மின்னம்பலம் :
மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது. லொக்கேஷன் டெல்லி காட்டியது.
"“ப.சிதம்பரம் வ்ழக்கு மூலம் நீதிமன்றம் வித்தியாசமான வினோதங்களை சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ‘ இவரை விசாரிக்க வேண்டிய அளவு விசாரித்துவிட்டோம் இனி விசாரிக்க ஒன்றுமில்லை’ என்று சிபிஐயே நீதிமன்றத்தில் சொல்லிய பின்னரும், செப்டம்பர் 5 ஆம் தேதி வரை மீண்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிபிஐ கஸ்டடியில் இருக்கிறார் சிதம்பரம்.
சிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்படும் போதெல்லாம் காட்சிகள் சினிமாவை மிஞ்சுகின்றன. சிபிஐ சார்பில் ஆஜராகும் துஷார் மேத்தா ஏற்கனவே அமித் ஷாவுக்காக பல வழக்குகளில் ஆஜரானவர். அவர் அமித் ஷாவின் வழக்கறிஞர். அவர் நீதிமன்றத்துக்கு வரும் தோரணையே பலரையும் மிரளச் செய்வதாக இருக்கிறது. சிபிஐ நீதிமன்றத்தில் இருக்கும் சில தமிழர்கள், ‘ஜெயலலிதாவுக்கு ஜோதி போல இப்ப அமித் ஷாவுக்கு இருக்காரு’ என்கின்றனர். இந்த வழக்கின் இன்னொரு முக்கிய அங்கமான விசாரணை அதிகாரி பார்த்தசாரத்தி, அதுதான் 21 ஆம் தேதி இரவு சிதம்பரம் வீட்டு சுவரேறிக் குதித்த சிபிஐ அதிகாரி பார்த்தசாரதி ஊட்டிய பூர்விமாகக் கொண்ட பாரம்பரிய குடும்பத்துக் காரர்.
கடந்த சனிக்கிழமை சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட அழைத்துவரப்பட்டபோது சிதம்பரம் கூல் ஆகவே இருந்தார். தனது வழக்கறிஞர்களான அபிஷேக் சிங்வி, கபில் சிபல் ஆகியோரோடு சிறிய அந்த கோர்ட் ஹாலில் கஷ்டப்பட்டுதான் நுழைகிறார். கோர்ட் ஹாலுக்குள் வந்ததும் கபில் சிபலை அழைத்துக் காதோடு ஏதோ பேசுகிறார்.அந்த ஒவ்வொரு வார்த்தைகளும் சிதம்பரத்த்தின் வழக்கு குறித்த ஆலோசனைகள் என்கின்றனர்.
திடீரென ஒரு வெள்ளைப் பேப்பர் கொண்டுவரச் சொல்லி அந்த நெருக்கடியிலும் ஏதோ எழுதி அதை சிபலிடம் கொடுக்கிறார். அவரும் அதைப் பார்த்து, ‘கார்த்திகிட்ட கொடுத்துடறேன். எல்லாத்தையும் மேடத்துக்கிட்ட சொல்லிக்கிட்டுதான் இருக்கேன்’ என்கிறார். அதாவது சிபிஐ விசாரணை விவரங்களை சிதம்பரம் கபில் சிபலிடம் சொல்ல, அவர் அதை இன்னும் சில சட்ட விவரங்கள் சேர்த்து சோனியா காந்தியிடம் சொல்கிறார் என்கிறார்கள் அங்கிருந்த வழக்கறிஞர்கள்.
சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகும் நேரங்களில் சிதம்பரம், சிங்வி, சிபல் ஆகியோர் ஆலோசித்துக் கொண்டிருப்பதைப் பார்கும் சிபிஐ ஜூனியர் வழக்கறிஞர்களுக்கு வியர்த்துப் போய்விடுகிறது. ஏனெனில் மூவரும் எப்பேற்பட்ட வழக்கறிஞர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். கபில் சிபலிடம் தனது வழக்கு விவரங்களைப் பற்றி விசாரித்துவிட்டு சில முக்கியமான பொதுவான சட்ட விவரங்களையும் பகிர்ந்துகொள்கிறார் சிதம்பரம் என்கிறார்கள் மூத்த வழக்கறிஞர்கள்.
அதாவது, ‘குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றத்தை குற்றம் சாட்டியவர்தான் நிரூபிக்க வேண்டும் என்பதுதான் இந்தியாவின் இப்போதைய சட்ட , நீதி முறையாக இருக்கிறது. இதன் மூலம் குற்றத்தை நிரூபிக்க முடியாவிட்டால் அந்த சந்தேகத்தின் பலனை அடிப்படையாக வைத்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து விடுகிறது நீதிமன்றம். ஆனால் அமித் ஷா மெல்ல மெல்ல இதை மாற்றி பிரான்சில் இருப்பதைப் போல குற்றம் சாட்டப்பட்டவரே தன் மீதான குற்றத்தை இல்லையென்று நிரூபிக்க வேண்டும் என்ற மோசமான நிலையை கிரிமினல் கோடிலும், பீனல் கோடிலும் கொண்டுவர முயற்சிக்கிறார்’ என்று கபில் சிபலிடம் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார் சிதம்பரம்.
சிபிஐ தலைமை அலுவலகத்தில் சிதம்பரம் இப்போது தங்க வைக்கப்பட்டிருக்கும் இடம் என்பது சிபிஐயின் டெல்லிக்கு வெளியே இருக்கும் ஐஜிக்கள் அங்கே சென்றால் தங்குவதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு அறையில்தான் இப்போது சிதம்பரம் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். அங்கேயும் அவ்வபோது தன்னை சந்திக்கும் கபில் சிபலிடமும், சில நேரம் தன் மனைவி நள்னியிடம் கூட சட்ட ரீதியாகவே பேசிக் கொண்டிருக்கிறார் சிதம்பரம் என்கிறார்கள்.
அதாவது எந்த ஒரு வழக்கிலும் சிபிஐ ஒருவரை 15 நாளுக்கு மேல் கஸ்டடியில் எடுக்க முடியாது. மேலும் சிபிஐ கஸ்டடி மூலம் கிடைத்த ஒப்புதல் வாக்குமூலத்தை நீதிமன்றத்தில் ஆதாரமாக புரொட்யூஸ் பண்ண முடியாது. இந்திய சாட்சிய சட்டத்தின்படி கஸ்டடியில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்து வாங்கும் வாக்குமூலம் என்பது ஆதாரமாகவே கருத முடியாது. 1870 களில் ஆங்கிலேய சட்டப்படி கஸ்டடியில் இருக்கும் ஒருவர் கொடுக்கும் வாக்குமூலத்தில் புதிதான ஒரு தகவல் இருந்தாலே அதை ஆதாரமாக கருத முடியும் என்று ஒரு பிரிவு இருக்கிறது. ஆனால் இதையும் சட்டத்திலிருந்தே நீக்கவேண்டும் என்று 1987 லேயே கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஒருவர் வெளிப்படையாக எதிர்த்துக் குரல் கொடுத்திருக்கிறார். கஸ்டடியில் கண்ணில் மிளகாய் பொடியை தூவி என்ன வேண்டுமானாலும் எழுதி வாங்கிக் கொள்வதை எப்படி ஆதாரமாகக் கேட்க முடியும் என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நீதித்துறையில் பலர் கேள்வி கேட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திராணி வாக்குமூலம், இப்போது சிதம்பரத்திட்ம வாங்குகுற வாக்குமூலம் என்று வைத்துக் கொண்டு சிபிஐயால் எதையும் செய்ய முடியாது என்பதே இப்போதைய நிலவரம்.டெல்லி ஸ்பெஷல் போலீஸ் எஸ்டாப்லிஷ்மெண்ட் ஆக்ட் என்ற சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட சாதாரண போலீஸ் அமைப்புதான் சிபிஐ. தாங்கள் என்ன செய்கிறோம்னு தெரியாமலே அவஙக செஞ்சிக்கிட்டிருக்காஙக என்று சிரித்தபடியே கபில் சிபலிடமும் நளினியிடமும் சொல்லியிருக்கிறார் சிதம்பரம்.
மேலும் விசாரணை சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என்பதையும் சிபிஐக்கு எதிராகவே திருப்பியிருக்கிறார் சிதம்பரம். சிபிஐ இப்போதைக்கு கார்த்தியிடம் வைத்து விசாரித்த ஆவணங்களை விட ஒரு பேப்பர் கூட அதிகமாக பெற்றிருக்கவில்லை என்பது சிதம்பரத்துக்கு நன்றாகவே தெரிந்துவிட்டது. அதனால்தான் திகாருக்கு அனுப்பாமல் சிபிஐ கஸ்டடிக்கே அனுப்புமாறு மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்திருக்கிறார்.
மேலும் திகாரில் முன்பெல்லாம் பணம் கட்டியதற்கு ஏற்ப வகை வகையாக சாப்பாட்டு வகைகளுக்கு அனுமதி உண்டு. ஆனால் இதுவே கைதிகளுக்குள் பாரபட்சத்தை காட்டுவ்து போல இருப்பதால் அதை ரத்து செய்துவிட்டார்கள். அங்கே சென்றால் வீட்டு சாப்பாட்டுக்கு அனுமதி இருக்காது. ராசா, கனிமொழி ஆகியோர் சிறையில் இருந்தபோது வீட்டு சாப்பாடு குறித்து சிறை கண்காணிப்பாளர் முடிவெடுக்கலாம் என்று சிபிஐ நீதிபதி சைனி உத்தரவிட்டார். அப்போது காங்கிரஸ் ஆட்சி என்பதால் சிறை கண்காணிப்பாளர் ஒத்துழைத்தார். ஆனால் இப்போது சிதம்பரத்தை திகாரில் வைத்துப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிற அமித் ஷாவின் ஆட்சி. அதனால்தான் திகாருக்குள் செல்வதை இயன்றவரை தவிர்க்கிறார் சிதம்பரம்.
தவிர சிதம்பரத்தை பார்க்க தமிழக காங்கிரஸாரோ காங்கிரஸ் எம்பிக்களோ யாரும் போகவில்லை. திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார்தான் சென்று நீதிமன்றத்தில் பார்த்தார். ராஜீவ் 75 கொண்டாட்டத்துக்குப் போன கே.எஸ். அழகிரி ஒருமுறை போய் பார்த்தார். அவ்வளவுதான்.
இப்போது சிபிஐயிடம் சரக்கு ஏதும் இல்லை என்பதை முழுதாக தெரிந்துகொண்ட சிதம்பரம் சிதம்பரம் ஹெட் ஆபீசில் தன் மனைவி கொடுத்த கம்பராமாயணத்தை ரிலாக்ஸ் ஆக படித்து வருகிறார். போலீசார்தான் ஆவணங்கள் ஏதுமில்லாமல் அவஸ்தைப்பட்டு வருகின்றனர்.
செப்டம்பர் 5 ஆம் தேதி அமலாக்கப் பிரிவு கைதாமல் தடுப்பதற்கான கெடு முடிந்து வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதனால்தான் அன்றைக்கே அனைத்து வழக்குகளையும் ஒத்தி வைத்திருக்கிறார்கள். எனவே செப்டம்பர் 5 ஆம் தேதியை எதிர்பார்த்து ரிலாக்ஸ் ஆகக் காத்திருக்கிறார் சிதம்பரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக