செவ்வாய், 15 ஜனவரி, 2019

கோடநாடு சம்பவத்தில் எனக்கு தொடர்பில்லை: வீடியோ வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை என முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை

tamilthehindu : கோடநாடு சம்பவத்தில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இதில் என்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்டவர் கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி எச்சரித் துள்ளார். குறுக்கு வழியில் இந்த ஆட்சியை யாரும் கவிழ்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், டெல்லி யில் நேற்று முன்தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை, அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் முதல்வர் பழனி சாமியை தொடர்புபடுத்தி அந்த வீடியோ வில் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. இதை முதல்வர் பழனிசாமி மறுத் துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத் தில் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி நேற்று கூறியதாவது:
அதிமுக அரசு எந்த திட்டத்தையும் தமிழகத்தில் கொண்டுவரக் கூடாது என்ற அடிப்படையில் தொடர்ந்து வழக்கு தொடுப்பதுதான் திமுகவின் வேலை யாக உள்ளது. 2 ஒன்றியங்களுக்கு ஒரு துணை ஆட்சியரை நியமித்துள்ளோம். அவர்கள் அங்குள்ள பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை நிறைவேற்றி வருகின்றனர். ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோது கிராமங்களுக்கு செல்லா மல் இப்போது கிராம சபை கூட்டங் களை நடத்துகிறார். இதெல்லாம் அரசிய லுக்காக போடும் நாடகம். நான் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கூறுகிறார். மக்களை சந்தித்து, மக்கள் வாக்களித்து வெற்றி பெற்றால் அவர்களை யாரும் தடுக்க மாட்டோம். ஆனால், குறுக்கு வழியை கையாண்டு இந்த அரசை எந்தக் காரணத்தைக் கொண்டும் கவிழ்க்க முடியாது.
கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி நடந்த ஒரு சம்பவத்தில் என்னை தொடர்புபடுத்தி தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் வெளி யிட்ட செய்தி, முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்தச் செய்திகளை வெளி யிட்டவர்கள், அதற்கு பின்புலமாக இருந் தவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு, அவர்கள் மீது கடுமையான நட வடிக்கை எடுக்கப்படும். இது தொடர் பாக காவல் துறையில் புகார் அளிக் கப்பட்டு வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது, காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
கோடநாடு எஸ்டேட்டில் நடந்த சம்பவத்தில், குற்றவாளிகள் 10 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்த குற்ற வாளிகள் இதுவரை, 22 முறை நீதிமன் றத்துக்கு சென்று வந்துள்ளனர். நீதிமன் றத்தில் எதுவும் சொல்லாமல், தற்போது புதிதாக ஒரு செய்தியைச் சொல்லி வழக்கை திசை திருப்பப் பார்க்கின்ற னர். வரும் பிப்.2-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது. இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது விரைவில் கண்டறியப்படும்.
அதுமட்டுமின்றி, இந்த குற்றவாளி கள் மீது ஏற்கெனவே போக்சோ, ஆள் மாறாட்டம், சீட்டிங் செய்தல், திருட்டு, கூலிப்படை என பல்வேறு வழக்குகள் உள்ளன. கட்சி நிர்வாகிகளிடம் ஆவணங் களை பெற்று, கோடநாட்டில் ஜெய லலிதா வைத்துள்ளதாகவும், அதை எடுப் பதற்காக இவர்கள் சென்றதாகவும் அந்த வீடியோ செய்தியில் கூறப்பட்டுள்ளது. நிர்வாகிகள் யாரிடமும் எந்த ஆவ ணத்தையும் ஜெயலலிதா பெற்ற தில்லை. ஜெயலலிதாவை பொறுத்த வரை கட்சி நிர்வாகிகளை தனது குடும்ப உறுப்பினராக பாவிக்கக் கூடியவர். கட்சியினரிடம் அன்பாக பழகக்கூடியவர். அவர்களுக்குத் தேவை யான பதவிகளை வழங்கி அழகு பார்ப் பார். அவர் மீது களங்கம் கற்பித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
தெகல்கா வீடியோ விவகாரத்தில் திமுக தலைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படுமா?
தற்போது விசாரணை நடந்து வரு கிறது. யார், யார் பின்னணியில் இருக் கிறார்கள் என்பது விசாரணையில் தெரி யும். ஸ்டாலினைபோல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. குற்றச்சாட்டு சொல்லியிருக் கிறார். அதுகுறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணையில்தான் உண்மை தெரியும், அப்போதுதான் நடவடிக்கை எடுக்க முடியும்.
அவதூறு வழக்கு தொடர வாய்ப்பு இருக்கிறதா?
இந்த வீடியோ தொடர்பாக நேற்று இரவே வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. யார் எல்லாம் பின்புலமாக இருந்தார்கள், உண்மைக்கு மாறான செய்திகளை எதற்காக சொன்னார்கள் என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியும். நேரடியாக அரசியலில் எங்களை எதிர்கொள்ள முடியாதவர்கள்தான் இப்படிப்பட்ட கோழைத்தனமான, குறுக்கு வழியை கையாள்கின்றனர்.
முதல்வராக இருக்கும் உங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பின்புலமாக மிகப் பெரிய அரசியல் இருக்கிறதா அல்லது முழுமையான காழ்ப்புணர்ச்சியா?
இதில் அரசியல் பின்புலம் உள்ளது என்று கருதுகிறேன். அதற்குத்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். உண்மை வெளிச்சத்துக்கு வரும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் மரணம் குறித்து விசாரணை நடந்துவரும் நிலையில், தற்போது கோடநாடு விவகாரம் எழுந்துள்ளதே?
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தபோதே, கொள்ளை திட்டம் தீட்டி யிருப்பதாக அவர்களது வீடியோ செய்தி யில் இருந்து தெரிகிறது. இதையெல் லாம் முழுமையாக விசாரித்தால்தான் உண்மை வெளிவரும்.
இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தினகரன் கூறுகிறாரே?
அது அவருடைய கருத்து. ஏற் கெனவே, மாவட்ட எஸ்.பி. முரளி ரம்பா வால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொண்டு, நீதிமன்றத் துக்கு போயிருக்கிறது. குற்றம்சாட்டப் பட்டவர்கள், 22 முறை நீதிமன்றத்துக்கு சென்று ஆஜர் ஆகியுள்ளனர், அப்போ தெல்லாம் ஏன் இதைச் சொல்லவில்லை?
அதிமுக அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் சில பேர், இந்த இயக்கத்தின் மீதும் ஆட்சி மீதும் களங்கம் கற்பிக்கும் விதமாக செயல்படுகிறார்களா என்பதெல்லாம் விசாரணையில்தான் தெரியவரும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். பேட்டியின்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துகள் இல்லை: