வெள்ளி, 18 ஜனவரி, 2019

எடப்பாடி மீது கொலை குற்றச்சாட்டு ! முதலில் ஜெயலலிதா அறையை உடைத்தோம்” - கனகராஜ்... 2 மணி நேரம் 20 நிமிடங்கள் பங்களாவுக்குள் இருந்தோம் .. வாக்குமூலம்

டிஜிட்டல் திண்ணை: “முதலில் ஜெயலலிதா அறையை உடைத்தோம்” - கொடநாட்டில் நடந்த விவரம்!
மின்னம்பலம் : கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி மீது கொலை குற்றச்சாட்டுகள் முன்வைத்த சயனும், மனோஜும் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். நேற்று இரவு வரை அவர்கள் இருவரும் கேரளாவில்தான் இருந்தார்கள். தெகல்கா மேத்யூ வழிகாட்டலில்தான் அவர்கள் இருவரும் இயங்குகிறார்கள்.
இறந்துபோன கனகராஜுக்கு அடுத்தபடியாக கொடநாடு எஸ்டேட்டில் என்ன இருந்தது என்பதை முழுமையாக தெரிந்த ஒரே நபர் சயன் தான். ஜெயலலிதா அறை, சசிகலா அறை என ஒவ்வொன்றுக்கும் கனகராஜுடன் போனது சயன் தான். கனகராஜும், சயனும் முதலில் ஜெயலலிதா அறையைத்தான் உடைத்து உள்ளே போனார்களாம். அங்கேதான் என்ன டாக்குமெண்ட்களை எடுக்க வேண்டும் என்பதை யாருடனோ போனில் பேசியபடியேதான் பைக்குள் எடுத்து வைத்திருக்கிறார் கனகராஜ். அதேபோல கொடநாட்டுக்குள் நுழையும் போதே ஒட்டுமொத்தமாக அந்த பகுதிக்கே மின்சார இணைப்பை துண்டிக்க சொல்லி கனகராஜ் யாருக்கோ உத்தரவிட, சில நிமிடங்களில் பவர் கட் ஆகி இருக்கிறது. கொடநாடு பங்களாவில் முழுக்கவே டார்ச் லைட்டை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார் கனகராஜ். அதுவும் லைட் அடித்து ஒவ்வொரு டாக்குமெண்ட்டையும் புரட்டிப் பார்த்துதான் பையில் வைத்திருக்கிறார்.
'நாம எதை எடுக்க வந்தோமோ அதை மட்டும்தான் எடுக்கணும். தேவை இல்லாமல் வேற பொருள் மேல கை வைக்காதீங்க...' என அந்த இருட்டிலும் அட்வைஸ் செய்திருக்கிறார் கனகராஜ்.
சரியாக 2 மணி நேரம் 20 நிமிடங்கள் கொடநாடு பங்களாவுக்குள் இருந்திருக்கிறது அந்த டீம். கையோடு கொண்டு போன பைக்குள் டாக்குமெண்ட்களை நிரப்பிக் கொண்டு கிளம்பியிருக்கிறார்கள்.
ஒரு டீம் கோவைக்கும் இன்னொரு டீம் சேலத்துக்கும் பிரிந்துவிட்டார்கள். சேலம் டீமில்தான் சயனும் கனகராஜும் இருந்திருக்கிறார்கள். சேலத்துக்கு போன டீம் கையில்தான் கொடநாட்டில் எடுத்த டாக்குமெண்ட்கள் எல்லாம் இருந்ததாம்.

'நான் எல்லாத்தையும் அண்ணன்கிட்ட சொல்லிட்டேன். நீயும் வந்திருக்கேன்னு சொன்னேன். இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொல்லிட்டாரு. இது வெளியே தெரிஞ்சா பிரச்சினை ஆகிடும்னு அவரு பயப்படுறாரு..' என்று அப்போது கனகராஜே சயனிடம் சொன்னாராம். கனகராஜிடம் சயனின் நம்பரையும் அப்போது டாக்குமெண்ட்டை வாங்கியவர் கேட்டு வாங்கிக் கொண்டாராம். அதை வைத்துதான் சயனையும் கனகராஜையும் பின் தொடர்ந்து வந்ததாக சொல்கிறார்கள்.
கனகராஜ் விபத்துக்குள்ளானது அந்த நேரத்தில் சயனுக்கு தெரியாதாம். காரணம், சயனும் கனகராஜும் எந்தக் காரணத்துக்காகவும் இரண்டு மாதங்கள் போனில் பேசக் கூடாது எனவும் உத்தரவு வந்திருந்ததாக சொல்கிறார்கள். அதனால் கனகராஜ் விபத்தில் சிக்கியது, இறந்தது எதுவும் சயனுக்கு தெரியவில்லை. அதற்குள் சயனும் விபத்தில் சிக்கிவிட்டாராம்.
'கொடநாட்டில் டாக்குமெண்ட் மட்டும்தான் எடுக்க சொன்னேன். வாட்ச்மேனை கொலை செஞ்சதாலதான் இவ்வளவு சிக்கலும் வந்துச்சு. ஒரு வேலையை எப்படி செய்ய சொன்னேனோ அப்படி செய்யணும். இப்படியா சொதப்பி என்னையும் சிக்க வைப்பீங்க...உங்களுக்கு இது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் விஷயம் வெளியே லீக் ஆனால் என்ன ஆகும் தெரியுமா?' என அவர் அந்த சமயத்தில் பேசியதையும் சயனிடம் சொல்லி இருக்கிறார் கனகராஜ்.
அவரைப் பற்றி வெளியே சொன்னால் எதுவும் நடக்காது என்பதால்தான் நண்பர்கள் சிலர் உதவியுடன் மேத்யூவை சந்தித்து இருக்கிறார். மேத்யூ மூலமாக எல்லாவற்றையும் வெளியே கொண்டு வந்திருக்கிறார் சயன்." என்று முடிந்த மெசேஜ்க்கு

கருத்துகள் இல்லை: