புதன், 6 அக்டோபர், 2010

Toshiba's 3D.வெறும் கண்களால் பார்க்கக்கூடிய முப்பரிமாண (3D) தொலைக்காட்சியை

முப்பரிமாண (3D) உலகில் ‘டொஷிபா’வின் புதிய புரட்சி!

வெறும் கண்களால் பார்க்கக்கூடிய முப்பரிமாண (3D) தொலைக்காட்சியை ‘டொஷிபா’ அறிமுகப்படுத்தியுள்ளது.பொதுவாக முப்பரிமாணத் தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு கண்ணாடி அணிய வேண்டிய கட்டாய நிலையே இருந்து வந்தது.தற்போது ‘டொஷிபா’ அறிமுகப்படுத்தியுள்ள இத்தொலைக்காட்சிக்கு கண்ணாடி அவசியமில்லை.

இதன் ‘ லிக்யுட் கிரிஸ்டல்’ திரையின் முன்பகுதியில் சிறிய வில்லைகளைக் கொண்ட ‘சீட்’ போன்றதொரு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.மேற்படி சீட்டானது திரையிலிருந்து வெளிப்படும் ஒளியை 9 புள்ளிகளுக்குச் செலுத்துகின்றது. இதனை மனித மூலை முப்பரிமாண வடிவமாக ஒருங்கிணைக்கின்றது.
இத்தொலைகாட்சியானது 12 அங்குலம் மற்றும் 20 அங்குல அளவுகளில் விரைவில் சந்தைக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எனினும் குறிப்பிட்டளவு தூரத்திற்குள் தான் இதன் தன்மையை ரசிக்கக் கூடியதாக இருக்கும்.
20 அங்குல தொலைக்காட்சியின் எல்லை 90 சென்டி மீட்டராகவும் 12 அங்குல தொலைக்காட்சியின் எல்லை 65 சென்டி மீட்டராகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஜப்பானிய சந்தைக்கு வரவுள்ள இத்தொலைக்காட்சியானது சுமார் 1400 அமெரிக்க டொலர்வரை விலையிடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: