மனைவி முதல் மண்ணு வரை விற்க, வாங்கிட என பலவாறு ரகங்கள் இடம் பிடித்திருக்கும் இந்த காலக்கட்டத்தில் கிட்னி விற்கும் தலம் என்பது உள்ளத்தை கிள்ளும் விஷயமாகத்தான் இருக்கிறது.
ஆந்திராவில் பலர் தங்களுடைய ஏழ்மை நிலைக்கு வழி தேடும் விதமாக கிட்னியை விற்க நாங்கள் ரெடி, உங்களுக்கு தேவையா ? உடனே அழையுங்கள் என்ற விளம்பரம் தாங்கிய இணைய தளம் வலம் வருகிறது. . கரீம்நகர் முசீராபாத் பகுதியை சேர்ந்த சீனிவாஸ் ன்பவர் தனது கிட்னி விற்க என்ற விளம்பரத்தை http://adbhai.com என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இவரிடம் தொடர்பு கொண்ட ஒரு வாடிக்கையாளரிடம் அவர் போனில் கூறிய விவரம் வருமாறு :
எனக்கு பணக்கஷ்டம் இதனால்தான் நான் எனது கிட்னியை விற்க முடிவு செய்துள்ளேன். உங்களுடைய உறவினருக்கு கிட்னி வேண்டுமா நான் தருகிறேன், ரூ. 4 லட்சம் முதல் 10 லட்சம் வரை விற்கப்படுகிறது. நீங்கள் எந்த ஆஸ்பத்திரிக்கு வரச்சொல்லுகிறீர்களோ அங்கு வந்து விடுகிறேன். நீங்கள் முழு சோதனைக்கு பின் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் முன்னதாக நீங்கள் எனது பாங்க்., கணக்கில் பணத்தை வரவு செய்து விட வேண்டும் ஓகே., வா என முடித்துக்கொண்டார்.
தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட ஒரு விஷயத்தையும் கூறுகிறார். இப்படித்தான் ஒருவர் கூப்பிட்டு போனார். கடைசி நேரத்தில் எனது உறவினர் கொடுப்பதாக கூறி விட்டார். உங்கள் கிட்னி வேண்டாம் சாரி., என்று சொல்லி., ரூ. 10 ஆயிரமும் கொடுத்து அனுப்பினர் என்றார் சீனிவாஸ் .
இவர் ஒருவர் அல்ல., இது போல் பல இளைஞர்கள் தங்கள் விவரம் மற்றும் போன் நம்பருடன் தகவல்களை விளம்பர இணையதளத்தில் பதிவு செய்திருக்கின்றனர். ஆந்திராவில் கிட்னி வியாபாரம் தற்போது பரபரப்பு. என்ன கொடுமை இது !
ர கிருஷ்ணமூர்த்தி - MUSCAT,பாகிஸ்தான்
2010-08-01 14:49:29 IST
My sister died due to non availability of kidney in 1986.At that time no internet facility. If the facility was available at that time i could have saved my sister. I do not find any thing wrong in the advertisement. R Krishnamoorthy...
இபு பாரிஸ் - sarcelles,பிரான்ஸ்
2010-08-01 14:19:54 IST
கிட்னியை மற்றவருக்கு கொடுப்பது தவறில்லை!!பணகஷ்டம் என்பது அவர் அவரின் சூழ்நிலை!!பணகாரகளுக்கு பணம் வந்தவுடன் இந்த மாதிரியான ஆசையெல்லாம் வராது.ஏழைகள் பாதிக்க படுகிறார்கள்;ஆன் லைனில் கமிஷன் தரகர்கள் குறைவு!!நான் கூட எட்டு வருடமாக டையாலிஸ் செய்து வருகிறேன் பாரீஸில்!!மாற்று கிட்டினிக்கு முயற்சி பண்ண வில்லை!!!...
eswari - switzerland,இந்தியா
2010-08-01 13:53:06 IST
india is growing but still lot of people suffering poverty in india political zero that'why our country not shared with other people.one man having 20 house other one living in street.please help poor people....
நந்தகுமாரன் - Madurai,இந்தியா
2010-08-01 12:54:34 IST
Country is undeveloped. This has nothing to do with internet. People sold their children before 500 years before without any technology. India has beggers for more that 2000years & will continue to beg with advanced technology in the comming years....
singam - namakkal,இந்தியா
2010-08-01 11:43:11 IST
ஆமாய்யா .......இந்த விலை வாசி கொடுமை விட கிட்னி வியாபாரம் ஒன்றும் கொடுமை இல்லை ....சாதாரண மக்கள் என்ன செய்ய முடியும் ?/ நடுத்தர வர்க்கமே இந்த விலை வாசி ல் காலம் தள்ளுவது சிரமம் ...கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள் ...கிட்னி தான் விற்க முடியும் ...இதற்கு இந்த அரசாங்கம் வெட்கி தலை குனிய வேண்டும் ...விலைவாசி கட்டு படுத்த முடியவில்லை என்றல் பதவி துறக்க வேண்டும் ...........மற்றவர்கள் மேல் பழி போடகூடாது ......முந்தானை முடிச்சிலிருந்து வெளி வந்தால் தான் நாடு உருப்படும் ...இல்லாவிடில் மனிதனை மனிதனே தின்னும் காலம் வெகு தூரத்தில் இல்லை ................
3 கருத்துகள்:
அருமை சார் வாழரது கஸ்டம் கிட்னி தானம் செய்யனும் தேவையா செல் 8925947232
முருகேசன்
நானும் கிட்னியை விற்பனை செய்ய விரும்புகிறேன்
கருத்துரையிடுக