வியாழன், 7 அக்டோபர், 2010

தமிழன் தமிழனை ஈவிரக்கமின்றுத் தெருவில் போட்டு எரித்தகாலம்

'போரினால் துயருற்ற மக்களின் வாழ்க்கையை முன்னேற்றப் புலம் பெயர்ந்த தமிழரின் பங்கு'.
லண்டன் தமிழர் தகவல் நடுவகம் நடத்திய கூட்டம் பற்றிய சில குறிப்புக்கள்
- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் 06.10.10
 02.10.10ல் லண்டனிலுள்ள தமிழர் தகவல் நடுவத்தில் மேற் குறிப்பிட்ட விடயம் பற்றிப் பேசுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் பார்வையாளராக (அழைப்பற்றவர்களில் ஒருவராக) அமர்ந்திருந்தபோது கிரகித்துக்கொண்ட சில விடயங்கள் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
2ம்; திகதி நடந்த அமர்வுக்கு முன்னோடியாகத் லண்டன தமிழர் தகவல் நிலையத்தால் பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன என்பதை இணையத்தளங்கள ;மூலம தெரிந்து கொண்டேன். அதாவது, புரட்டாதி மாதக்கடைசியில், இலங்கை, கனடா போன்ற நாடுகளிலிருந்து வந்த பல பிரமுகர்கள் தலைமையில், இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்பது பற்றியும் மூன்று நாட்களாக  ';அறிஞர்கள் ஆய்வமர்வு'   நடந்ததாகவும்; ஆனால் அது சம்பந்தமாக இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தலைவர்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதுவும் தெரியப்படுத்தாத இரகசியமாக நடந்ததாக லண்டனில் பேசப்பட்டது.
 கூட்டத்துக்கப்போனபோது, ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தது தெரிந்தது. அத்துடன் 'அறிஞர்கள் ஆய்வமர்வில' பங்கு கொண்ட, திரு பாக்கியசோதி சரவணமுத்து, திரு சந்திரஹாஸன் செல்வநாயகம, திரு ராஜன் பிலிப்ஸ் போன்றோர் ஏற்கனவே தங்கள் ஊருக்குத் திரும்பி விட்டதாகச்; சொல்லப்பட்டது.
'போரினாற் துயருற்ற தமிழ் மக்களின் வாழ்க்கையை முன்னேற்றப் புலம் பெயர்ந்த தமிழரின் பங்கு' என்ற பெயரில் கூட்டம நடக்கவிருப்பதாக அறிவித்திருந்தாலும் கூட்டத்தை ஆரம்பித்து வைத்த தமிழர் தகவல் நடுவ முகவர் திர வரதகுமார் அவர்கள், ' கடந்த முப்பது வருடங்களாக நடந்த போரினால் இலங்கையிலுள்ள மக்கள் பொதுச்சபைகள் செயலிழந்து இருப்பதாகவும் அவற்றை மீண்டும் பலப்படுத்திச் செயற்படவைப்பது பற்றிக் கலந்துரையாடவிருப்பதாகவும் சொன்னார்.
அத்துடன், ' இலங்கையில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் பற்றிக் கடந்த சில நாட்களாகச் வரவழைக்கப்பட்டீருந்த அறிஞர்களால் அடையாளம் காணப்பட்ட விடயங்களுக்க எப்படியான  நிவாரணங்களைக் காணலாம் என்று  அறிஞர்கள சொல்லவிருப்பதாகவும் அறிவித்தார்.
அறிஞர்கள் சார்பில் தங்களின் ஆய்வுகளின் முக்கிய பத்து அம்சங்களைப் பற்றி, ஆய்வமர்வில் பங்குபற்றியவர்கள சார்பில் பேராசிரியர் சீலன் கதிர்காமர் விளக்கவுரை கொடுத்தார்.

போரின் பின் 11.000 பேர் சிறை படிக்கப்பட்டார்கள். போராளிகளின் எதிர்காலம் பற்றி இராணுவ ஜெனரல் தயா ரத்தினாயக்காவை  4.11.09 சந்தித்தபோது அவர் சொன்ன தகவல்கள்:
    •11.000 போராளிகள 2000 பேர் பெண்கள்இ போராளிகள் ;18-60 வயதுக்குட்பட்டவர்கள். •40 விகிதமானோர் ஏற்கனவே  ஏதோ ஒரு துறையில் பயிற்சி பெற்றவர்கள் •60 விகிதத்தினர் உத்தியோக நிலையளவில் படிப்பத்தராதரம் உள்ளவர்கள். •40 விகிதமானோர்  ஓ'லெவல் படிப்புவரை படித்திருந்தார்கள். •700-800பேர் ஏ லெவல் எடுத்தவர்கள். •140 பட்டதாரிப் படிப்பில் இருந்தவர்கள்.;  •300-400 பல்கலைக்கழகத்தை எதிர்பார்த்திருந்தார்கள் •.273 பேர் உடனடியாக மேற்படிப்புக்கு சிபாரிசு செய்யப் பட்டவர்கள். •144 பேர் தம்பதிகள்.
    Please click heading for full story 

கருத்துகள் இல்லை: