சுந்தர பாண்டியன் -
நக்கீரன் :புதுச்சேரியிலுள்ள
கடலூர்- சென்னை சாலைக்கும், காரைக்காலில் பணிகள் நடைபெற்று வரும் புறவழிச்சாலைக்கும், மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.
இது தொடர்பான கோப்பு பொதுப்பணித்துறை சார்பில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் இதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளதாக ஆளுநர் மாளிகையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதேபோல் புதுச்சேரியில் இந்திராகாந்தி சிலை முதல் ராஜீவ்காந்தி சிலை வரையிலான கடலூர்- சென்னை சாலைக்கு கருணாநிதி பெயர் சூட்டவும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி அளித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக