உள்ளூர் போர்வெல் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சிறுவன் 30 அடிக்குள் இருந்தபோதே தங்களால் மீட்டு விட முடியும் .. அதுவும் இரண்டு மத்தியலங்களுக்குள் என்று கூறியதாகவும் அதற்கு அதிகாரிகள் சம்மதிக்க வில்லை என்று கூறப்படுகிறது . பின்பு மேலும் ஆழத்துக்குக் சென்ற பொழுதும் கூட அவர்கள் கேட்டுக்கொண்ட போதும் அதையும் அதிகாரிகள் மறுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. .அரசுக்கு கெட்டபெயர் வருமென்ற நோக்கத்தில் உள்ளூர் போர்வெல் நிபுணர்களின் ஈடுபாட்டுக்கு அரசு அனுமதிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது . உள்ளூரில் மக்களிடையே அவநம்பிக்கைதான் அதிகரிக்கிறது . அரசும் ஊடகங்களும் விடயத்தை திசை திருப்பி நாடகம் ஆடுவது போல தெரிகிறது .. உள்ளூர் போர்வெல் காரர்களால் சாதாரண இயந்திரங்கள் மூலம் போடப்பட்ட ஆழ்துளை கிணறை துளைப்பதற்கு அரசின் மிக சக்திவாய்ந்த இயந்திரங்கள் திணறுவது எல்லாம் ..என்ன சொல்வதென்றே தெரியவில்லை . எல்லாவற்றிலும் அரசியல் இலாபம் காணும் முயற்சியே என்ற ஆதங்கம் மேலிடுகிறது?
tamil.news18.com : ஆழ்துளை கிணறு அருகே புதிதாக தோண்டப்படும் இடத்தில் அதிக பாறைகள் இருப்பதால் சுர்ஜித் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது
ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 4-வது நாளாக தொடர்கிறது. குழந்தையை மீட்க முதல் 2 நாட்களில் மீட்புப் பணியினர் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பயனளிக்காததால் ரிக் என்று சொல்லக் கூடிய அதி நவீன இயந்திரங்களை கொண்டு வந்து குழந்தையை மீட்பதற்காக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவன் இருக்கும் ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 1.2 மீட்டர் விட்டத்தில் 90 அடி ஆழத்திற்கு புதிய ஆழ்துளை கிணறு தோண்டப்படுகிறது. 85 அடி முதல் 88 அடிக்குள் குழந்தை சிக்கி உள்ளதால் 90 அடி ஆழத்திற்கு துளையிட திட்டம். எனினும் புதிதாக துளையிடப்படும் குழியில் 25 அடியில் இருந்து 90 அடி வரை பாறையாக உள்ளதால் துளையிடுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
மீட்புப் பணியில் முதலில் பயன்படுத்தப்பட்ட இயந்திரம் பழுதானதாலும் பாறைகள் அதிகம் இருப்பதாலும் அதிக திறன் கொண்ட 2-வது இயந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆழ்துளை கிணறு அருகே 2-வது ரிக் இயந்திரம் மூலம்புதிதாக துளையிடப்படும் இடத்தில் கடினமான பாறைகள் இருப்பதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது . இயந்திரத்தில் பாறை உடைப்பு கருவியை பொருத்தி துளையிடும் பணி நடைபெற்று வருகிறது
புதிதாக தோண்டப்படும் துளை வழையாக குழந்தையை மீட்க தயார் நிலையில் 7 தீயணைப்பு வீரர்கள் உள்ளனர். 90 அடி தோண்ட திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது 35 அடி வரை தோண்டப்ப

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக