ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

அரசர் சார்லஸ் மருமகள் மேகனை விருந்துக்கு அழைக்க மறுப்பு! மகன் ஹாரி விருந்தை புறக்கணித்தார் ராஜ குடும்ப விருந்தில் நடந்தது என்ன?

tamil.oneindia.com- Shyamsundar :  லண்டன்: ராணி எலிசபெத் II மரணத்தை தொடர்ந்து ராஜ குடும்பம் சார்பாக அரண்மனையில் கொடுக்கப்பட்ட விருந்தில் ராஜா சார்லசின் இரண்டாவது மருமகள் மேகன் அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதன் காரணமாக மேகன் கணவர் ஹாரியும் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டன் ராஜ குடும்பத்தையே புரட்டிப்போட்ட காதல் சம்பவம்தான் மேகன் – ஹாரி இடையிலான காதல்.
சார்லஸ் – டயானா தம்பதிக்கு பிறந்த இரண்டாவது குழந்தைதான் ஹாரி. இவர் சார்லசின் தம்பி.
ராஜ குடும்பத்தை சேர்ந்த ஹாரி, கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் மேகன் மார்கலை சந்தித்தார்.
மேகன் மார்க்கெல் அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை, பெண்ணியவாதி, சமூக சேவகி.


இருவருக்கும் கண்டதும் காதல். அந்த நாளே தங்கள் காதலை உணர்ந்து கொண்ட இவர்கள் டேட்டிங் செய்ய தொடங்கினார்கள்.
இவர்கள் நீண்ட காலம் காதலித்து வந்தனர். இந்த டேட்டிங் விஷயம் தெரிந்த போதே பாட்டி எலிசபெத் கண்களில் கோபம் பொங்க..

நம்ம யாரு.. அவ யாரு.. நம்ம ராஜ குடும்பத்திற்கு இதெல்லாம் செட்டாகுமா?

நீ ம்ம் சொல்லு.. நம்ம பங்காளி, அங்காளி ராஜ குடும்பத்தில் இருந்தே உனக்கு பெண் பார்க்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

ஆனால் ஹாரி மேகன் மீது தீராத காதல். ஹாரி கொஞ்சம் முற்போக்கு சிந்தனையாளர்.

அவரின் அம்மா டயானாவை போலவே.. ராஜ குடும்ப சம்பிரதாயங்களை எதிர்த்தவர். அதோடு இல்லாமல் மேகனும் அதே குணம் கொண்டவர்.

என்ன நடந்தது?
ஹாரிக்கு சிறு வயதில் இருந்தே மனதுக்குள் புரட்சி எண்ணங்கள் ஓடியது. ராஜ குடும்பத்தின் பாரம்பரியங்களை அவர் முற்றிலுமாக எதிர்த்தார்.

அவரின் காதலும் ராஜ வம்சத்து பெண்ணுடன் நடக்கவில்லை . மேகன் மார்க்கெல் வரலாறு, பின்னணி எதையும் பற்றி யோசிக்காமல் ஹாரி அவரை நிபந்தனையின்றி காதலித்தார்.
அதோடு மேகன் ஏற்கனவே ஒருமுறை திருமணம் செய்து அதை விவாகரத்தும் செய்து இருந்தார்.
இதனால் எலிசபெத் அதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. குடும்ப எதிர்ப்புகளை மீறி ஹாரி – மேகன் நாடு நாடாக சுற்றியவர்கள் 2017ல் காதலை அறிவித்துக் கொண்டார்கள். மோதல்

மோதல்
அதன்பின் அதை பொதுவில் அறிவித்தார்கள்.வீட்டில் முழு மனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும் காதல் பட தண்டபாணி மாதிரி.. ஆணவ கொலை செய்யாமல்.. சரி எதோ பண்ணு என்று ஓகே மட்டும் சொன்னார்கள்.

ஆனால் இவர்கள் திருமணம் நடந்த பின் அரண்மனையில். வசிக்கவில்லை திருமணம் செய்த பின், ஹாரி மேகன் இருவரும் தனியாக வீடு எடுத்து பிரிட்டனில் வசித்தனர்.
அதேபோல் நார்த் அமெரிக்கா, கனடாவிலும் அடிக்கடி சென்று வசித்தனர். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக ராஜ குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் வந்தது. ஹாரியின் புரட்சிகரமான கருத்துக்களோ, மேகனின் பரந்து விரிந்த தாழ்மையான குணமோ அவர்களுக்கு பிடிக்கவில்லை.

ஹாரி மேகன்
மேகனை ஹாரியின் ராஜ குடும்பம் பல முறை அசிங்கப்படுத்தி இருக்கிறது.
பொது விழாக்களில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தவறாக பேசி உள்ளனர்.
மற்ற ராஜ குடும்பத்து உறுப்பினர்கள் பலமுறை மேகனை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள்.

இவருக்கு தனியாக பிளேட், தனியாக தண்ணீர் குடிக்க டம்ளர் என்று இரட்டை குவளை முறையை பயன்படுத்தி உள்ளனர்.

கிடைக்கிற நேரத்தில் எல்லாம்.. நாங்க எப்படி தெரியுமா என்று பல ஆண்டு – அடிமை கதைகளை பேசி வெறுப்பேற்றி இருக்கிறார்கள்.
தொலைக்காட்சி பேட்டிகளில் மேகனை குறித்து தவறாக பேசி உள்ளனர்.

மேகன் நிறம்
மேகன் வெள்ளைக்காரி கிடையாது. இதுதான் மேகனை அந்த குடும்பம் தாழ்வாக நடத்த காரணம்.
இதை தெரிந்து கொண்டு இங்கிலாந்து மீடியாவும் மேகனை மோசமாக நடத்தியது.
இங்கிலாந்து ராணி டயானாவை மீடியா துரத்தியது போலத்தான் இவரையும் துரத்தியது.
இது ஹாரிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறிய அவர் 2020ல் பிரிட்டன் நாட்டின் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் ஆகியோர் அறிவித்தனர். இவர்கள் வட அமெரிக்கா சென்று அங்கு தங்கினார்கள்.

உணவு
அதன்பின் ராஜ குடும்பத்தில் உள்ளே இழிநிலைகள் பற்றி “ஓப்ரா” பேட்டியில் இவர்கள் வெளிப்படையாக பேசி இருந்தனர்.

இருந்தாலும் மோதலை மறந்து எலிசபெத் மரணத்தின் போது இவர்கள் குடும்பம் ஒன்றானது.
இந்த நிலையில்தான் ராணி எலிசபெத் II மரணத்தை தொடர்ந்து ராஜ குடும்பம் சார்பாக அரண்மனையில் கொடுக்கப்பட்ட விருந்தில் ராஜா சார்லசின் இரண்டாவது மருமகள் மேகன் அனுமதிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக மேகன் கணவர் ஹாரியும் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வர கூடாது
சார்லஸ் சார்பாக இந்த விருந்து கொடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதற்கு மேகன் வர கூடாது.
அவர் வந்தால் நன்றாக இருக்காது என்று சார்லஸ் கூறியுள்ளார். அதோடு அவர் ராஜ குடும்பத்தினர் வரும் விமானத்திலேயே வர கூடாது என்றும் சார்லஸ் கூறியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த ஹாரியும் அந்த விருந்துக்கு செல்லவில்லை. என் மனைவி செல்லாத இடத்திற்கு நான் செல்ல மாட்டேன் என்று கூறி இருக்கிறார். என்னதான் பெரிய ராஜ குடும்பம் என்றாலும்.. இப்போதும் இனவெறியும்.. நிறவெறியும் “அவர்கள் ” ரத்தத்தில் இருந்து போகவில்லை என்று மக்கள் பலர் விமர்சனம் செய்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை: