வியாழன், 17 ஜனவரி, 2019

கண்ணகி என்னும் போராளி!

Devi Somasundaram : சிலப்பதிகாரம் குப்பையா ?
கண்டவ வீட்டுக்கு போனவனுகாக போராடினா இது பாராட்ட எ
ன்ன இருக்குன்னு ஒரு விவாதம்..
கண்ணகி கற்புகரசின்னு சொல்வதில் எனக்கும் உடன்பாடில்லை...அதை விட்டு விடுவோம்,.
கோவலன் வேறு பெண்ணை தேடி போனது தனி நபர் உரிமை என்ற வகையில் அதில் விமர்சிக்க எதுவுமில்லை... மாதவி உடன்பட்டாள் கோவலன் போனான்..செக்‌ஷன் 497 படி அடல்ட்ரி குற்ற மில்லை.
சரி அப்படி போன போது கண்ணகிய வீட்டுகுல்ல வச்சு பூட்டிகிட்டு போனானா ? ..இல்லை .கண்ணகி தனக்கான இணையை தேட அவளுக்கு எந்த தடையும் விதிக்க படவில்லை...
அவளிடம் இருந்த பொன், பொருள் எடுத்துட்டு ஓடிடல .. அவள் விருப்ப படலை ..யாரையும் தேட வில்லை.
திரும்பி வந்த கோவலன் இவ்லோ நாள் தனியா இருந்தியே நீ எவன் கிட்டியும் போகல உத்தமின்னு தீக்குளிச்சு நிருபின்னு கோவலன் கேக்கல. .
நகை , பணம்லாம் இல்லியே .எவன் கிட்ட குடுத்துட்டு போனன்னு
எந்த விசாரணையும் இல்லாம அவள ஏத்துகிறான்... . இதில் எந்த ஆணாதிக்கம் இருக்கு.. ...

கணவன் ஒருத்தி கூட போய்ட்டா மனைவி இன்னொருத்தன் கூட போயே ஆகனும் அப்ப தான் முற்போக்குன்னு அடம் பிடிக்கற முற்போக்க என்ன செய்வது..
இப்டி வேணா வச்சுக்கலாம்... ஒரு வேளை கண்ணகி எவன் கூடவாச்சும் போய் இருந்து கோவலன் தனியா இருந்திருந்தா பாராட்ட போறமா ... 96 ல விஜ்ய் சேதுபதி வர்ஜின்ன்னு சொல்ல பட்டதுக்கு கேலி செய்த சம்முவம் தான..? ..
இவர்கள் ப்ரச்சனை ஆணுக்கு பெண் கிடைத்து கொண்டே இருக்கனும்...அதற்கு எதோ ஒரு காரணம்... அடிமை தனம் அல்லது முற்போக்கு.. பெண் என்னவா இருக்கனும்னு அவளே எடுக்கும் எல்லா முடிவும் விமர்சிக்க பட்டு கொண்டே தான் இருக்கும்...அது தனியா இருக்க நினைத்த கண்ணகியோ மாதவியோ, இன்னொருத்தன் கூட
போன அபிராமியோ ( பிஞ்சு குழந்தை என்றும் பாராமல்னு ஸ்கிரின் ஷாட் போராளிகள் பொங்க வைக்கலாம் ..டெய்லி கொலைய ஆதரிச்சு அரிவாளோட யார் வெட்லாம்னு தான் சுத்திட்டு தான் இருக்கேன் 😎 ) .
.பெண்களுக்கான முடிவை ஆண் எடுப்பது தான் முற்போக்கு என்ற அடிமை தனம் பெண்ணிடமே இருக்கும் வரை கண்ணகியும் விமர்சிக்க படுவாள் , அபிராமியும் விமர்சிக்க படுவாள் .
.
தனக்கு பிடித்ததை செய்வதில் விமர்சிக்க எதுவுமில்லை .
தன் உரிமைகாக ஆளும் அரசை எந்த பாதுகாப்பும் இல்லாத நிலையில் ஒற்றை மனுஷியாய் எதிர்த்து நின்ற அவள் துணிச்சல் இன உரிமையான காவேரி, நீட்,
எகனாமிக்கல் ரிஸ்ர்வேஷன் க்கு கூட போராடாமல் வீட்டுகுள் பம்மியவர்களுக்கு அபத்தமாய் தான் தெரியும்...
ஊரையே அழிக்க அவளுக்கு என்ன உரிமைன்னு ஒரு வாதம் வரும்... திருட்டு மட்டும் தவறில்லை...திருட்டை வேடிக்கை பார்ப்பதும் குற்றம் தான் ... தன் அரசனின் தவறை வேடிக்கை பார்த்த மக்களும் குற்றவாளிகள் தான். ..அவர்களும் தண்டிக்க பட்டே ஆகனும்..

கற்புகரசி கண்ணகி என்று கொண்டாடுவது ஒரு அதீதம் என்றால் .சிலப்பதிகாரம் குப்பை என்பது இன்னொரு அதீதம்....
கண்ணகி தன் வாழ்க்கை தன் விருப்படி வாழ்ந்தவள் .தன் உரிமைகாக மிக பெரிய எதிரியை தன்னந்தனியாக எதிர்த்து நின்றவள் என்ற வகையில் என் வழிகாட்டி..
#தேவி .

கருத்துகள் இல்லை: