வியாழன், 29 செப்டம்பர், 2022

பாரம்பரிய திமுக ஆதரவாளர்களின் அதிருப்தி? சமூக வலையில் விவாதப்பொருளாகிறது?

 Somasundaram  :  திராவிட முன்னேற்றக் கழகத்தில் 33 ஆண்டுகளுக்கு முன் இணைந்தவர்களில் பலர் எந்த ஒரு பதவியிலும் இல்லாமல், ஏன் பலர் அண்ணா அறிவாலயத்தை நேரில் பார்க்காத என்னற்ற தொண்டர்களை பெற்றிருக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்..
ஆனால்
இன்று யாரெல்லாம் வருகிறார்கள். நாங்கள் அப்படியே இருக்கிறோம் என்று சென்னை மயிலாப்பூர் பகுதி கழக முன்னாள் செயலாளர் பேசியது என் கண்களில் இருந்து சில கண்ணீர் துளிகள் என்னையும் அறியாமல் என் கால் விரல்களில் விழுந்தது. அவர் பேசியதை கழகம், மற்றும் தமிழ்நாட்டின் நலன் கருதி எதிர்கால திமுகவினரின் நன்மைகளையும் கருத்தில்கொண்டு முகநூலில் அவரது பேசியதை பதிவு செய்யவில்லை.
தலைவர் மற்றும் முதலமைச்சர் அவர்களே!!
கழகத்தின் கடைக்கோடி தொண்டர்களின் அத்தியவாசிய தேவைகள் என்ன என்பதை தெரிந்து அதை நிறைவேற்றுங்கள் என்பதை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்...
அப்படி செய்தால் மட்டுமே, அதிலிருந்துதான் உண்மையான திராவிட மாடல் ஆட்சி உருவாகும், இல்லையெனில் அது வெறும் பேசும் பொருளாக மட்டுமே இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்...
நன்றி  .. அன்புடன் ..  சோமசுந்தரம் .. ஓசூர்

குமரன் குருசாமி  :  கடந்த 40 வருடமாக திமுகவில் இருக்கிறேன்.
அதுவும் வெறும் தொண்டனாக மட்டுமே இருக்கிறேன் .
கட்சியிலிருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன்.
கல்லூரி காலங்களில் உணர்வுபூர்வமாக
கட்சிக்காக (உதயசூரியன்) உழைத்தேன்.
உடினிருந்தவரகள் எல்லாம் அவர்களின் தனித்திறமையால் மேலே வந்து பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
எனக்கு அந்த திறமை இல்லை என்பதை விட அது அவசியமில்லை என நினைக்கிறேன்.
இப்படி எதிர்பாக்கறவங்களுக்கு ஒரு விசயத்தை நினைவூட்டுகிறேன்.
இறந்து போன எம்ஜியார் போட்டோவை வைத்து எங்கோ ஒரு குக்கிராமத்தில்
வயதான தாத்தாவோ பாட்டியோ மாலையிட்டு தற்போதும் வணங்குகிறார்கள்.
அவர்கள் மனநிலை என்னவாக இருக்கும்?
இரட்டை இலை மட்டும் தான் அவர்களுக்கு தெரிந்த ஒன்று.
எதிர்பார்க்கறவங்க அதற்கான முன்னெடுப்புக்களை செய்யனும்
கட்சிகாரங்க வந்து நம் நிலை அறிந்து உதவனும் என்பது ஏற்புடையதாக இல்லை.
எந்த கட்சியும் நீ கட்சிக்கு வந்தால் உனக்கு தேவையானதை எல்லாம் கட்சி செய்யும் என வாக்குறுதி கொடுப்பதில்லை.
தன் கை காசை கட்சிக்காக செலவழித்து கட்சியை வளர்த்தவர்களும் பலர் இங்கே இருக்கின்றனர் என்பதும் முக்கியம்.
கிடைத்த ஆட்சி பொறுப்பை வைத்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யனும் என்பது மட்டுமே முதல்வரின் குறிகோள் என்பதை நாம் மறந்துவிடகூடாது.

Somasundaram 
: குமரன் குருசாமி  : எத்தனையோ தொண்டர்கள் வறுமையில் இருக்கிறார்கள். என்னால் எனது சக்திக்கேற்ப சில உதவிகளை திமுக ஆட்சிக்கு வந்த பின்பும், ஆட்சி அதிகாரத்தை எள் முனை அளவிலும் பயன்படுத்தாமல் கடந்த சில மாதங்களாக உதவிகளை செய்து வருகிறேன். அப்படி செய்ததுதான் இன்று வறுமையில் வாடும் அந்த உடன்பிறப்புக்கு..
இந்தப்பதிவு ஒருவேளை முதலமைச்சர் அவர்களுக்கு செல்லுமேயானால் மிக்க மகிழ்ச்சி

குமரன் குருசாமி - Somasundaram  : கடந்த 10 ஆண்டுகளாக வசதியாக இருந்து தற்போது ஒன்னரை வருடமாக வறுமையில் தள்ளப்பட்டார்களா என புரியவில்லை.
வறுமைன்னு எதை சொல்றீங்க?
20 ரூபாய் இருந்தால் ஒரு நாள் முழுவதும் அம்மா உணவகத்தில் சாப்பிடலாமே?
கட்சியே கதி என இருப்பவர்கள் வேலைக்கு ஏதும் செல்ல மாட்டார்களா?
அவர்களின் பிற தேவைகளை கட்சி செய்யனும் என எதிர்பார்ப்பது நியாயமா?
எதையுமே முயற்சி செய்யாமல் கட்சி செய்யனும் என எதிர்ரபார்ப்பது நியாயமே இல்லை.

Somasundaram -     குமரன் குருசாமி :     நீங்கள் மேல்மட்ட திமுகவை மட்டுமே பார்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சற்று கீழே இறங்கிப் பாருங்கள். உங்களுக்குத் தெரியவரும்.

Prakasam Srinivasan : இன்னுமா நம்புறீங்க

கருத்துகள் இல்லை: