ஞாயிறு, 3 அக்டோபர், 2010

தேர்தல் 2011 : விஜயகாந்திற்கு அக்னி பரீட்சை

தமிழ் படங்களில் ஹீரோவாக  நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., மக்களிடம் தனக்கிருந்த  செல்வாக்கால்  தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பொறுப்பேற்று,  இந்திய சரித்திரத்தில் சாதனை படைத்தார். இவருக்கு அடுத்து, ஆந்திராவில், என்.டி.ராமாராவ்,  தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி தேர்தலில் நின்ற போது அவருக்கு மக்கள் மகத்தான வரவேற்பு அளித்தனர்.

 இதை தொடர்ந்து, பல  சினிமா நடிகர்கள், நடிகைகளும் அரசியலில் கால்விட்டனர். சத்ருகன் சின்ஹா, அமிதாபச்சன், சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் உள்ளிட்ட சிலர் அரசியலுக்கு வந்தனர். ஆனால், அவர்களால் மக்களிடையே தனி பெரும் செல்வாக்கை பெற முடியவில்லை.இந்த வகையில் விஜயகாந்தும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தொடங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் அவரது கட்சி போட்டியிட்டது.ஆனால், விருத்தாசலத்தில் நின்ற விஜயகாந்திற்கு மட்டுமே வெற்றி கிட்டியது. மற்றவர்களால் வெற்றி பெற முடியவில்லை. இதை தொடர்ந்து நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஒரு சில இடங்களில் மட்டுமே தே.மு.தி.க., வெற்றி பெற்றது.

பின்பு நடந்த லோக்சபா தேர்தல், இடைத்தேர்தல்கள் ஆகியவற்றில் மற்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிடாமல் தனித்தே போட்டியிட்ட இவரது கட்சி, எல்லா இடங்களிலும் தோல்வியையே சந்தித்தது.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலிலும் தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ள விஜயகாந்த், தனக்கும் மக்களுக்கும் இடையே தான் கூட்டணி என்று கூறி வருகிறார். தமிழகத்தில் இவரது கட்சிக்கு 10 சதவீத ஆதரவே உள்ள நிலையில், இவர் தனித்து போட்டியிட்டால் மற்ற கட்சிகளின் ஓட்டை பிரிக்கத்தான் முடியுமே தவிர வெற்றி பெற முடியாது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இளைஞர்கள், தலித்துகள், நடுத்தர வகுப்பினர் ஆகியோரின் ஓட்டுக்களையே பெரிதும் கவர்ந்தார் எம்.ஜி.ஆர்., அதே பாணியில் விஜயகாந்த் தனது கட்சியை செயல்படுத்தி வருகிறார். ஆனால், எம்.ஜி.ஆர்., காலம் வேறு.  தற்போதுள்ள காலம் வேறு. நடுத்தர வகுப்பினர் தற்போது தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க., ஆகிய கட்சிகளை சார்ந்துள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில் பல தொகுதிகளில் ஒரு லட்சம் ஓட்டுக்கள் வரை தே.மு.தி.க., கட்சி பெற்றது. இந்த ஓட்டுக்களில், தி.மு.க.,- அ.தி.மு.க.,  சேர்ந்த ஓட்டுகள் எத்தனை என்பது தான் புரியாத புதிர். எனவே, விஜயகாந்த் தனித்து நின்றால் கடந்த முறை போலவே, தி.மு.க.,- அ.தி.மு.க., கட்சிகளின் ஓட்டுகளை பிரிப்பாரே தவிர தனிப்பெரும்பான்மையான இடங்களை  வெற்றி பெற முடியாது.படங்களிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர்., ஹீரோவாக திகழ்ந்தார். அப்படி இருந்தும் அவர் தேர்தலின் போது, கூட்டணி வைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆருடன் விஜயகாந்தை ஒப்பிட முடியாது. 

இதை அவரே ஒப்புக்கொள்கிறார்.மக்களிடையே சென்று தனக்கு ஓட்டு போடும் படி எம்.ஜி.ஆர்., கேட்டபோது, அவரை முழுமையாக நம்பி மக்கள் ஓட்டளித்து முதல்வராக்கினர். இப்படி விஜயகாந்தை ஒட்டு மொத்த மக்களும் நம்புவார்கள் என்று சொல்வதற்கில்லை.

அப்படிப்பார்த்தால், வரும் தேர்தல் விஜயகாந்திற்கு ஒரு "அக்னி பரீட்சை'.இந்த தேர்தலை  அவர் எப்படி செயல்படப் போகிறார் என்பதை வைத்து தான் அவரது அரசியல் எதிர்காலம் இருக்கும். தி.மு.க., அ.தி.மு.க., ஆகியவற்றை தவிர மூன்றாவது ஒரு கட்சி ஆட்சி செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதற்காக ஒரே தேர்தலில் முதல்வர் இருக்கையில் விஜயகாந்த் அமர்வது சாத்தியமில்லை. கூட்டணி மூலம் ஆட்சியில் பங்கு கொண்டு, பின் அதிகாரத்தை கைப்பற்றுவது தான் அரசியல் சாதுர்யம். அப்படிச் செய்யாமல் மீண்டும், "தனித்து போட்டி' என்ற முடிவை எடுப்பாரானால் அது அரசியல் பயணத்தில் வீழ்ச்சியையே தரும் என்று கணிக்கின்றனர்.
கட்சி விசை - மக்கள்பார்த்துதுடிக்கும்தெரு,இந்தியா
2010-10-03 18:31:06 IST
அய்யா உங்களை பார்பதற்கு மக்கள் கூட்டம் தான் உள்ளது.ஆனால் ஓட்டு யாரும் போடமாட்டர்கள்.தமிழ் மக்களை நம்பி மறுபடியும் களத்தில் இரங்கி உன் பண பலத்தை செலவு அளித்து விட்டு பிட்ச்சை எடுக்க வந்து விடவேண்டாம்.இங்கு உள்ள தமிழன் குவாட்டர் அண்ட் கட்டிங் வாங்கி கொடுத்தால் ஓட்டு போடுவார்கள்.சார் போய் உங்க குல தொழிலை பாருங்கள்,ஏன் என்றால் இன்னும் உனக்கு பூமியல் வாழ வேண்டி இருக்கிறது.......
Iniyan - Chennai,இந்தியா
2010-10-03 17:53:30 IST
இது காமெடி பீசு.. just enjoy. Don't expect like the great MGR. What can be expect from him and his followers. புது திருடகள், ஊரையே கொள்ளை அடித்துவிடுவார்கள்....
சராசரி மனிதன் - யாதும்ஊரே,இந்தியா
2010-10-03 17:45:06 IST
மந்தை ஆடுகளாய் இந்த மாந்தர் இருக்கும் வரை, மூன்றாவது அணி ஆட்சியை பிடிக்கும் விந்தை நிகழாது. சுயநலம் என்று ஒழிகிறதோ, அன்று எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வரும்....
இளவரசன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-03 17:43:53 IST
விஜயகாந்த் வெற்றி பெற Long Term Plan வகுக்க வேண்டும், இன்னும் நிறைய Field Work செய்ய வேண்டும், இப்பொழுதுள்ள எதிர்கால சந்ததிகளின் ஏதோ ஒரு தேடலின் விடிவாக தன்னை உருவாக்க வேண்டும், சந்தர்பவாத அரசியல் பண்ணக்கூடாது, குடும்ப அரசியல், தன்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்பு, இவற்றை களைந்து, மக்களை நோக்கி இன்னும் நெருங்கி செல்ல வேண்டும், அதற்க்கு இப்பொழுதுள்ள அணுகுமுறையை முற்றிலும் மாற்ற வேண்டும், கட்சி வளர்ப்பது ஆட்சியை பிடிக்க அல்ல, மக்கள் சேவைக்காக என்று மக்கள் உணரும் வகையில் நடந்துகொண்டால், மக்கள் இவருக்கு ஆட்சியை MGR க்கு கொடுத்ததுபோல் தனிபெரும்பான்மையயோடு கொடுப்பார்கள். MGR வளர்ச்சியை ஆழ்ந்து நோக்கினால், அவர் கட்சி துவங்கும் நிலைக்கு நிற்பந்திக்கப்பட்டதுபோல் ஒரு மாயையை உருவாக்கியது தெரியும்....
karthi - pudukkottaik,இந்தியா
2010-10-03 16:05:51 IST
விஜயகாந்து நீங்க பல்லாண்டு வெற்றி பெருக தனித்து நில்லுக வெற்றி பெருக. அரப்பதில் ஆதரவு குறைவு பிறகு நிறைவு....
அந்தோ - முன்னர்,இந்தியா
2010-10-03 15:56:28 IST
விஜயகாந்த் வரணும்...
மக்கள் - இந்தியா,இந்தியா
2010-10-03 15:12:46 IST
எங்கள் தலைவர் கார்த்திக் தான் 2011 முதல்வர்...
sakthivel - chennai,இந்தியா
2010-10-03 15:09:57 IST
என்ன பொறுத்தவரைக்கும் விஜயகாந்த்தேர்தலில் தனியாக போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெறமுடியும்...வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் .இறைவன் வழிநடத்துவார் .......
BASHA - PUDUKKOTTAI,இந்தியா
2010-10-03 14:25:29 IST
வி என்றால் வெற்றி .......
suresh - chennai,இந்தியா
2010-10-03 14:13:29 IST
mgr ponra manitha neyam vendum vetri pera, verum cinema herokkal mattum poothathu...,...
kannan - kanyakumari,இந்தியா
2010-10-03 13:55:51 IST
குடிகாரன் பேச்சு காலை இல் போச்சு...
vit - chennai,இந்தியா
2010-10-03 13:28:11 IST
திமுக மற்றும் பாமக போலவே இவராலும் கட்சியில் "குடும்ப" ஆதிக்கத்தை "தவிர்க்க" முடியவில்லை என்கிற நிலையையும் இவர் ஏற்க மறுக்கின்றார். திமுக இந்த முறை வெற்றி பெற்றால் தமிழகத்தின் "கதி' பற்றி இவர்க்கும் தெரியும்.."கனவு" உலகத்தில் இருக்கின்றார்..இது சினிமா போல் மாயத்தோற்றம் இல்லை..சென்ற முறை இவர் செய்த "மாபெரும் தவற்றால்" அதிமுக ஆட்சிக்கு வருவதை தடை செய்ய முடிந்தது..அதே போல் இந்த முறையும் இவர் தனித்து நிற்க,,திமுக "என்ன விலையும்" கொடுக்க தயாராய் உள்ளது. நிச்சயம் இந்த முறை திமுக தனது மிகப்பெரிய பண பலத்தால் ஒவ்வோர் ஓட்டிற்கும் குறைந்த பட்சம் இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை விலை பேசும்..மீண்டு ஆட்சிக்கு வந்தால்..!! எம் ஜி ஆர் களம் வேறு இது வேறு காலத்திற்கு தகுந்தாற்போல் மாற வேண்டும் நல்லவர்களுக்கு யார் ஒட்டு போடுவது எல்லாம் பணபலம்...
SENTHIL - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-03 13:23:09 IST
எம்.ஜி.ஆர்., அவர்கள் திராவிட கொள்கைகளை பரப்ப நல்ல கதைகளின் நடித்தார்.அன்று உள்ள மக்களுக்கு பல உண்மைகள் தெரிய இன்று போல ஊடகங்கள் இல்லை....
சாமி - MUSCAT,ஓமன்
2010-10-03 13:21:19 IST
இந்த விருச்சிக காந்த் தனித்து நிற்பதால் DMK வுக்குதான் வெற்றி வாய்ப்பு அதிகம், இவரை தனித்து நிக்க சொன்னதே DMK தானே ....
அன்பே சிவம் - singapore,இந்தியா
2010-10-03 13:18:29 IST
நண்பர்களே, பெரும்பாலோனோர் விஜயகாந்த் கூட்டணி வைக்க வேண்டும் என்றே கருத்து சொல்லி இருக்கிறீர்கள். கடந்த தேர்தலில் ஒரே ஒரு தொகுதி வென்ற இவர் வெறும் 50 , 60 சீட்டுகளுக்காக கட்சி வளர்க்க வில்லையாம். பிறகு 150 சீட் கேட்கிறாரா? வேண்டுமென்றால் முஷாரப்பிடம் பேசி பார்க்கலாம். அவர் கொடுப்பார்....
manikandan - coimbatore,இந்தியா
2010-10-03 13:07:06 IST
குடும்ப அரசியலை ஒழிக்க கூட்டணி வைத்து வெற்றி பெற வேண்டும்....
அபு - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-03 13:01:23 IST
People looking for the diffrent goverment - Apart from the DMK and ADMK - DMDK is the most popular party in tamil nadu - As per our sugg we should give one oppe to Mr.Vijayaganth. What ever we are voting again again to the same parties -What we get ? we get the same reply....
kareem - khamismussayat,சவுதி அரேபியா
2010-10-03 11:18:29 IST
எல்லோரும் ஒன்றை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் எம்ஜீஆர் களத்தில் நம் மக்கள் சினிமா மோகத்தில் இருந்தார்கள் அவரை நிஜ வாழ்விலும் ஒரு ஹீரோவாகத்தான் பார்த்தார்கள் இப்பொழுது உள்ள ஜெனெரேசன் படிப்பறிவில் எவ்வளவோ முன்னேறிவிட்டோம், இனி தமிழ் நாடு அடுத்த மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிர்யாக திகழும் என்பதில் சந்தேகம் இல்லை. இனியும் சினிமா ஹீரோக்களுக்கு ஏன் பின்னாடி போக வேண்டும்...
M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-03 11:10:26 IST
திமுக, அதிமுக தவறுகள் செய்கிறது ஒத்துகொள்கிறோம். "தனித்து போட்டி" என்று இருந்த விஜயகாந்த் எப்போ போன மத்திய தேர்தலில் கூட்டணி என்று முடிவை எடுத்து பிறகு தனது மைத்துனரையும், பண்ருட்டி ராமச்சந்திரனையும் டெல்லிக்கு அனுப்பி பிறகு தனித்து என்ற முடிவை எடுத்தாரோ அப்பவே அவர் மீது இருந்த மொத்த நம்பிக்கையும் போய்விட்டது. மக்களுக்கு நல்லது செய்பவன் ஆட்சியில் இருந்து மட்டும்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. ஆட்சியில் இல்லாமலும் செய்யலாம். தனித்து என்று இருந்தவன் கூட்டணிக்கு தயார், மக்களுடன் மட்டும்தான் கூட்டணி, பிறகு எனது தலைமையில் கூட்டணிக்கு தயார். பின் காங்கிரசுடன் கூட்டணிக்கு தயார். என்னமோ காங்கிரசுக்கு ஊழலே செய்யா தெரியாத மாதிரி. ஏண்டா டேய் இன்று நாடும், தமிழர்களும் நாசமா போனதுக்கு காரணமே காங்கிரஸ்தான். உலக மகா ஊழல் கட்சியுடன் கூட்டணி வைக்க துடிக்கும் உன் மேல் இருந்த நம்பிக்கை போய் வருடங்கள் கடந்து விட்டது. தற்போது மக்கள் படும் அல்லல்களை கணக்கில் கொண்டு வரும் தேர்தலில் சாதுர்யமாக கூட்டணி வைக்கும் பட்சத்தில் உனது அரசியல் வாழ்வு ஓரளவு சிறக்கும். காங்கிரஸ் உன்னோடு கூட்டணி வைக்க துடிப்பது உன்னை முதல்வராக்க அல்ல. காங்கிரஸ் தமிழ்நாட்டை ஆளத்தான். ஒரு வேலை காங்கிரஸ் வந்தால் தமிழ்நாடு என்ற முகவரி போய்விடும். அந்த பாவம் உன்னை சேரும். சிறுபான்மை மக்களை உசுப்பேற்றி, அவர்களின் மத உணர்வை தூண்டி நாட்டில் குழப்பம் விளைவிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டை அழிவு பாதையில் இட்டு செல்லும் காங்கிரசுடன் கூட்டணி வைக்க நினைக்கும் உன் கனவு பலிக்காது. விஜயகாந்த் அரசியலில் தனி முத்திரை பதிக்க இயலாது. சொல்லபோனால் ராமதாஸ், வைக்கோ அளவுக்கு கூட வரமுடியாது. பொறுத்திருந்து பாருங்கள்....
anbu - singapore,இந்தியா
2010-10-03 10:40:11 IST
இவர் எந்த விதத்தில் சிறந்தவர் மற்றவர்களிடமிருந்து .எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் .இன்னும் வறுமையை ஒழிப்பேன் ஒழிப்பேன் என்று கூறுகிறார்கள் எப்படி ஒழிப்பார்கள் என்று முதலில் மக்களிடம் விளக்குங்கள்.இது திரைப்படம் அல்ல ஒரே ராத்திரியில் ஒழிப்பதற்கு ....
2010-10-03 10:37:15 IST
விஜயகாந்த்க்கு MUHABBATH GROUP SHARBAGHA WALTHUGHAL / VIJAYGHNTH INSHA அல்லா வின் BHANDUVAR வருகால முதல்வர்...
rbala - ஜோஹோர்இண்டியா,இந்தியா
2010-10-03 10:27:24 IST
கட்டயம் விஜயகாந்த் ஹுட்டணி விட்ட வைதல்தன் நல்லது டி ம கே ஒழிக்க வேண்டும்...
அசோக் - tirupur,இந்தியா
2010-10-03 10:16:06 IST
அரசியல் மாற்றம் என்பது அனைவரும் விரும்பி எதிர்பார்ப்பது. அந்த மாற்றத்தை உங்களிடமும் எதிர் பார்க்கும் காலம் இது தான் விஜய். சுயநலம் இல்லாமல் திட்டமிட்டால் வெற்றி நிஜம் ....
எ.கே. முஹம்மது சபியுல்லாஹ் - அபுதாபியுஎஇ,இந்தியா
2010-10-03 10:04:48 IST
எம் ஜி ஆர் காலத்தில் படிக்காத பாமரமக்கள் அதிகம், எனவே சினிமாவில் வருவது எல்லாம் உண்மை என்று நம்பி ஓட்டு போட்டார்கள். ஆனால் தற்போது நிலைமை முன்னேறி அனைவர்களும் படித்தவர்கள் சிந்திக்ககூடியவர்கள். நடிகனை நம்பி ஓட்டு போடமாட்டார்கள்....
ராஜா முஹம்மத் - Dubai,இந்தியா
2010-10-03 10:04:43 IST
திரு விஜயகாந்த் அவரால் கண்டிப்பாக முதல்வராக முடியும். நம்பிக்கை இருத்தால் வெற்றி நிச்சயம்....
mohan - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-03 10:04:26 IST
எழில் தேவை இல்லாமல் ஏன் வைகோவை சம்பந்த படுதுகிறிர்கள்.கட்சி நடத்த மக்கள் மட்டும் போதாது,பணம் வேண்டும்,பணம் இல்லாமல் கட்சி நடத்தினால் தலைவர் மட்டுமே இருப்பார்,தொண்டர் இருக்கமாட்டார்கள்.பார்க்கலாம் விஜயகாந்த் பட்சோந்தியாக மாறும் காலம்வெகு தூரமில்லை. regards mohan.p...
கே எஸ் நாதன் - பட்டுக்கோட்டை,இந்தியா
2010-10-03 09:59:03 IST
நண்பர் எழிலின் கருத்து அபாரம். வாழ்த்துக்களும் நன்றியையும் நண்பருக்கு தெரிவித்துகொள்கிறேன் ........
கொங்கு elango - tirupur,இந்தியா
2010-10-03 09:20:39 IST
விஜயகாந்த் வெத்து வெட்டு... யார் வேண்டமானாலும் தேர்தலில் ஜெய்கலாம்... தீய சக்தி தி மு க மட்டும் மறுபடியும் வரவே கூடாது...
வண்டுமுருகன் - மதுரை,இந்தியா
2010-10-03 09:07:20 IST
சார் கந்து வட்டிக்கு கடன் வாங்க போறீங்களா? இம் முறையாவது ஒன்னு க்கு மேல ஜெய்க்க வேண்டுகிறேன்.ஆன ரொம்ப கஷ்டம்...... கடைசில பொட்டிகடை வைக்கிற நிலைமை மட்டும் எங்க புரட்சி களிங்கனுக்கு வந்த்ரகூடது ஆண்டவா.......
விஜய் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-03 09:02:16 IST
நீங்கள் சொல்வதும் சரிதான் எம் ஜி ஆர் களம் வேறு இது வேறு காலத்திற்கு தகுந்தாற்போல் மாற வேண்டும் நல்லவர்களுக்கு யார் ஒட்டு போடுவது எல்லாம் பணபலம். ஆட்சி மாற்றம் வந்து தலைவர் முதல்வரானால் சந்தோசம். கூட்டணி வைத்தே ஆக வேண்டும் அப்பதான் ஜெயிக்க முடியும். விஜய் துபாய்...
ம. தியாகராஜன் - மும்பை,இந்தியா
2010-10-03 09:00:49 IST
இந்தமுறை விஜயகாந்த் தனித்து போட்டியிட்டால் மூன்று விழுக்காடு வாக்குகளைகூட பெற இயலாது. மக்கள் எப்போதுமே ஜெய்க்கிற கட்சிக்குதான் வாக்கு போடுவார்கள்....
jahir - peravurani,இந்தியா
2010-10-03 08:33:54 IST
எழில் சொல்வது நல்ல கருத்தான பதிவு...
ராஜா - கொரியா,இந்தியா
2010-10-03 08:14:06 IST
We support Vijayakanth. We need some strong opposition to oppose worst DMK & ADMK....
மஞ்சள் துண்டு - சென்னை,இந்தியா
2010-10-03 08:04:29 IST
மஞ்சள் துண்டு ஜெய்க்க வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யும்....ஆ தி மு க வுடன் கூட்டணி வெயக்க வேண்டும்.......
மதுரை ஜான் - madurai,இந்தியா
2010-10-03 07:52:07 IST
நேர்மையும், துணிவும் உள்ளவர் விஜி.தன்னுடைய பணிவால்,தளரா முயற்சியால் உயர்ந்தவர்.அரசியல் ஆதாயம் தேட,அரசியலுக்கு வரவில்லை.மக்களுக்கு எதாவது நன்மை செய்யவேண்டும் என்று எண்ணி வந்தவர். காலத்தின் கட்டாயம் இன்று அவர் அரசியலில் தவிர்க்கமுடியதவர் ஆகி விட்டார்.நல்ல எண்ணங்கள் அவரை வழி நடத்தும்.வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் .இறைவன் வழிநடத்துவார் ....
சந்திரன் - தமிழ்நாடு,இந்தியா
2010-10-03 07:49:29 IST
தினமலர் உட்பட...கருத்து தெரிவித்துள்ள அனைவரும் எதோ விஜயகாந்த் ஆட்சியைப்பிடித்து ..தமிழக மக்களுக்கு நல்லது செய்வதற்க்காக கட்சி ஆரம்பித்த மாதிரி ரொம்ப ஃபீல் பண்ணியிருப்பது விந்தை. எல்லாம் பணப்பெட்டிக்காகத்தான். தமிழகத்தில் விஜயகாந்த், ஆந்திரத்தில் சிரஞ்சீவி மராட்டியத்தில் ராஜ் தாக்கரே போன்றோருக்கு ஓட்டை பிரிப்பதர்க்காகவே காங்கிரசிலிருந்து பணம் கொடுக்கப்படுகிறது என்பது நிதர்சனமான உண்மை.. தனித்து நின்றால் இம்முறை வி.காந்தும் வெற்றி பெறமுடியாது...எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.....
கே.ராஜசேகரன் - chennai,இந்தியா
2010-10-03 07:39:14 IST
விஜயகாந்த் அ தி மு க வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.தி மு க ஆட்சியை ஒழிக்க அவரால் முடிந்த "அணில் சேவை" செய்த பெருமை கிடைக்கும்....
ப. மாதவன் - சென்னை,இந்தியா
2010-10-03 07:29:05 IST
அந்த பத்து சதவீதமும் பரி போய் விடும் அடுத்த தேர்தலில் தனியாக போட்டியிட்டால். ஆதலால் அகில இந்திய கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டால் நல்லது. ப. மாதவன்...
SADAK - GUANGZHOU,சீனா
2010-10-03 06:49:06 IST
NONE CAN EQUAL TO M G R. M G R WAS ENTIRELY DIFFERENT FROM OTHER POLITICIANS OF OTHER ACTORS.SO, NONE CAN IMAGINE TO BECOME AN ANOTHER M G R....
லிங்கம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-03 06:42:26 IST
எழில் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...
Sarad - Kudavancheri,இந்தியா
2010-10-03 06:01:54 IST
டேய் விஜயகாந்த் ஒழுங்கா கூட்டணி வெச்சி முன்னுக்கு வர பாரு இல்ல நீ காலி கண்ணு ............
ராம் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-03 04:33:30 IST
நமது தினமலர் சிறப்பு நிருபர் சொல்வது முற்றிலும் சரியே ஆனால் கட்சி தொடங்கிய போது மட்டும் இன்றி இன்று வரை மக்களோடு மட்டுமே கூட்டணி என்று சொல்லி வரும் விருச்சிக காந்த ஆட்சிய புடிக்க கூட்டணி வைத்தால் மக்களிடையே பின்னடைவை ஏற்படுத்துமே தவிர எந்த வித முன்னேற்றமும் இருக்க போவது இல்லை...அதனால் தன் கொள்கையில் இருந்து விலகாமல் வர போற தேர்தல்லயும் தனித்தே போட்டி இட்டால் அவரின் தனித்தன்மையை காப்பாற்றி கொள்ளலாம் இல்லையேல் ராமதாசு போன்ற அர வேக்காடு அரசியல் தலைவர்களை போல விலாசம் இல்லா கடுதாசி மாறி அரசியல் அரங்கத்தை விட்டு வெளியேறி விடுவார் என்பது என் ஆணித்தரமான கருத்து ( உதாரணம்: ராமதாசு,சரத் குமார் , T.ராஜேந்தர் , இன்னும் என் ஞாபகத்துக்கு வராத சில்லறை கட்சி ) அதனால் சிந்தித்து செயல் படுவது நன்று......
திரு ஜெய் - கனடா,கனடா
2010-10-03 03:38:25 IST
நமக்கு ஆண்டாண்டுகளாக ஒரு பழக்கம் உள்ளது. "ஜெயிக்க போவோருக்கே வாக்களிப்பது". எல்லா பத்திரிக்கைகள் திரு.விஜயகாந்த் ஜெயிப்பார் என்று எழுதாவிட்டால், வாக்கு எண்ணிக்கை குறையத்தான் செய்யும். திரு.விஜயகாந்த் அவர்கள் வெற்றி பெற்று, தமிழ் நாட்டுக்கு இந்த "பகுத்தறிவு" கட்சிகளிடதிளிருந்து ஒரு விடிவு கிடைத்தால் நல்லது தான்....
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-03 02:05:36 IST
எம்ஜியார் காலம் வேறு..இவரது காலம் வேறு..எல்லோருமே எம் ஜி ஆர் ஆகவே முடியாது, சென்ற முறை விஜயகாந்த் செய்த மாபெரும் தவற்றால் இந்த திமுக மைனாரிட்டி என்கிற நிலையில் காங்கிரஸ் சப்போர்ட் நிலையில் ஆட்சியில் ஆட்டம் போடுகின்றது. விஜயகாந்த் உண்மை நிலையை ஏற்க மறுக்கின்றார் என்பது உண்மையே.இவரது மேடை பேச்சு ரசிக்க முடியுமே தவிர யாராலும் ஏற்கவே முடியாது. பார்லிமென்ட் தேர்தலில் கூட இவரை நன்கு "கவனித்த" காரணத்தால்தான் இவரை தனித்து நிற்க செய்ததது என்கிற பழிச்சொல் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. திமுக மற்றும் பாமக போலவே இவராலும் கட்சியில் "குடும்ப" ஆதிக்கத்தை "தவிர்க்க" முடியவில்லை என்கிற நிலையையும் இவர் ஏற்க மறுக்கின்றார். திமுக இந்த முறை வெற்றி பெற்றால் தமிழகத்தின் "கதி' பற்றி இவர்க்கும் தெரியும்.."கனவு" உலகத்தில் இருக்கின்றார்..இது சினிமா போல் மாயத்தோற்றம் இல்லை..சென்ற முறை இவர் செய்த "மாபெரும் தவற்றால்" அதிமுக ஆட்சிக்கு வருவதை தடை செய்ய முடிந்தது..அதே போல் இந்த முறையும் இவர் தனித்து நிற்க,,திமுக "என்ன விலையும்" கொடுக்க தயாராய் உள்ளது. நிச்சயம் இந்த முறை திமுக தனது மிகப்பெரிய பண பலத்தால் ஒவ்வோர் ஓட்டிற்கும் குறைந்த பட்சம் இரண்டாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை விலை பேசும்..மீண்டு ஆட்சிக்கு வந்தால்..!! அந்த சூழ்நிலையை தவிர்க்க அம்மாவுடன் விஜயகாந்த் "பரிசீலிக்க" வேண்டும்..செய்வாரா என்பதை காலம் தான் அவருக்கு உணர்த்தும்..அப்படியே செய்யாவிடிலும் அம்மாவிற்கு சற்று கூடுதல் "உழைப்பு" நிச்சயம் தேவைப்படும் மீண்டும் ஆட்சியை பிடிக்க..!பொறுப்பை உணர்வாரா என்று உங்களை போன்றே நானும் எதிர்பார்கின்றேன்..!!...
எழில் - Thanjai,இந்தியா
2010-10-03 01:47:44 IST
விஜயகாந்த், தோல்வி அடைந்தாலும் அவர் துவண்டு விடக்கூடாது. இன்று ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் வரைந்து கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதற்க்கு காரணம் விஜயகாந்த். எதிர்க்கட்சி எங்கிருக்கிறது என்றே தெரியாமல்,ஆளும்கட்சி கேட்க ஆளில்லாமல் தானே ராஜா தானே மந்திரி என்ற போக்கில் போய்கொண்டிருந்தபோது விஜயகாந்த் களத்தில் இறங்கி கிராம மக்களிடமும் விவசாய வயல்களிலும் இரங்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயன்றபின்தான் ஆளும்கட்சியும் நாடகத்தை அரங்கேற்றி இன்று பல திட்டங்கள் போடுகின்றனர். எதிர்கட்சியோ போராட்டம், தேரோட்டம் என இப்போதுதான் செயல்படுகின்றனர், கடந்த 4 வருடமாக எங்கிருந்தனர்? ஆனால் விஜயகாந்த் இன்று துவண்டு விட்டார். வெற்றி யாருக்கும் எளிதில் கிடைப்பதில்லை. விஜயகாந்த் விழிக்கவேண்டும் அவருக்கு திறமை உள்ளது. நாட்டு மக்கள்மேல் அக்கறை உள்ளது, அரசியலுக்காக அல்ல. அவர் செயல்படவேண்டும். காமராஜரை அவர் நினைவுகூரவேண்டும். தோற்றாலும் வெற்றி ஒரு நாள் நிச்சயம் கிடைக்கும். இன்றைய சூழலில். பச்சோந்திகளாக இருக்கும், வைகோ, ராமதாஸ், ஜால்ரா திருமா வை விட விஜயகாந்த் ஓகே....

கருத்துகள் இல்லை: