திங்கள், 14 ஜனவரி, 2019

நாடு போற்றிய நன்னெறியாளர்களை தந்த தமிழகம் .. இன்று கழிசடைகளின் கையில்

ஆலஞ்சியார் : கலைஞர்.. ஜெயலலிதா ..
கலைஞர் மறைந்தார் தமிழகமே எழுந்துநின்று கைகூப்பியது .. இன்றுவரை அவரின் புகழ்பாடபடுகிறது .. ஒவ்வொருதுறையினரும் தாங்கள் அடைந்த பயன் .. அந்த துறையால் சமூகம் கண்ட பலன் என பெருமையோடு நினைவுகூர்கிறார்கள் பல்வேறு துறையின் ஆளுமைகள் இவரை போற்றுகிறார்கள் வாழ்ந்த காலத்தில் வசைமொழியால் இம்சித்தவர்கள் கூட இயல்பான தலைவன் .. இதுவரை இப்படியொரு தலைவனை நாடு கண்டதில்லை என்கிறார்கள் .. மருத்துவர்கள் ஆசிரியர்கள் அறிவியலாளர்கள் கல்வியாளர்கள் என இந்த சமூகத்தின்பால் அக்கறையுள்ளவர்கள் .. இவரின் வாழ்வு வருங்காலத்தினருக்கு பாடமாய் அமைய வேண்டுமென்கிறார்கள் .. எத்தனை வலிகள் விமர்சனங்கள் குற்றசாட்டுகள் ஊடகங்களின் தொடர் தாக்குதல்கள் என அத்தனையும் ஏற்று புன்முறுவலோடு "அறம்வெல்லும்" என நம்பிக்கையோடு வாழ்ந்த மேதை .. அவரின் திட்டங்களை கண்டு பயன்பெற்றவரும் கேலிபேசிவரும் இப்போது எவ்வளவு சரியாக யோசித்திருக்கிறாரென மகிழ்கிறார்கள் .. இப்படியொரு தலைவனை தாம் தவறான செய்திகளால் வேண்டாமென வைத்தோம் என வெட்கபடுகிறார்கள் .. எல்லாம் வெளிப்படையாக வாழ்ந்த மனிதர் ... அரசு அதிகாரத்தில் இருந்த போதும் எவரும் சந்திக்கலாமென்ற இயல்பை கொண்டவர் எதற்கும் அஞ்சாத நேர்நடை கொண்ட பெருமகன் ..
ஜெயலலிதா வாழ்ந்த போதும் மறைந்த பிறகும் வசவுகளால் வேட்டையாடபடுகிறார் .. ஒரு நல்ல தலைவராக அவரால் ஜொலிக்கமுடியவில்லை குற்றசாட்டுக்கள் நிரூபணமாகி முதல்வராக இருந்த போதே தண்டனை பெற்ற முதல்நபர் ஆட்சி அதிகாரத்தை தன் சுயநல தன்னை சார்ந்தோரின் நலனுக்காக மாற்றியமைத்தவர்
எதிர்போரை வழக்கு விசாரணை என்று மிரட்டியவர் கருத்து சுதந்திரத்தை தர மறுத்து ஒருவித கோழையைப்போல நடுங்கியவர் .. வழக்கை கண்டு அஞ்சி 18 ஆண்டுகாலம் இழுத்தடித்து கடைசியில் தோற்றுப்போனார் .. தன் கட்சியினரை கூட அறிவார்ந்தவர்களாக நடத்த தெரியவில்லை அமைச்சர்கள் ஒவ்வொருவரின் பேச்சை கேட்கிற போது என்னமாதிரி தொண்டர்களை ஒருவாக்கியிருக்கிறார் என்று வியப்பாக இருக்கிறது முட்டாள்களை மட்டுமே,தேர்வு செய்து தன்னோடு வைத்திருந்திருக்கிறார் .. கொலை கொள்ளை என அமைச்சர்கள் தனி ராஜ்யமே நடத்தியிருக்கிறார்கள்.. கொள்ளையடிப்பதையே குறிக்கோளாய் கொண்டவர்கள் இன்று கொலைப்பழி சுமந்து நிற்கிறார்கள் .. விதைத்ததெல்லாம் வீண் என்பதைப்போல மொத்தமும் நாசமாய் போகிறது .. ஒரு கட்சி ஏறக்குறைய 30 வருடங்கள் அதிகாரத்தில் இருந்த கட்சியை தமிழகத்தில் முகவரியே இல்லாத கட்சி பயமுறுத்துகிறது .. அடிமைகளைப் போல தலையாட்டுகிறார்கள் ..
..
தமிழகம் மிக கொடுமையான ஆட்சியாளர்களின் கையில் சிக்கி சீரழிகிறது ..
நல்ல தலைவர்களை தந்த தமிழகம் இன்று நெறிகெட்டவர்கள் கையில் .. எதையும் வாங்கிவிடலாம் என்ற நிலை... எதற்கும் ஒரு விலை என்கிற மனபான்மை .. விற்க தயாராகிய மக்களின் மனநிலை பேரழிவை சந்தித்திருக்கிறது .. நாடு போற்றிய நன்னெறியாளர்களை தந்த தமிழகம் .. இன்று கழிசடைகளின் கையில் .. இதற்கெல்லாம் காரணம் ஜெயலலிதா அம்மையார் ..
இன்னும் அசிங்கபடவேண்டியிருக்கும்.. இவர்களை அரசியலில் இருந்து அப்புறபடுத்துகிறவரை..
..

கருத்துகள் இல்லை: