வெள்ளி, 30 செப்டம்பர், 2022

பொன்னியின் செல்வர்கள் - அதிகாரம், சூழ்ச்சி, போர்வெறி, நாடுகளைக் கைப்பற்றல் ஏழைகளின் நிலங்களை பறித்து பார்ப்பனர்களுக்கு ...

 தோழர் புலியூர்  :  பொன்னியின் செல்வன்.
1) இராஜராஜ சோழனின் ஏகாதிபத்திய போர் வெறி.
2) வடக்கிலிருந்து அழைத்து வரப்பட்ட பிராமணர்களுக்கு சதுர்வேதி மங்கலம், பிரம்ம தேயம், மஹாதானபுரம், அகரம், அக்ரஹாரம் என உழுகுடிகளிடமிருந்து பிடுங்கி தானமாக ஆயிரக்கணக்கான வேலி நிலங்களைத் தானமாகக் கொடுத்தது.
3) உழுகுடிகளின் மீது 400க்கும் மேற்பட்ட வரிகளை விதித்து, அவர்களைத் துன்புறுத்தி அவைகளை வசூலித்தது.
4) தானமாகக் கொடுக்கப்பட்ட பிராமணர்களின் நிலங்களுக்கு வரி இல்லை என அறிவித்தது.
5) உழுகுடிகள் வரி கொடுக்கத் தாமதமானால், கலம் உடைத்தல் என அவர்களின் உணவுக் கலயங்கள் உள்ளிட்டவைகளை உடைத்து நொறுக்கத் தனிப் படையணியே உருவாக்கியது.
6) உதிரியாகக் கிடந்த மதத்தை மாபெரும் கோயில் கட்டி அதன் வழியே நிறுவனமாக்கியது.
7) கோயிலின் ஸ்ரீ பண்டாரமே கருவூலம் என உழுகுடிகளின் விளைச்சலில் ஒரு பங்கை வம்படியாகப் பறித்துச் சேர்த்தது.
 ஐந்நூறுக்கும் மேற்பட்ட பிராமணர்களின் கையில் கோயில் பொறுப்பை ஒப்படைத்தது.


9) ஆண்டுக்கு 1,15,000 கலம் நெல்லும், 300 கழஞ்சுப் பொன்னும், 2000 காசுகளும் தானமாக பெரியகோயிலுக்கு வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் 30 காசுக் கடனை அடைக்க வழியில்லாத தாய் அங்காடி, மகள் பெரங்காடி போன்ற ஆயிரக்கணக்கான பெண்களை பாதத்தில் தீச்சூலக் குறியிட்டு அடிமையாக்கியது.
10) அடிமையாக்கப்பட்ட பெண்டிரை கோயில் தேவரடியார்கள் என முத்திரை குத்தி, அவர்களைக் கோயிலின் பின்புறம் 400 காலனி வீடுகளில் அடைத்து நிரந்தர அடிமையாக்கியது.
11) ஈசான சிவ பண்டிதர் என்ற பிராமண குருவின் அடிமையாக இராஜராஜ சோழனும்,, அவரின் மகனான சர்வசிவ பண்டிதரின் அடிமையாக ராஜேந்திர சோழனும் இருந்து கோயில்களுக்கும் பிராமணர்களுக்கும் கணக்கின்றி பொன் தானம் செய்தது.
12) வேதவல்ல பிராமணர்களுக்கு மட்டும் பிராமண போஜனம் என இலவசமாய்ச் சோறு போட நிவந்தங்களாய் நிலங்களைக் கொடையளித்தது.
13) குடவோலை முறையில் பிராமணர்கள் மட்டுமே கலந்துகொள்ளச் செய்து கிராம நகர அதிகாரங்களை ஒட்டுமொத்தமாய் அவர்கள் கையில் கொடுத்தது.
14) திருநந்தா விளக்கு எரிக்க நெய் வேண்டியும், கோயில் பிராமணர்களின் நெய், பால், தயிர், மோர் தேவைகளுக்காகவ்ய்ம் இடையர்களுக்கு தானமாக 'சாவா மூவா வாழ்மாடு' என தானம் கொடுப்பது போல் கொடுத்து அவர்களின் உழைப்பைச் சுரண்டி கோயில் பிராமணர்களை வாழ வைத்தது.
15) புல்லுப் பறிக்கிற பறையன் தீண்டத்தகாதவன் என புலைச்சேரியை ஊருக்கு வெளியே உருவாக்கியது.
16) வலங்கை இடங்கை ஜாதிப் பிரிவினைகள் உருவாகக் காரணமாய் இருந்தது.
17) தமிழ்ப்பாடசாலைகளை நிறுவாமல், வேதக்கல்விக்கு மட்டுமே முன்னுரிமை அளித்தது
18) தண்டனை முறைமைகளில் மனு ஸ்மிருதியைக் கடைபிடித்து பிராமணர்களைப் பாதுகாத்து ஏனையோரை கடுமையாக தண்டித்தது
19) மாமன்னருக்காக தனியே 'மாவிறை' என ஒரு வரியை பொதுமக்கள் மீது விதித்தது.
20) தந்தையும் மகனும் தெற்காசிய நாடுகள் முழுமையையும் சூறையாடி செல்வ வளங்களை அள்ளி வந்து பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோயிலில் குவித்தது. 'பலிசை' எனும் வட்டி முறையால் கடன் பெற்ற வணிகர்களை துன்புறுத்தியது.
இப்படி மக்கள் பார்வையில் வரலாற்றை உணராமல், மன்னர்களின் அரசதிகாரம், சூழ்ச்சி, போர்வெறி, நாடுகளைக் கைப்பற்றல் போன்றவற்றை வைத்து மட்டும் பார்த்தால் அது இனப்பெருமிதத்தில் திளைக்க உதவுமே தவிர, வேறு எதற்கும் உதவாது.

கருத்துகள் இல்லை: