புதன், 30 அக்டோபர், 2019

ex நெல்லை மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் சீனியம்மாள், அவரது கணவர் கைது -

உமா மகேஸ்வரி
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி
முன்னாள் மேயர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் கைது - சிபிசிஐடி அதிரடி
சீனியம்மாள்
மாலைமலர் : நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், திமுக பிரமுகர் சீனியம்மாள் மற்றும் அவரது கணவரை இன்று கைது செய்தனர். சென்னை: நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் உமா மகேஸ்வரி (62). அவரது கணவர் முருகசங்கரன் (71). கடந்த ஜூலை 23-ம் தேதி இவர்கள் வீட்டில் இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். அப்போது வீட்டில் இருந்த மாரி என்ற பணிப்பெண்ணும் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதால் கொள்ளையர்கள் தான் கொலையை செய்திருக்கலாம் என்று முதலில் போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக 3 தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், அரசியல் போட்டி காரணமாக கூலிப்படையை ஏவி யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, உமா மகேஸ்வரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்களது விசாரணையில் சீனியம்மாள் மகன் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 


இந்நிலையில், நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி ஆகியோரை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: