கேரளாவில் தொடுபுழா ஆண்கள் கல்லூரியில் மலையாளத்துறை பேராசிரியராக இருப்பவர் டி.ஜே. ஜோசப். சமீபத்தில் இவர் கல்லூரித் தேர்வுக்கு தயாரித்த கேள்வித்தாளில் நபிகள் நாயகத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கேள்வி ஒன்றை சேர்த்ததாக குற்றம்சாட்டப்பட்து.
இதையடுத்து, அவருக்கு எதிராக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில், கல்லூரிப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதனிடையே, முவட்டுபுழாவில் இன்று காலை அவர் தனது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை வழிபாட்டை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது.
இதில், அவரது வலது கை தனியே துண்டானது. மேலும், அவரது உடலிலும் காயங்கள் ஏற்பட்டது. அவர் உடனடியாக கொச்சியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
கேள்வித்தாள் சர்ச்சை காரணமாகவே பேராசிரியர் ஜோசப் வெட்டப்பட்டதாக முவட்டுபுழா காவல்நிலைய ஆய்வாளர் பி.பி. ஷாம்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக