காமன்வெல்த்: 7 லட்சம் டிக்கெட் விற்பனை
காமன்வெல்த் போட்டிக்காக 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலர் லலித் பனோட் தெரிவித்துள்ளார்.
போட்டி துவங்கிய சில நாள்கள் பல அரங்கங்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. சர்வதேச காமன்வெல்த் சம்மேளனத் தலைவர் மைக் ஃபென்னல் இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து டிக்கெட் விற்பனையை அதிகரிக்கவும், கூட்டம் சேர்க்கவும், போட்டி ஒருங்கிணைப்புக் குழு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலர் லலித் பனோட், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்போது டிக்கெட் விற்பனையும் அதிகரித்துள்ளது.
இதுவரை ரூ. 32 கோடி மதிப்பிலான 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதனால் பெரும்பாலான போட்டி அரங்கங்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. எனினும் நெட் பால், வில்வித்தை போன்ற ஒரு சில போட்டிகளுக்கு பார்ரவையாளர்களின் கூட்டம் குறைவாகத்தான் உள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக