காஞ்சிபுரம் மாவட்டம் ஓரகடம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரீட்டோ நிட்டோகு தொழிற்சாலையை, ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில்,
ஜவுளித்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணு மற்றும் வாகன தயாரிப்பு உள்ளிட்ட அதிக முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது.
முதல் மூன்று இடங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகம் ஜவுளித்துறை, தோல் தொழில்கள், தகவல் தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கிறது. வாகனத் தொழிலில் முன்னோடியாக உள்ளோம்.
கடந்த ஒரு வாரமாக சீனா மற்றும் கொரிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்தேன். இந்த சுற்றுப் பயணத்தின் பலனாக மேலும் பல தொழிற்சாலைகள் தமிழகத்திற்கு வர உள்ளன. தொழில் துவங்கவும், உள்கட்டமைப்பு செய்து கொடுப்பதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றார் அவர்.
பதிவு செய்தது: 07 Oct 2010 1:59 pm
இது உண்மையாக இருப்பின் என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.எப்படியோ தமிழகமும் சென்னையும் மீண்டும் தென்னகத்தின் கேந்திரமாக வேண்டும்.பெங்களூருவிடமும்,ஹைதராபாதிடமும் இழந்த பெருமை மீளவேண்டும்.தீயில் எறிந்த மாணவிகள் அதிமுகாவை பிந்தள்ளிவிட்டார்கள்.திமுகவிற்கு இது நல்ல நேரம்.இனி இலவச வீண் செலவு வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக