ஞாயிறு, 4 ஜூலை, 2010

நடுரோட்டில் வைத்து போலீசார் என் புடவையை கிழித்தார்கள்

நடிகையும், எம்.பி.யுமான விஜயசாந்தி, தெலுங்கானாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை வெட்டிக் கொல்வேன் என்றுவன்முறையை தூண்டும் வகையில் பேசியதையடுத்து அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

செஞ்சல்குடா ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். ஜெயில் வாசலில் விஜயசாந்தி செய்தியாளர்களிடம்  ஆவேசமாக
’’என்னை ஒரு எம்.பி. என்றும், பெண் என்றும் கூட பார்க்காமல் போலீசார் இழுத்து சென்று போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள்.

பஞ்சாரா ஹில்ஸ் கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவீந்தர்ரெட்டி, ஹிமாயூன்நகர் கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்திர சேகர் ஆகியோர் என்னிடம் மோசமாக நடந்து கொண்டனர்.

நான்  காரில் சென்றபோது காரை நிறுத்தி டிரைவரை கீழே தள்ளினார்கள். கார் சாவியை பிடுங்கிக் கொண்டனர்.

பெண் போலீசார் இல்லாமலேயே அவர்கள் என்னை நடுரோட்டில் இழுத்துச் சென்றனர்.

புடவையை கிழித்தனர். நான் 11 மணி வரை வீட்டில் காத்திருந்தேன்.

அப்போது கைது செய்யவில்லை. வேண்டும் என்றே என்னை நடுரோட்டில் வைத்து கைது செய்து அவமானப்படுத்தி விட்டனர். எம தூதர்கள் போல போலீசார் நடந்து கொண்டனர். உங்களை கைது செய்கிறோம் என்று மரியாதைக்கு கூட ஒருவார்த்தை சொல்ல வில்லை.

நான் என்ன தவறு செய்தேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

கருத்துகள் இல்லை: