புதன், 4 செப்டம்பர், 2019

5 சதவீதம் தெரியுமா? : ஜிடிபி சரிவை கிண்டல் செய்த ப. சிதம்பரம்.. வீடியோ


tamil.indianexpress.com : நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சொன்ன கருத்து ஒன்று பெரிய அளவில் வைரலாகி... நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சொன்ன கருத்து ஒன்று பெரிய அளவில் வைரலாகி உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை அமலாக்கத்துறை கைது செய்ய செப்டம்பர் 5ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, செப்டம்பர் 5ம் தேதி வரை சிபிஐ காவலை நீட்டித்துள்ளது. ஒரு பக்கம் இந்த வழக்கு நடந்து வர, இன்னொரு பக்கம் சிபிஐ காவல் தொடர்பாக சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, மொத்தமாக தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணையும் செப்டம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லி சிபிஐ கோர்ட்டில் ப. சிதம்பரம் ஆஜர் ஆனார். அப்போது அவர் சில நொடிகள் செய்தியாளர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது

அப்போது செய்தியாளர்கள் வேகமாக அவரை சூழ்ந்து ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு குறித்து கேட்டனர். ஆனால் அந்த கேள்விகளை காதில் வாங்காத ப. சிதம்பரம், 5 சதவீதம் தெரியுமா? உங்களுக்கு 5 சதவீதம் என்றால் என்ன நியாபகம் வருகிறது? என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.
செய்தியாளர்களை பார்த்து உங்களுக்கு கடந்த காலாண்டின் ஜிடிபி என்னவென்று தெரியுமா? என்று கேட்டார். இதனால் அங்கு பெரிய அளவில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் அங்கிருந்து அவரை அழைத்து சென்றனர். கடந்த காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி மதிப்பும் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. 5 சதவீதம்என்ற மிக மோசமான நிலையை ஜிடிபி அடைந்தது. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து இறங்குமுகமாக சென்று கொண்டு இருக்கிறது. சிபிஐ காவலுக்கு இடையிலும் சிதம்பரம் இதை பற்றி பேசி இருப்பது மத்திய அரசை அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளது

கருத்துகள் இல்லை: