இலங்கை கடற்படையின் எதிர்ப்புக்கு பணிந்து, தமிழக மீனவர்களை மாற்று மாவட்டத்தில் பிழைப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், இலங்கை கடற்பகுதியை சார்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு கடற்படையினர், தொடர்ந்து தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்புகளுக்கு பிறகும் தீர்வு கிடைக்கவில்லை.சமீப காலமாக இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிழைப்புக்கு வழியின்றி வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையை போக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (செப்., 11), கச்சத்தீவு நோக்கி போராட்டம் செய்ய விசைப்படகு மீனவர்கள் அறிவித்திருந்தனர்.இதைத் தொடர்ந்து, அனைத்து விசைப்படகு சங்கங்களைச் சேர்ந்த மீனவர்களுடன் ராமநாதபுரம் டி.ஆர்.ஓ., ஜீவராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் போலீஸ் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர். பிரச்னை பிழைப்பு சம்பந்தமாக இருப்பதாக, தற்போது அதற்கான ஏற்பாடுகளை செய்ய மீனவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள பாலக்குடியில் தங்கும் தளம் அமைத்து, மீன் பிடிக்க ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சந்தை கிராமத்திலும் இதே போன்ற தளம் அமைத்து உதவுமாறு, மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இலங்கை வசம் உள்ள, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் வலியுறுத்தப்பட்டது. இலங்கை கடற்படையின் நீண்ட நாள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல், அவர்களுக்கு பணிந்து, இங்குள்ள மீனவர்களுக்கு மாற்று மாவட்டத்தில் பிழைப்புக்கு வழி தேட அதிகாரிகள் முன்வந்தது
Shunmugavel - virudhunagar,இந்தியா
2010-10-09 10:10:01 IST
வேதனை அல்ல கேவலம் . . . மஹா கேவலம் ....
காரி துப்பும் சங்கம் - singapore,இந்தியா
2010-10-09 09:55:46 IST
காரி து துதுதுதுதுதுதுதுதுது,,,,,,,,,,,,,,,,,,,,,, மானகெட்ட அரசாங்கம் மாநில மற்றும் மத்திய...
senthilkumar - Tirunelveli,இந்தியா
2010-10-09 09:50:42 IST
இன்னும் கொஞ்ச நாள்ல இலங்கைக்காரன் ஈழத்த நம்ம கிட்ட இருந்து புடுங்குன மாதிரி தமிழ் நாட்டையும் புடுங்க போறான் அப்பவும் நம்ம இந்திய தலைவர்களும் தமிழக தலைவர்களும் வேடிக்கை தான் பாக்க போறாங்க நம்மளும் போத்திக்கிட்டு போய் சாக வேண்டியதுதான்....
ரமேஷ் - சென்னை,இந்தியா
2010-10-09 09:28:29 IST
அரசு அவர்களே, இந்திய ஒற்றுமை தான் பலம். நாம் தனித்து இருந்தால் வெள்ளையன் மீண்டும் வருவான்....
கார்த்தி - திருப்பூர்,இந்தியா
2010-10-09 09:27:59 IST
டே கைப்புள்ள துண்டுக்கு எங்க இருக்கு நேரம் ? குடும்பத்த கவனிக்கவும் சினிமா விழாக்களுக்கு குத்து விளக்கு எத்தவுமே சரியாய் இருக்கே ?... அட ராமா ராமா !...
பார்த்து நொந்தவன் - ராமேஸ்வரம்,இந்தியா
2010-10-09 09:21:06 IST
எல்லாம் அண்டை நாடுகளுக்கு விட்டுகொடுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கும் பொற்காலம்.வாழ்க வளர்க.சாதனை மாபெரும் சாதனை.இது போன்ற நிகழ்வுகள் இந்த ஆட்சி காலத்தில் நிறைய பார்க்க கிடைத்தது எம்பாகியம் ஐயா...இதை நக்கல் நையாண்டி யுடன் சொல்லவில்லை.கணில் நீர் வழிய புலம்பி சொல்கிறேன்....வாழ்க வளர்க....தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...இந்த வாசகத்தை சொல்ல துடிக்குது மனசு...ஆனால் சொல்ல வழி இல்லாமல் தவிக்கும் உங்கள் தமிழன்......
S.Ganesan - அபுDhabi,இந்தியா
2010-10-09 09:15:15 IST
SUPPOSE DMK Chielf take emotional step and show some support to Fishermen, immediately Jaya will complain to Congress and then they dismiss the DMK Government, then in the election, we will promptly elect the Jaya only. How we the tamil state people will support those who supports the Fishermen? Is n't it?...
ர sivakumar - coimbatore,இந்தியா
2010-10-09 08:03:09 IST
இந்திய ராணுவம் நாட்டில் உள்ளத என்ன கண்டு பிடிக்க சி பி யீ விசாரனை வைக்க வேணும்...
முருகேஷ் - நாகப்பட்டினம்மஞ்சக்கொல்லை.,இந்தியா
2010-10-09 07:39:35 IST
என்ன கொடும சார் இது.......
முஹம்மத் அமின் - paris,பிரான்ஸ்
2010-10-09 03:11:20 IST
தூ,தூ என்ன மானங்கெட்ட பொழப்பு இது, இந்திய மக்களை சொரணை கெட்ட மனிதர்களா,யார் யாரிடம் பயப்படுவது,வெட்கம் இந்தியன் என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன்.யாராவது "இந்தியன்"இல்லையா மானத்தைக்காப்பாற்ற....
ஈழவேந்தன் - செமின்கிரேனியர்மொரிசியஸ்,மொரிஷியஸ்
2010-10-09 01:31:43 IST
இந்திய அரசு எதை தான் கிழிச்சது இதுவரை .கையாலாகாத இந்த காங்கிரஸ் இந்தியாவை ஆள்வது தொடருமானால் சிங்களவன் மட்டுமில்லை சீனன் பாகிஸ்தானியன் நம்மை இந்தியாவிருந்தே விரட்டிவிடுவார்கள் .மீன்பிடிப்பையே தொழிலாக வைத்திருக்கும் தமிழக மீனவர்களை சிங்களவனுக்கு பயந்து மாற்று மாவட்டத்தில் இடம் கொடுப்பது என்பது நாம் அவர்களிடம் தோற்றுவிட்டோம் என்பதைத்தான் காட்டுகிறது .வாழ்க இந்தியா, ஓங்குக தமிழன் புகழ் ....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-09 00:57:55 IST
சரி... சரி... சரிடா, இதுதான் பொலைக்கிரதுக்கு ஒரே வழி, பொலைக்கிரதுக்கு உண்டான ஒரே வழியும் போய்டிச்சு, அதுவும் ஒன்னு ரெண்டு பேருக்கு இல்ல, மொத்தமா ரெண்டு மூணு ஊருக்கே போயடிச்சுன்னு சொல்ற அளவுக்கு பிரச்சினை பெரிசா இருந்தா, இந்த ஊர்ல, இந்த பில்லா மாறி பெரிசா கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு இருக்கிற துண்டார் என்னதான் பண்ணுறாரு? ஏதோ ஒருத்தன் ரெண்டு பேரு கடலுக்கு போக முடில, சீக்கு வந்து படுத்து கெடக்கானுகன்னா கூட சரி போ ன்னு விட்டுடலாம். இப்படி ஒரு மாவட்டமே பொழைக்க வழி இல்லாம சாவ போற லெவல் க்கு வந்து இருக்கு, இன்னும் இந்த துண்டு என்னையா பண்ணிக்கிட்டு இருக்கு? அட என்ன கருமம்டா, இந்த கன்யாகுமரி, ராமநாதபுரம் இந்த பக்கத்த சேர்ந்தவனுகளுக்கு என்னிக்குமே ஒரு நல்ல காலம் பொறக்காதா? இந்த துண்டு, அவனுகளுக்கும் சேந்துதானயா முதலமைச்சரு. அவனுக பாவம், எப்போ பாத்தாலும் இப்படி தினமும் செத்து செத்து பொலைக்கிரானுகளே அவனுகளுக்கு ஒரு நல்லததான் செஞ்சு தொலைச்சாதான் என்னவாம்? ச்சை, என்ன ரோதனைடா இந்த கையாலாகத கருமங்கள வெச்சுக்கிட்டு. டேய், ஏண்டா நீங்களாச்சும் என்ன எதுன்னு யோசிச்சு ஓட்ட போட்டு தொலைக்க கூடாதாடா? ஒருக்கா ஓட்டு போட்டுட்டா அடுத்து அஞ்சு வருசத்துக்கு கஞ்சிக்கு வழி இருக்கா என்ன எதுன்னு யோசிக்கவே மாட்டீங்களாடா?...
அரசு - chennai,இந்தியா
2010-10-09 00:28:40 IST
வட இந்திய ஆட்சியாளர்களுக்கு தமிழக மீனவர்கள் படும் கஷ்டம் எல்லாம் எப்படி தெரியும். இலங்கை கடற்படையை சமாளிக்க டெல்லி யை நம்பி பிரயோஜனம் இல்லை. தமிழர்களும் இந்தியர்கள் தான் என்ற எண்ணமே வட இந்திய அரசியல்வாதிகளிடம் இல்லை. இதற்க்கு எல்லாம் ஒரே தீர்வு. தனி தமிழ்நாடு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக