திங்கள், 26 செப்டம்பர், 2022

வெல்கிறார் விஜய பாஸ்கர்? ... கலைஞரின் ஜி.ஓ.354ஐ சிதைக்காமல் தர வேண்டியது திமுக ஆட்சியின் தலையாய கடமை

 Kandasamy Kandasamy : வெல்கிறார் விஜய பாஸ்கர்...
துரோகிகளே வெற்றி பெறட்டும்..
துரோகத்தின் அரசாணை எண்:  293
இந்த துரோகத்தனமான... மருத்துவர்களை பிரித்தாளும் யுத்தியான ஜி.ஓ.293 முன்னாள் அஇஅதிமுக அமைச்சர்... டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களை ' தள்ளுவண்டி ' என்று எள்ளி நகையாடிய விஜய பாஸ்கர் அவர்களின் வியர்வை நாற்றத்தோடு அவரது ஆடைக்குள் கசங்கிக் கிடந்த ஜி.ஓ.
எங்கள் முதல் கேள்வியே..
முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் அவர்களே வெளியிடத் தயங்கி ஒளித்து வைத்திருந்த அந்த ஜி.ஓ. 293 எப்படி கழக ஆட்சியில் வெளியிடப்பட்டது?
துரோகிகள் போட்ட தூபத்தில் கிரங்கிப் போயிருந்த கழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள்... உண்மை நிலை புரியாமல் ஜி.ஓ.293 க்கு தலை அசைத்து விட்டார் என்பதே உண்மை.  அதனால் தான் எல்லோருடைய தலையீட்டிற்குப் பிறகு வாய் மொழி உத்திரவாக... அந்த ஜி.ஓவை அமுலாக்காமல் நிறுத்தி வைத்திருந்தார்...
கலைஞர் 2009 யில் தந்த ஜி.ஓ.354யை அமுலாக்க உங்களை தடுப்பது எது?
300 கோடி செலவு‌. ஆனால் அதன் ஒரு பகுதியை இன்சுரன்ஸ் மூலம் மருத்துவர்கள் திரும்பவும் சம்பாதித்து தந்து விடுவார்கள் என்பதை திரும்பத்திரும்ப எடுத்துரைக்கிறோம்..
ஆனால் அடிமாடுகளைப் போல பணியாற்றும் அரசு மருத்துவர்களை... கொரோனாவின் மூன்று அவைகளிலும் தமிழகத்தை கைப்பிடித்து அழைத்து வந்த அரசு மருத்துவர்களை... தமிழகத்தின் சுகாதாரக் குறியீடுகளை முதன்மையில் வைத்திருக்கும் அரசு மருத்துவர்களை... பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாது .. இது ஸ்டெர்ந்த்தை காட்ட நடைபெறும் போராட்டம் என்று அரசு மருத்துவர்களின் வலியை... வேதனையை... துயரை... பணிச் சுமையை துளியும் கணக்கிலெடுக்காது அவர்களை கொச்சை படுத்துவது ஒரு நல்ல அரசிற்கு அழகல்ல என்பதை பதிவு செய்ய விழைகிறோம்...
இதில் தலையிட்டு... கொடுத்த வாக்குறுதியை மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிறைவேற்ற வேண்டியது அவரது கடமை...
போராடுபவர்களின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் போக்கும்... போராடுபவர்களை கொச்சைப் படுத்துவதும்... அதே சமயம் துரோகத்திற்கு பெயர் போனவர்களுக்கு சார்பாய் செயல் படுவதும் பெருத்த ஏமாற்றத்தை தருகிறது.
கொடுத்த வாக்கை நிறைவேற்றுங்கள் மாண்புமிகு ‌முதல்வர் அவர்களே...
மக்களின் உயிர் காக்கும் பணியில் தங்களை கரைத்துக் கொள்ளும் அரசு மருத்துவர்களை காப்பாற்ற தந்தான் டாக்டர் கலைஞர் அவர்கள் தந்த ஜி.ஓ.354.
டாக்டர் கலைஞர் அவர்களால் செதுக்கப்பட்ட  ஜி.ஓ.354ஐ சிதைக்காமல் அப்படியே தர வேண்டியது கழக ஆட்சியை தலைமையேற்று வழி நடத்தும் நமது முதல்வரின் தலையாய கடமை..

கருத்துகள் இல்லை: