உலகின் முதன்முதலாக 15 வயது இத்தாலி சிறுவனுக்கு செயற்கை இருதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இது குறித்து லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பதாவது: இத்தாலியின் ரோம் நகரைச் சேர்ந்த பெயர் தெரியாத 15 வயது சிறுவன் இதயத்தில் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தான். இருதய மாற்று அறுசிகிச்சைக்குகூட தகுதியில்லாத அளவுக்கு உடல் நிலை மோசமானது ஏறத்தாழ மரணத்தை நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது. எனினும் ரோம் நகரில் புகழ்பெற்ற மருத்துவமனையான பாம்பினோ ஜெஸசு குழந்தைகள் நல மருத்துவமனை சிறுவனுக்கு செயற்கை இருதயம் பொருத்த முன்வந்தது. அதன்படி 10 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து வெற்றியும் பெற்றது. இதனால் அந்த சிறுவன் செயற்கை இருதயத்தினால் புதுவாழ்வு பெற்றுள்ளான். அறுவை சிகிச்சையினை வெற்றிகரமாக நடத்திய இம்மருத்துவமனையின் டாக்டர் ஆண்டனோனியோ அமோடியோ கூறுகையில், சிறுவனின் இருதயத்தின் இடது வென்டிரிகிள் பகுதியில் உளபுறத்தில் 2.5 நீளமுள்ள ரத்தக்குழாய் பொருத்தப்பட்டு ரத்த ஒட்டம் செல்லும்படி உடலின் உள்புறமு் மார்புகூட்டிற்குள் வைக்கப்பட்டு, இதற்கான ஓயர் மூலம் மின்கலம் ஒன்று இடது காதில் பொருத்தப்பட்டது. இரவு நேரத்தில் மொபைல் போன் போன்று சார்ஜ் ஏற்றிக்கொள்ளும்படி செய்யப்பட்டது. இம்முறையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுவனும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட உடல் நிலை சீராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதன் மூலம் மருத்துவ வரலாற்றில் முதல்முறையாக செயற்கை இருதயம் பொருத்தி சாதனை படைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக