஜ் ஹோட்டல் பிரதான நிறைவேற்று அதிகாரி றேமன்ட் பிக்ஸன் “டைம்” க்குத் தெரிவித்தார். தாஜ் குழுமம் கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியில் அமைந்துள்ள ஒரு பெரிய ஹோட்டல் சொத்தினைப் பெற்று 100அறைகள் கொண்ட ஒரு மிள் அபிவிருத்தித் திட்டம் ஒன்றை ஏற்றெடுப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
சீனாவும் கொஞ்சமும் பின்னாலில்லை. துறைமுகங்களின் மீள் கட்டுமானப் பணிகளுக்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், தெற்கில் மின்தொகுப்பு நிலையங்களையும், கிழக்கில் நெடுஞ்சாலைகள் அமைப்பையும் ஏற்றெடுத்திருக்கிறது. போரின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவற்றுக்கான சர்வதேச விசாரணைகளுக்கு வேண்டி மேற்கத்தைய சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்குகம் வேளையில் இந்த உதவிகள் கிடைத்துள்ளன. ஆகஸ்ட் 15ல் ஸ்ரீலங்கா மனித உரிமை மரபுகளை மீறுவதாகக் குற்றம் சாட்டி ஐரோப்பிய ஒன்றியம், ஸ்ரீலங்காவிற்கு அனுமதிக்கப் படும் வரிச் சலுகை ஒன்றை இடைநிறுத்தியது. அது ஐரோப்பாவினை மட்டும் நாட்டின் மிகப் பெரிய ஏற்றுமதிக்கான அங்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் அதே தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முக்கியமாக சீனாவின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட 350 மில்லியன் டொலர் பெறுமதியான துறைமுகம் ஒன்றைத் திறந்து வைத்தார்.
இந்தியா மிக நீண்ட காலமாகவே ஸ்ரீலங்காவின் விவகாரங்களில் ஒரு முதன்மை பெற்ற இயக்கியாக விளங்கி வருகிறது. ஆயிரக்கணக்கான தனது படையினரை 1987 - !990 காலப் பகுதியில் புலிகளுக்கெதிராக போராடுவதற்கு வேண்டி இங்கு அனுப்பி இருந்தது. இந்தியா தனது 1200 சொந்த வீரர்களை அந்த எதிர்க் கிளர்ச்சி முயற்சியில் இழந்தது. அத்தோடு தமிழ் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரி அப்போதைய பிரதம மந்திரி ராஜிவ் காந்தியை மே 1991ல் கொலை செய்தார்.
சீனாவின் வளர்ந்து வரும் பாத்திரம் புதிதாக விருத்தியாக்கப் பட்டது. ஜயதிலகா மற்றும் கொடகே இருவருமே உணர்வது, மேற்குலகம் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் போது ஸ்ரீலங்கா அதன் பின்னோக்கிய நாட்களான 1950களுக்கு மாறி இந்த இரண்டு நாடுகளின் நெருக்கத்துக்கும் புத்துயிர் கொடுக்கும்.
ஜயதிலகா “டைம்” க்கு கூறியது, இரு நாடுகளினதும் வளர்ந்து வரும் உலக முக்கியத்துவங்களை ஸ்ரீலங்கா ஏற்றுக் கொண்ட போதிலும் அவை ஆசிய சக்திகள் என்பதை ஒருபோதும் மறந்து விடவில்லை. “ஆசியாவில் ஒரு புரிந்துணர்வு உள்ளது, அதாவது எதிர்ப்புகளை(உள்நாட்டு அச்சுறுத்தல்கள்) தாங்கிக் கொள்ள அரசாங்கம் அதிக பலமுள்ளதாக இருக்க வேண்டும் என்று” கொடகே “டைம்”க்கு தெரிவித்தார். உறவு நிலையில் எப்போதும் மெல்லிய பலவீனத்தைக் கொண்டிருக்கும் இரு பிராந்திய சக்திகளையும் சாதுரியமாகக் கையாளும் ஜாலவித்தை ஸ்ரீலங்காவிடம் இருக்கிறது.”இந்தியாவை மகிழ்ச்சிப் படுத்திக் கொண்டே சீனாவுடன் நெருங்கிய உறவுகளை வளர்த்துக் கொள்வோம்.”
இந்த ராஜதந்திர ஜாலவித்தை விளையாட்டு முக்கியமாக மேற்கத்தைய சக்திகளை திரும்பவும் ராஜபக்ஸ அரசாங்கம் கவரக்கூடிய இயல்புடையதாக இருக்கும்.” அமெரிக்காவும் சீனாவின் செல்வாக்கினை எதிர்க்கிறது என கொடகே மேலும் “டைம்” க்கு தெரிவித்தார்.
சமீபத்தில் ராஜபக்ஸவிற்கும் நோர்வே பிரதமர் ஜென்ஸ் ஸ்ரொல்டன் அவர்களுக்கும் இடையில் கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபைக் கூட்டத் தொடரின் போது நிகழந்த சந்திப்பானது, உறைந்து போன உறவுகள் உருகத் தொடங்கியிருப்பதன் முதல் அடையாளம். ஸ்ரீலங்காவுடனான நோர்வேயின் முன்னைய பாத்திரம் 2002ல் புலிகளுக்கும் ஸ்ரீலங்கா அரசுக்கும் இடையே நிகழ்ந்த விபத்தான சமாதான ஒப்பந்தத்திற்கு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியது. ராஜபக்ஸ 2008ல் ஸ்ரீலங்கா இராணுவம் புலிகளின் பலமான இறுதி நிலைகளை நெருங்குவதற்கு முன்பே அதை நிராகரித்து விட்டார். அவர்களை (நோர்வே) எங்கள் பக்கமாக இழுப்பதன் மூலம் மேற்கத்தைய எதிர்ப்பு நிலையை ஒரு நடுநிலைப் பரப்பாக மாற்றிவிடலாம். முன்னாள் ராஜதந்திரி இவ்விதம் கூறினார்.
நன்றி : Time Magazine ) தமிழில் எஸ்.குமார்
நன்றி : Time Magazine ) தமிழில் எஸ்.குமார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக