திங்கள், 5 செப்டம்பர், 2011

தமிழ் மக்களின் விமோசனத்துக்குப் புதிய பாதை

- இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்’
சிங்கள மக்கள் மத்தியிலும் ஆதரவுத் தளமொன்றை உருவாக்குவதன் மூலமே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிரந்தரமானதாக நிலைக்க முடியும். தமிழ்த் தலைவர்கள் இதைப் புரிந்துகொண்டு செயற்படவில்லை. சிங்கள விரோத உணர்வைத் தமிழ் மக்களிடம் தோற்றுவிக்கும் வகையிலேயே இவர்களின் அரசியல் செயற்பாடுகள் அமைந்திருந்தன. தமிழ் மக்களின் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது என்ற உணர்வு அம்மக்களிடம் தோன்றுவதற்கு இது இடமளித்தது.
தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என வெவ்வேறு பெயர்களில் செயற்பட்ட போதிலும் ஆறு தசாப்தங்களுக்கு மேலாக ஒரே தலைமைப் பாரம்பரியமே தொடர்கின்றது. இக் காலப்பகுதியில் இத்தலைமை அதன் பகிரங்க அரசியல் செயற்பாட்டில் இனப் பிரச்சினையைத் தவிர வேறு எந்தப் பிரச்சினையையும் உள்ளடக்கவில்லை. அரசியலில் அறுபது வருடங்கள் சாதாரண காலப்பகுதி அல்ல. இனப் பிரச்சினை தொடர்பாக கருத்தீடுபாட்டுடனும் தீர்க்கதரிசனத்துடனும் செயற்பட்டிருந்தால் இக் காலப்பகுதியில் சிறிதளவாவது முன்னேற்றத்தை அடைய முடிந்திருக்கும். ஆனால், தமிழ் மக்கள் பின்னடைவுகளையே தொடர்ச்சியாக சந்தித்திருக்கின்றார்கள். இழப்புகளும் அழிவுகளுமே அவர்கள் கண்ட பலன். இனப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் இதற்கான காரணம் என்னவென்று நிதானமாக சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. சமகால யதார்த்தத்தை விளங்கிச் செயற்படுவதும் கிடைக்கும் சந்தர்ப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்துவதும் நட்பு சக்திகளைச் சரியாக இனங்காண்பதும் அரசியல் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அத்தியாவசியமானவை. தமிழ் மக்களின் அரசியல் தலைமையைத் தொடர்ச்சியாகத் தங்களிடம் வைத்திருப்பதில் தமிழ்த் தலைவர்கள் அக்கறை செலுத்தினார்களேயொழிய மேலே கூறிய விடயங்களில் கவனம் செலுத்தவில்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் ஆதரவுத் தளமொன்றை உருவாக்குவதன் மூலமே இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிரந்தரமானதாக நிலைக்க முடியும். தமிழ்த் தலைவர்கள் இதைப் புரிந்துகொண்டு செயற்படவில்லை. (மேலும்

கருத்துகள் இல்லை: