வியாழன், 29 செப்டம்பர், 2022

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுப்பு விவகாரம்... தமிழக காவல்துறை மறுசீராய்வு மனு

நக்கீரன்  :ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக காவல் துறை அனுமதி மறுப்பு  விவகாரம்... தமிழக காவல்துறை மறுசீராய்வு மனு
வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடத்த நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்து அனுமதி அளித்திருந்தது. காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கி பேரணி நடத்த நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் நீதிமன்றத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நாடியுள்ளது. இது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.
அதேநேரம் தற்பொழுது தமிழக அரசு சார்பில் தமிழக காவல்துறையும் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளதால் நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தது தொடர்பான உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: