இலங்கையில் பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் பாதுகாப்பான சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ரோட்டரி கழகத்தின் தெற்காசிய நாடுகளுக்கான மாநாட்டில் கலந்துகொண்டு உரைநிகழ்த் துகையிலேயே இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“விடுதலைப் புலிகள் அமைப்பு இல்லாதொழிக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பை மீண்டும் உருவாக்குவதற்காக சில வெளிநாட்டுச் சக்திகள் பணம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது குறித்து பல்வேறு தரப்பினரும் எமக்குத் தகவல் வழங்கி வருகிறார்கள்.
இலங்கையில் உண்மையாகவே என்ன நடந்தது என்பதை அவர்கள் அறிவார்களா? பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய நாம் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை குறித்தாவது அவர்களுக்குத் தெரியுமா?
மிகுந்த சிரமத்துடன் தான் நாம் சமாதானத்தைப் பெற்றுக்கொண்டோம். ஆயுதங்களை ஏந்திய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டு பொதுமக்களை மீளக் குடியமர்த்துவது என்பது இலகுவான காரியமல்ல. ஆயுதம் ஏந்துமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட பெற்றோர்கள், சிறுவர்களை நாம் மீட்டெடுத்தோம். தமது பிள்ளைகளை பயங்கரவாதத்துக்கு அனுப்பி வேதனை அனுபவித்த தாய்மாருக்கு நாம் ஆறுதல் அளித்தோம். தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற்றப்பட்ட பெண்களுக்கும் ஆயுதம் ஏந்தியோருக்கும் நாம் புனர்வாழ்வளித்தோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக