அமெரிக்காவிலிருந்து இலங்கை வரவுள்ள 60 பேர் கொண்ட வர்த்தகத் தூதுக்குழு எதிர்வரும் 12ம் திகதி வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். ஐம்பது அமெரிக்கர்களையும், பத்து அமெரிக்க வாழ் இலங்கையர்களையும் கொண்ட உயர்மட்ட வர்த்தகத் தூதுக்குழு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு அடுத்தவாரம் இலங்கை வரவுள்ளது.
கொழும்பில் நடைபெறவுள்ள முதலீடு தொடர்பான செயலமர்வில் கலந்து கொள்ளவுள்ள இவர்கள் வட மாகாணத்திற்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து செல்லப்படும் அமெரிக்க வர்த்தக தூதுக்குழு வட பகுதியில் முதலீடுகள் செய்வது குறித்து விரிவாக ஆராயப்படுமென ஆளுநர் குறிப்பிட்டார். அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத் தின் ஏற்பாட்டிலேயே இந்த தூதுக்குழு இலங்கைக்கு வருகைத்தரவுள்ளது.
12ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு செல்ல வுள்ள இந்த வரல்த்தகத் தூதுக்குழு அச்சுவெலி கைத்தொழில் பேட்டை, மண்டத்தீவு, கேரதீவு மற்றும் தீவு பகுதி களுக்கும் வடபகுதியிலுள்ள கைத்தொழில் மற்றும் சுற்றுலா பிரதேசங்களுக்கும் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
வட பகுதிக்கு செல்லவுள்ள அதிகமான வர்த்தகர்களைக் கொண்ட வெளிநாட்டு உயர்மட்டத் தூதுக்குழு இதுவாகும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
வடக்கில் முதலீட்டுத் துறையை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் பல்§று திட்டங்களையும், செயற்பாடுகளை யும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அவர் தற்பொழுது அதிகமான உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து தமது பணிகளை ஆரம்பித் துள்ளன என்றும் ஆளுநர் சுட்டிக் காட்டினார்.
வடக்கை நோக்கி வரும் உள் நாட்டு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இவர்களுக்குத் தேவை யான ஹோட்டல்கள், தங்குமிட உணவு உட்பட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியுள்ள நிலையில் இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பூரண ஒத்துழைப்புகள் மிகவும் அசியம் என்றும் ஆளுநர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக