வெள்ளி, 1 நவம்பர், 2019

மகராஷ்டிரா ஆட்சி சிவசேனாவுக்கு ஏமாற்றம் ... பாஜக குதிரை பேரம்?

Shyamsundar - tamil.oneindia.com/n: சிவசேனாவிற்கு மகாராஷ்டிராவில் பாஜக கட்சி மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்க காத்துக் கொண்டு இருக்கிறது. 
சிவசேனாவிற்கு பாஜக முக்கியமான அமைச்சர் பதவிகளை ஒதுக்க வாய்ப்பில்லை என்று கூறுகிறார்கள். சிவசேனா ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. 
அங்கு ஆட்சி அமைக்க 146 இடங்கள் தேவை. மகாராஷ்டிராவில் பாஜக 104 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், ஆர்எச்எஸ்பி 1 இடத்திலும் வென்றது. மொத்தமாக பாஜக கூட்டணி 162 இடங்களில் வென்றது. 
காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 45 இடங்கள், தேசியவாத காங்கிரஸ் 53 இடங்கள், சமாஜ்வாதி இரண்டு இடங்கள் என்று மொத்தமாக 104 இடங்களை வென்றது. 
என்னதான் பெரும்பான்மை இடங்களில் பாஜக சிவசேனா கூட்டணி வெற்றிபெற்று இருந்தாலும் இன்னும் அவர்களால் கூட்டணி அமைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
சிவசேனா தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் என்று உறுதியாக இருப்பதால். 50/50 வேண்டும் கண்டிப்பாக கேட்டு வருவதால் அங்கு பாஜக ஆட்சி அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி சிவசேனா கட்சி இரண்டரை வருடங்களுக்கு கண்டிப்பாக முதல்வர் பதவி வேண்டும். ஆதித்யா தாக்கரேதான் முதல்வராக இருப்பார் என்று கூறிவிட்டது. பாஜக, என்னதான் நடந்தாலும் பட்நாவிஸ்தான் முதல்வர்.அதில் மாற்றம் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறது. 
இந்த நிலையில்தான் நவம்பர் 5 அல்லது 6ம் தேதி மகாராஷ்டிராவில் பாஜக முதல்வர் பதவி ஏற்பார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாஜக தீவிரமாக கவனித்து வருகிறது. ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சிவசேனா இறங்கி வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. 
இதெல்லாம் போக சிவசேனாவிற்கு பாஜக இன்னொரு வகையிலும் செக் வைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி சிவசேனாவிற்கு பாஜக 12 அமைச்சர் பதவிகளை கொடுக்க போகிறது. ஆனால் அந்த 12ம் முக்கியமான துறைகளாக இருக்காது. மிகவும் சிறிய துறைகள் மட்டுமே சிவசேனாவிற்கு கொடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். 
சிவசேனா தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வருவதால், பாஜக இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. சிவசேனாவை எப்படி வழிக்கு கொண்டு வார வேண்டும் என்று பாஜகவிற்கு தெரியும். அவர்கள் முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டார்கள். ஆனால் முக்கியமான அமைச்சர் பதவி கூட அந்த கட்சிக்கு கிடைக்காது என்று கூறுகிறார்கள்

கருத்துகள் இல்லை: