பாலிமார் : ென்னையில் 6 மெட்ரோ ரயில் நிலையங்கள் நாளை முதல் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், அண்ணா நகர் டவர், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 6 இரயில் நிலையங்களை நாளை முதல் தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நிர்வகிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 இரயில் நிலையங்களையும் காலை முதல் தனியார் ஒப்பந்த பணியார்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
நிரந்தர பணியாளர்களாக உள்ள நிலைய கட்டுப்பாட்டாளர்கள், அவர்களுக்கு வழி காட்டுவதுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முறையாக பயிற்சி பெறாத ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதால் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என நிரந்தர ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக