வெள்ளி, 30 செப்டம்பர், 2022

காங்கிரஸ் தலைவர் தேர்தலில உச்ச கட்ட குழப்பம் - என்.திரிபாதி வேட்புமனு தாக்கல்

மாலை மலர்  :  காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட முன்னாள் மத்திய மந்திரியும், அக்கட்சியின் எம்.பி.யுமான சசிதரூர் வேட்புமனுவை இன்று காலை தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து பிற்பகல் அக்கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற மாநிலங்களைவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்திரியிடம் வேட்புமனுவை அவர் வழங்கினார். அசோக் கெலாட் உள்பட காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அப்போது உடன் இருந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் கே.என். திரிபாதியும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.


இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (திரிபாதி பிரிவு) தேசியத் தலைவராக அவர் பணியாற்றி உள்ளார். திரிபாதி போட்டியிடுவதன் மூலம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மும்முனை போட்டி உறுதியாகி உள்ளது

கருத்துகள் இல்லை: