1 இலட்சத்து 60 ஆயிரம் பேரில் 90% மானோர் செயற்கைகக் கால்களுக்காகக் காத்திருக்கும் நிலைமை
விடுதலைப் புலிகளை அரசாங்கம் தோற்கடித்து 16 மாதங்கள் கடந்திருக்கும் நிலையிலும் கால்களை இழந்த ஆயிரக்கணக்கானோர் உதவிக்காகக் காத்திருக்கின்றனர்.
இலங்கையில் கால் ஊனமுற்றவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 60 ஆயிரம் ஆகும். இவர்களில் பலர் கண்ணி வெடிகள், வெடிபொருட்களினால் ஊனமுற்றவர்களாகும். பொருத்தமான செயற்கை அவயவங்கள் பற்றாக்குறையாக இருப்பதனால் 90 சதவீதமானவர்கள் இதற்காகக் காத்திருப்பதாக கம்போடியா நம்பிக்கையக அமைப்பான செயற்கை அவயவ சிகிச்சைக்கான இலங்கை பாடசாலை கூறுகிறது.

"தேவையற்ற யுத்தத்தினால் நான் அவயவங்களை இழந்தேன். இப்போதும் துன்பப்படுகிறேன் என்று முல்லைத் தீவைச் சேர்ந்த ஜெகநாதன் சிவகுமாரன் (வயது 25) ஐ.ஆர்.ஐ.என். செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார். அவர் தனது இரு கால்களையும் ஷெல் தாக்குதலில் இழந்துள்ளார். 2009 இன் முற்பகுதியில் அவர் கால்களை இழந்த போதும் இப்போதும் செயற்கைக்கால் இல்லாமலேயே காணப்படுகிறார். காசுக்காக வீதியில் பிச்சையெடுக்கும் விலங்கைப்போல நான் வாழ்கிறேன் என்று அவர் கூறினார்.
செயற்கைக்கால் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிடைக்கின்றன. உதவி வழங்குவோரின் ஆதரவு மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் பற்றாக்குறையினால் இவை போதியளவு கிடைக்காத நிலைமை காணப்படுவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் நிலையம் (யூ.எஸ்.எய்ட்.) தெரிவித்தது. இந்தத் துறையில் சேவை வழங்கக்கூடியவர்கள் போதியளவில் இல்லை. நாட்டுக்குத் தேவையான செயற்கைக்கால் தயாரிக்கக்கூடியவர்கள் அதிகளவுக்கு இல்லையென ஐவன் ராசையா கூறியுள்ளார். இவர் யூ.எஸ்.எய்ட்.டின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார். போதியளவு வசதிகள் பயிற்சி பெற்றவர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் இச்சேவையை வழங்கக்கூடிய போதியளவிலான ஆற்றல் அரசாங்கத்திடம் இல்லையென அவர் கூறியுள்ளார். இந்த விடயம் வடபகுதியில் முக்கியமானதாக காணப்படுகிறது. இலங்கையில் இதுவே பாரிய கவலையாக இருப்பதாக சமூக சேவைகள் திணைக்களத்தின் பிரதிநிதி ரவீந்திர சொலமன் கூறியுள்ளார்.
பின்தங்கிய பகுதிகளில் வளங்கள் பாரிய பிரச்சினையாக உள்ளன. சிகிச்சையளிப்போர் போதியளவில் இல்லை. இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டது. இந்தத் துறையில் அதிகாரிகளுக்கும் தன்னார்வ தொண்டர்களுக்கும் நாம் பயிற்சியளித்து வருகிறோம் என்று சொலமன் கூறினார்.

5 வருடங்களுக்குள் சகல பொது இடங்களுக்கும் ஊனமுற்றவர்கள் செல்லக்கூடியதாக இருக்குமென அரசாங்கம் கூறுகிறது.
உடலுக்கு இசைவான பொருட்கள் மிகவும் விலையுயர்ந்தவையாக உள்ளன. அவை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்தியப் பொருட்கள் செலவு கூடியவை அல்ல. ஆனால், நோயாளிக்குப் பொருத்தமானவையாக இருப்பதில்லை என்று பணியாளரான லலித் கங்கேவா ஐ.ஆர்.ஐ.என்.க்குக் கூறியுள்ளார். உதாரணமாக அமெரிக்காவில் தயாரிக்கப்படும் செயற்கைக் கால் உபகரணம் 5 ஆயிரம்12 ஆயிரம் டொலர்களுக்கு இடைப்பட்டதாக உள்ளது. வருடாந்தம் 4500 டொலரை சராசரியாகச் சம்பாதிக்கும் இலங்கையர்கள் இவற்றைப்பெற்றுக்கொள்வது கடினமான விடயமாகும். அத்துடன், இந்த வருமானமானது நகர்ப்புறத்தில் உள்ளவர்களுக்கம் கிராமப் புறத்தில் உள்ளவர்களுக்கும் ஒரே அளவானதாக இருப்பதில்லை.
2007 இல் கண்ணிவெடி தனது வலது காலை இழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சங்கர் கமலராஜன் (வயது 41) காட்டிற்குள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்த போது அவர் காளை இழந்தார். அவரால் செயற்கைக் காலை பெற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த பெப்ரவரி மாதமே உள்ளூர் சமூகக் குழுவொன்று அவருக்கு அனுசரணை வழங்கியிருந்தது. உதவியளிப்பவர்கள் இல்லாவிடில் இதனைப் பெற்றுக்கொள்வது முடியாத காரியமாகவுள்ளது. 2 வருடங்களாக நான் பிச்சைக்காரனாக இருந்து வருகிறேன். எனது நிலைமையில் என்னால் எதனையுமே செய்ய முடியவில்லை. உணவில்லாமல் நான் இருந்த நாட்களும் உள்ளன. இப்போது சமாளித்துக்கொண்டு புதிய வாழ்வை ஆரம்பிக்க முயற்சி செய்கிறேன் என்று கமலராஜன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக