திங்கள், 29 ஆகஸ்ட், 2011

கடாபி பெண் bodyguards களை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்


ட்ரிபோலி: பதவியில் இருந்து நீக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபி தனது பெண் மெய்க்காப்பாளர்கள் 5 பேரை பாலியல் பலாத்காரம் செய்ததுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

இது குறித்து சன்டே டைம்ஸ் ஆப் மால்டாவில் கூறப்பட்டுள்ளதாவது,

பதவியிறக்கப்பட்ட லிபிய அதிபர் கடாபியின் முன்னாள் பெண் மெய்க்காப்பாளர்கள் 5 பேர் பெங்காஸியைச் சேர்ந்த மனோதத்துவ நிபுணர் செஹாம் செர்கிவாவிடம், கடாபியும், அவரது மகன்களும் தங்களை போதும் என்ற அளவுக்கு அனுபவித்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

செர்கிவா இந்த வாக்குமூலங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளார். சர்வதேச நீதிமன்றம் கடாபி, அவரது மகன் சைப் அல் இஸ்லாம் கடாபி உள்ளிட்டவர்களுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அவர்கள் மீதுள்ள போர்க்குற்ற புகார்கள் குறித்து விசாரிக்கையில் இந்த வாக்குமூலத்தை பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

அதில் ஒரு பெண் மெய்க்காப்பாளரை மிரட்டி அந்த வேலையில் சேரவைத்துள்ளனர். அந்த பெண்ணின் சகோதரர் போதைப் பொருள் கடத்தையில் சிக்கிக் கொண்டதாகவும், அவர் உடனே கடாபியின் மெய்க்காப்பாளர் ஆகாவிடில் அவரது சகோதருக்கு சிறை வாசம் என்று மிரட்டியுள்ளனர். சகோதரனைக் காப்பாற்ற அந்த பெண் கடாபியின் மெய்க்காப்பாளர் ஆகியுள்ளார்.

பெண் மெய்க்காப்பாளர்களை முதலில் கடாபி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவருக்கு பிறகு அவரது மகன், அடுத்து உயர் அதிகாரிகள் என்று பலர் பலாத்காரம் செய்துள்ளனர்.

லிபியாவில் கலகம் வெடித்தபோது கடாபி ஆதரவு வீரர்கள் செய்த பாலியல் பலாத்காரங்கள் குறித்து மனோதத்துவ நிபுணர் செர்கிவா விசாரணை நடத்தி வருகிறார்.

1970களில் இருந்து அன்மை காலம் வரை எப்பொழுதுமே கடாபியை சுற்றி அமேசானியன் கார்ட் என்று அழைக்கப்படும் அவரது பெண் மெய்க்காப்பாளர்கள் இருப்பார்கள். அவர்கள் இராணுவ உடை அணிந்து, முழு அலங்காரத்துடன் தான் காணப்படுவார்கள்.

கடாபியைக் காப்போம் என்று 30 பெண் மெய்க்காப்பாளர்கள் சபதம் எடுத்திருந்தனர். அவர்கள் கடாபியை நிழல் போன்று தொடர்வார்கள். 1998-ம் ஆண்டு கடாபி மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது ஒரு பெண் மெய்க்காப்பாளர் பலியானார், இருவர் படுகாயம் அடைந்தனர்.

லிபிய போராளிகளை எதிர்த்து சண்டையிட பெண் வீரர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக கடாபியின் ஆதரவாளர் கடந்த ஜூன் மாதம் தெரிவி்த்தார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: