சனி, 7 செப்டம்பர், 2019

யார் இந்த சென்னை , உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விஜயாதஹில்ரமணி" ...!


இவர்தான் குஜராத்ல மோடி ஆசியோட ஆர்எஸ்எஸ்_விஹச்பி போன்ற பார்ப்பனிய காவி #பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட முஸ்லீம்களின் இன படுகொலையாளிகளுக்கு  தண்டனை வாங்கி தந்தவர்.
கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு தனது கண் முன்னாடியே கைக் குழந்தையையும் தனது மாமனார் மாமியார் உட்பட தனது குடும்பம் மொத்தமும் படுகொலை செய்யப்பட்டதை பார்க்கும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 
பல்கீஸ்பானு " வழக்கை குஜராத்தில் நேர்மையா விசாரிக்க மாட்டாங்கனு உண்மையை உணர்ந்து பாம்பேக்கு வழக்கை மாற்றி விசாரித்து.. 
பல கொலை மிரட்டலுக்கு அஞ்சாமல்.. ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல், காவி பயங்கரவாதிகளான "ஒருடாக்டர் ஒருபோலீஸ்_உட்பட 9மனிதமிருகங்களுக்கு_சட்டப்படியான தண்டனை வழங்கிய நீதிதேவதை..! 

 தினமலர் :புதுடில்லி : மேகாலயா கோர்ட்டிற்கு தன்னை மாற்றுவது குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் நிராகரித்ததை அடுத்து, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில்ரமணி, ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்திற்கும் அவர் அனுப்பி உள்ளார்.
2001 ம் ஆண்டு ஜூன் 26 ம் தேதி மும்பை ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் நீதிபதி தஹில்ரமணி. இவர் 2018 ம் ஆண்டு ஆகஸ்ட் 12 அன்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 25 ஆண் நீதிகள் உள்ள இடத்தில் தஹில்ரமணி மற்றும் கீதா மிட்டல் ஆகிய இருவர் மட்டும் பெண் தலைமை நீதிபதிகளாக உள்ளனர். 2020 ம் ஆண்டு அக்.,2 ம் தேதி தஹில்ரமணி ஓய்வு பெற உள்ளார்.

இந்நிலையில் இவரை மேகாலயா மாநில ஐகோர்ட்டிற்கு மாற்ற ஆக.,28 அன்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலீஜியம் முடிவு செய்தது. தஹில்ரமணியை மேகாலயாவிற்கும், மேகாலயா தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே.மிட்டலை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாகவும் மாற்ற கொலீஜியம் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நீதிபதிகள் என்வி ரமணா, எஸ்ஏ போப்தே, அருண் மிஸ்ரா, ஆர்எப் நாரிமன் ஆகியோர் பரிந்துரைத்தனர். அன்றைய தினமே தஹில்ரமணியை மேகாலயா ஐகோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் முடிவு எடுத்தது.
மேகாலயா ஐகோர்ட்டில் தற்போது 4 நீதிபதிகளும், சென்னை ஐகோர்ட்டில் 75 நீதிபதிகளும் உள்ளனர். தன்னை மேகாலயா ஐகோர்ட்டிற்கு மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கொலீஜியத்திற்கு தஹில்ரமணி வேண்டுகோள் விடுத்தார். அவரது கோரிக்கையை கொலீஜியம் ஏற்க மறுத்துவிட்டது.
இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி தஹில்ரமணி, ஒரு பக்க ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். அதில், தன்னை உடனே பணியில் இருந்து விடுவிக்கும்படி கேட்டுள்ளார். ஜனாதிபதி அந்த ராஜினாமா கடிதத்தை மேல்நடவடிக்கைக்காக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: