செவ்வாய், 6 செப்டம்பர், 2011

சோமாலியாவில் ஏழரை லட்சம் பேர் சாவின் விளிம்பில்!

ஐ.நா. அறிக்கை
ஆப்ரிக்காவின் சோமாலியாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பஞ்சத்தால் ஏழரை லட்சம் பேர் சாவின் விளிம்பில் உள்ளனர்  என ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும் 40 லட்சம் மக்கள்  உலக நாடுகளின் உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள  எத்தியோப்பியா  சோமாலியா மற்றும் கென்யா ஆகிய மூன்று நாடுகளில்  வரலாறு காணாத பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
இவற்றில் சோமாலியாவில் 1991ல் இருந்து நிலையான அரசியல் சூழல் இல்லை. நாட்டின் பெரும்பான்மையான தெற்குப் பகுதி  அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பிடம் சிக்கியுள்ளது. பிற பகுதிகள் பல்வேறு இனக் குழுக்களிடம் உள்ளன.

கருத்துகள் இல்லை: