செவ்வாய், 3 செப்டம்பர், 2019

சென்செக்ஸ் 800 புள்ளிகள் வீழ்ச்சி.. ஆட்டோமொபைல் துறையும் காலி ..ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி

தினமலர் :மூன்று நாள் தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று(செப்.,3) துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 403.87 புள்ளிகள் சரிந்து 36,928.92ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 124.85 புள்ளிகள் சரிந்து 10,898.40ஆகவும் வர்த்தகமாகின.
ஆட்டோமொபைல் உள்ளிட்ட நாட்டின் முக்கிய துறைகள் கடும் வீழ்ச்சி அடைந்து இருப்பதாலும், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் சரிந்து இருப்பதாலும் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தனர். மேலும் ரூபாயின் மதிப்பும் கடும் சரிவை சந்தித்ததால் இன்றைய வர்த்தகம் கடும் சரிவை சந்தித்தன.
வர்த்தகநேர முடிவில் சென்செக்ஸ் 769.88 புள்ளிகள் சரிந்து 36,562.91ஆகவும், நிப்டி 225.35 புள்ளிகள் சரிந்து 10,797.90ஆகவும் முடிந்தன.
> ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி பங்குச்சந்தைகள் போன்று இந்திய ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சி கண்டன. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ.72.09ஆக வர்த்தகமானது. தொடர்ந்து காலை 10.50மணியளவில் 83 காசுகள் சரிந்து ரூ.72.23ஆக வர்த்தகமானது. தொடர்ந்து மாலை 4 மணியளவில் 91 காசுகள் சரிந்து 72.31ஆக இருந்தது

கருத்துகள் இல்லை: