மாலைமலர் :
டெல்லியில் பிரதமர் மோடியை இன்று சந்தித்த
ஐரோப்பிய ஒன்றியத்தின் 28.எம்.பிக்கள் அடங்கிய குழு காஷ்மீர் செல்வதை
அனுமதிக்கக் கூடாது என பாஜக எம்.பி சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்ல ஐரோப்பிய ஒன்றியத்தின் 28 எம்.பி.க்கள் அடங்கிய குழு இந்தியா வந்துள்ளது. இன்று காலை டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை இந்த குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, இந்த குழுவினர் நாளை ஜம்மு-காஷ்மீர் சென்று ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.
இந்நிலையில், இந்த குழுவினர் காஷ்மீர் செல்ல அனுமதிக்ககூடாது, அவர்கள் திட்டமிட்டுள்ள இந்த பயணத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என பாஜக எம்.பி சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சுப்பிரமணியசாமி கூறுகையில், ‘ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்கள் குழு காஷ்மீர் செல்வதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள தகவல் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் அங்கு செல்ல அனுமதிக்கக் கூடாது. அது நமது தேசிய கொள்கைக்கு முரணானது’, என தெரிவித்தார்.
இந்த குழுவினர் நாளை காஷ்மீர் செல்வதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது

இந்தியாவைச்
சேர்ந்த அரசியல் கட்சித்தலைவர்களை காஷ்மீர் செல்ல அனுமதிக்காத மத்திய
அரசு, ஐரோப்பிய ஒன்றிய எம்.பி.க்களை மட்டும் அனுமதிப்பது ஏன்? என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும்
கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த குழுவினர் நாளை காஷ்மீர் செல்வதற்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக