திங்கள், 4 அக்டோபர், 2010

கரடியனாறு: சீனாவின் "என்.ஐ.சீ.' எனப்படும் சீன தேசிய புலனாய்வு அமைப்பினர் கொழும்பை

கரடியனாறு குண்டு வெடிப்பின் எதிரொலி
சீனாவின் தேசிய புலனாய்வு அதிகாரிகள் இலங்கை விஜயம் _
சீனாவின் "என்.ஐ.சீ.' எனப்படும் சீன தேசிய புலனாய்வு அமைப்பினர் கொழும்பை வந்தடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டம், கரடியனாறு பொலிஸ் வளாகத்தில் நிகழ்ந்த டைனமைற் கொள்கலன் வெடிப்பு சம்பவம் பற்றி சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில் அது குறித்து நாடளாவிய ரீதியில் புலனாய்வு விசாரணைகளை மேற்கொள்வதற்கே இவ்வமைப்பு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இலங்கையில் உள்ள ஏனைய சீன நிறுவனங்களின் பாதுகாப்பு தொடர்பாகவும் இப்புலனாய்வுக் குழுவினர் ஆராய்வை மேற்கொள்வர் எனவும் சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. அதேவேளை கரடியனாறு வெடிப்பு சம்பவம் குறித்து ஏற்கனவே இந்தியா சந்தேகம் தெரிவித்துள்ளமையை இந்த சீன ஊடகமான சிங்குவா மேற்கோள் காட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை: