ஞாயிறு, 13 ஜனவரி, 2019

cctv கேமராக்கள் ஜெயலலிதா வீட்டிலும் அப்பலோவிலும் .. கொடநாட்டிலும் வேலைசெய்யவில்லை

Mansoor Mohammed : மர்மங்கள் நிறைந்த வாழ்க்கை ஜெயலலிதாவுடையது ..
சந்தியாவின் மகளாக திரை உலகில் நுழைந்தபோதே நிறைய சமரசங்களுக்கு உடன்பட்டார் ..சந்தியா திரையில் தான் அடையமுடியாத உயரத்தை அடையவேண்டுமென்பதற்காக நிறைய நிர்பந்தித்தார் .. தாயோடும் மகளோடும் கேடுகெட்ட மகோராவின் லீலைகள் அவரின் வாழ்வை மிக ரணமாக்கியது .. ஜெயலலிதா மிகவும் கொடுரமனபான்மைக்கு யாரையும் அடிபணிய வைக்கவேண்டுமென்று யாருக்கும் அடங்காத அதேவேளை யாரையும் சட்டை செய்யாது செயல்படும் நிலைக்கு ஆளானார் ..
திரைத்துறை புகழை நிலைநிறுத்த வேண்டி மகோராவோடு நடித்தபோதும் ஒரு குறிப்பிட்டகாலத்திற்கு பிறகு நடிகர்களோடான உறவு .. அது எம்ஜிஆரின் கோபத்திற்கு ஆளாகி நிறைய இழந்து பாதிப்புக்குள்ளாகி ரணமாய் போனார் .. தாயின் பேராசையும் தன்னை உயர்த்திவிட்டவர்களின் கோரபிடியும் ஜெயா வாழ்வை சீரழித்தது .. தான்தோன்றியாய், எடுத்தேன் கவிழ்த்தேன் என்று .. யாரையும் மதிக்காத தானென்ற ஆணவத்தை தன்னோடு வளர்த்துக்கொண்டார் ... அவரே குமுதத்திற்கு தந்த நேர்காணலில் தூய அன்பை நட்பை நான் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை உணர்ந்ததே இல்லை என்றார் தாய் உட்பட தன் உறவுகள் என் காசின் (பொருள்)மீதே குறியாக இருந்தனர் என்றார் .. ஒரு மனுஷியாய் மிக மோசமான தாக்குதல்களும் அவரை பயன்படுத்தியவர்களின் நோக்கமும் தான் எதிர்பார்த்த விரும்பிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்ற வெறுமை அவரை தனிமைப்படுத்தியது அவருக்குள்ளேயே சுவர் எழுப்பி தன்னை தனிமைபடுத்திக்கொண்டார் ..

..
ஒருகட்டத்தில் எம்ஜிஆரோடு (மகோரா) மீண்டும் இணங்க அந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசியலுக்கு வந்தவர்.. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள தெரியாமல்தான் இருந்தார் .. ஆனால் அவரின் உதவியாளராய் பணியாளாய் வந்த சசிகலா அவரை வழிநடத்தும் சூட்சமம் அறிந்திருந்தார் .. அப்போது முதல் எடுப்பார் கைப்பிள்ளையானார்
சசிகலா கும்பல் நிறைய தவறுகள் செய்த போதும் வேறு வழியின்றி பொறுத்துக்கொண்டவர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கட்டுபடுத்த முடியாமல் போனார் என்பதுதான் சசிகலாவின் கை ஓங்க காரணமானது இன்றைக்கு எதிர்க்கிற ஆதரிக்கிற கும்பல்கள் சசிகலாவின் குரலுக்கு அடிபணிந்தவர்கள் தான் .. சசியின் விரலசைவிற்கு காத்துகிடந்தவர்கள் ..
..
கொடநாடு மர்மங்கள் மெல்ல வெளிவர தொடங்கியிருக்கிறது கொலைகள் கொள்ளைகள் என தொடர்ந்து உண்மையின் வெளிச்சம் வருகிறது .. முதல்வர் மீது சந்தேகத்தின் விரல் நிள்கிறது .. கொடநாட்டிலிருந்து கோடிக்கணிக்கில் பணம் கொள்ளையடிக்கபட்டிருப்பதாக தெகல்ஹா மாத்யூ வெளிப்படையாகவே புலனாய்வு செய்த அறிக்கையை தருகிறார் வழக்கு தொடர்ந்தால் எடப்பாடி மீதான குற்றத்தை நிரூபிப்பேன் என்கிறார் ..ஜெயலலிதா மரணத்தையும் சந்தேக வளையத்தில் கொண்டுவருகிறார் ..
மாநிலத்தின் மீதான குற்றசாட்டு அதுவும் கொலை கொள்ளை என்று கிரிமினல் வழக்குபதிவு செய்யதக்கவகையில் இருப்பதை மத்தியில் ஆளும் பாஜக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் கூட்டணி பேரம் சொல்வதை கேட்கவைக்க முயற்சிக்குமெனபடுகிறது.. முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களை சந்தித்து பதில் சொன்னாலும் சந்தேக நிழல் தொடர்ந்தே வரும் .. ஜெயலலிதா எனும் சர்வாதிகாரத்தில் அடிமையாய் வலம்வந்தவர்கள் வாய்ப்பை தந்தபோதெல்லாம் கொள்ளையடித்தார்கள் .. ஜெயலலிதாவின் உடல்நலிவுற்றிருந்தபோதும் மரணத்திற்கு பிறகு கூட சந்தேகங்களும் மர்மங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன.. மறைவை அடுத்து பதவி ஆசை வந்து பன்னீரை விடுவித்தவுடன் ..சசிகலா பாசிசத்தின் பற்களில் சிக்கியதும் .. தேடிவந்த வாய்ப்பை எடப்பாடி சரியாக பயன்படுத்தி மோடியின் விசுவாசியாய் நின்றார் .. எங்கே கூட இருப்பவர்களால் ஆபத்து வந்துவிடுமோ என அஞ்சி .. அவர் நடத்தியவைகள் இன்று எதிராய் நிற்கிறது .. மோடி காப்பாரென்ற நம்பிக்கையில்
எடப்பாடி தெம்பாக இருக்கலாம் கேட்பதை கொடுத்து தற்காலிக தீர்வை எட்டலாம் ..
தளபதி. ஸ்டாலின் சொன்னதைப்போல திமுக ஆட்சிக்கு வந்தவுடன் .. ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்களின் முடிச்சு அவிழ்க்கபடும் .. கொடநாடும் கொலைகளும் அப்போது வெளிச்சத்திற்கு வரும் ...அதுவரை மர்மங்கள் நிறைந்த கதையாய் தொடரும்..
..
மாநில முதல்வர் மீதான குற்றத்தை விசாரிக்கும் அமைப்பு முதல்வரின் இலாக்காவாக இருப்பது நம்பகதன்மையை இழக்குமென்கிற ஆ.ராசாவின் வாதம் ஏற்புடையது .. திமுக தலைவர் சொல்வதைப்போல சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் அதுவரை முதல்வர் பதவி விலகுவதே நேர்மையான விசாரணை நடக்கிறதென்ற நம்பிக்கையை விதைக்கும் .. cctv கேமராக்கள் ஜெயலலிதா வீட்ிலும் அப்பலோவிலும் .. கொடநாட்டிலும் வேலைசெய்யவில்லை என்பதலிருந்தே ஏதோ நடந்திருக்கிறது என்பது புலனாகிறது காத்திருப்போம் உண்மை வெளிவந்தே தீரும்
..
ஆலஞ்சியார்

கருத்துகள் இல்லை: