zeenews.india.com/tamil: மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு
உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மாநிலத்தில் யார் தலைமையில் ஆட்சி
அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
புதுடெல்லி:
மகாராஷ்டிரா (Maharashtra Assembly Elections 2019) சட்டசபை தேர்தலில்
பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும்,
அதிகாரப் பகிர்வு தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து
வருகிறது. கடந்த 21 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டசபை தேர்தல்
நடைபெற்றது. அதன் முடிவுகள் அக்டோபர் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில்
பாஜக 105, அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத
காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 44 இடங்களிலும் வெற்றி
பெற்றது. மற்ற இடங்களில் மற்ற கட்சிகளும், சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
அதாவது பாஜக கூட்டணி மொத்தம் உள்ள 288 இடங்களில் 162 இடங்களை கைப்பற்றி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. அதேவேளையில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 104 இடங்களை பெற்றது. மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தது 145 தொகுதிகளின் பெரும்பான்மை வேண்டும். ஆனால் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு பெரும்பான்மை இருந்தும், இன்னும் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் 50-50 சூத்திரத்தை சிவசேனா கையெழுடுத்தது தான்.
சிவசேனா தரப்பில், மாநிலத்தில் அமைய உள்ள ஆட்சி அதிகாரத்தில் சமபங்கும், ஐந்து ஆண்டுகால ஆட்சியில், சமபாதி ஆட்சி (இரண்டரை ஆண்டு முதலமைச்சர்) வழங்க வேண்டும். அப்பொழுது தான் சிவசேனா கட்சியை சேர்ந்த ஆதித்யா தாக்கரே மாநிலத்தின் முதல்வராக முடியும் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உறுதியாக இருக்கிறார்.
சிவசேனாவின் இந்த முடிவை பாஜக ஏற்கவில்லை. மேலும் சிவசேனா நிபந்தனைக்கு தலைவணங்க முடியாது என்றும், முடிவை மறுபரிசிலனை செய்யுமாறு பாஜக தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும், அக்டோபர் 31 ஆம் தேதி வரை சிவசேனாவுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த கால எல்லைக்குள் சிவசேனா உடன்படவில்லை என்றால், ஏற்கனவே பாஜக கையில் வைத்திருக்கும் மற்றொரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் உரிமை கோரும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்னதாக சிவசேனாவின் பத்திரிக்கையான சாம்னாவில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையில், பாஜக கூட்டணி குறித்தும், மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் குறித்து கடுமையாக பாஜக தலைவர்களை சாடி எழுதப்பட்டு இருந்தது. இதனால் பாஜக தலைவர்கள் மேலும் கோபமடைந்தனர். இந்த கோபத்தின் வெளிப்பாடாக, "பாஜக தலைமையில் மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான 'பி' திட்டத்தை பிஜேபி தயார் செய்துள்ளது என்றும்,. சிவசேனாவின் 56 எம்.எல்.ஏக்களில் 45 பேர் தனி கட்சியை அமைப்பதன் மூலம் பாஜகவை ஆதரிக்க தயாராக இருப்பதாகவும் பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ககாடே கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல், மாநிலத்தில் அரசாங்கம் அமைக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், "மராட்டிய மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நான் தான் முதல்வராக இருப்பேன் என்று தெளிவாக கூறியுள்ளார். புதிய அரசாங்கம் விரைவில் பதவியேற்க உள்ளது, அதுக்குறித்து இன்னும் அதிகாரபூர்வமாக முடிவு செய்யப்படவில்லை. 50-50 சூத்திரம் பற்றி ஒருபோதும் சிவசேனாவுடன் நாங்கள் விவாதிக்க வில்லை என்பதை தேவேந்திர பத்னாவிசு தெளிவுபடுத்தினார்.
மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. மாநிலத்தில் யார் தலைமையில் ஆட்சி அமையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அங்கு பாஜக - சிவசேனா கூட்டணி ஆட்சியா? பாஜக - தேசியவாத காங்கிரஸ் ஆட்சியா? அல்லது காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ஆட்சியா? என்று அடுத்த 24 மணி நேரத்தில் தெளிவாகி விடும் என்று வட்டாரங்கள் கூறுகின்றன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக