சனி, 19 ஜனவரி, 2019

மோடி அரசுக்கு ஆப்பு ! ரஃபேல் விமானங்களின் விலையை வெளியிட்ட பிரான்சு அரசு !

வினவு :ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் எந்தவித முறைகேடும்
நடக்கவில்லை என்கிற பொய்யை மீண்டும் மீண்டும் வெவ்வேறு விதங்களில் சொல்லி வருகிறது மோடி அரசு. 36 ரஃபேல் ரக விமானங்கள் அதிக விலை கொடுத்து ஏன் வாங்கப்பட்டது என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க முடியாத மோடி அரசு, பாதுகாப்பு காரணங்களால் விலை குறித்து பேச முடியாது என மழுப்பியது. இந்நிலையில், பிரெஞ்சு பத்திரிகை ஒன்று ரஃபேல் விமானங்கள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்பது குறித்த ஆதாரப்பூர்வமான செய்தியை வெளியிட்டுள்ளது.
ரஃபேல் விமானங்கள் வாங்க மோடி அரசு ஒப்பந்தம் போட்டிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் குழுமத்தைச் சேர்ந்த ’Le Figaro’ என்ற நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், பிரெஞ்சு அரசு கிட்டத்தட்ட 2 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான 28 ரஃபேல் ரக போர் விமானங்களை  டசாஸ்ட் ஏவிவேஷன் நிறுவனத்திடம் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளதாக சொல்லப்பட்டிருக்கிறது.

36 ரஃபேல் ரக விமானங்களை 7.87 பில்லியன் யூரோ (இந்திய மதிப்பில் ரூ. 64 ஆயிரம் கோடி)க்களுக்கு வாங்க பிரதமர் மோடி தன்னிச்சையாக அறிவித்து, பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்தார்.  36 விமானங்களின் விலை அதிகமாக உள்ளது குறித்து கேள்வி எழுந்த நிலையில், உண்மையான விலை விவரங்களை வெளியிட மோடி அரசு மறுத்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்ற காரணம் கூறி, விலை விவரங்களை வெளியிட மறுத்து வந்தது அரசு.

அதுகுறித்து ஒப்பந்தத்திலேயே சொல்லப்பட்டிருப்பதாகவும் புளுகியது. ஆனால், விலை விவரங்கள் ரகசியமாக இருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்படவில்லை. எதிர்ப்புகள் தொடர்ந்து கிளம்பியதை அடுத்து, கடந்த மார்ச் 12-ஆம் தேதி நாடாளுமன்றத்தில், அடிப்படையான போர் விமானத்தின் விலை ரூ. 670 கோடி எனவும் மீதமுள்ள ரூ. 1000 கோடி போர் விமானத்தில் சேர்க்கப்பட்ட ஆயுதங்கள் போன்றவற்றுக்கு என்றும் மோடி அரசு சொன்னது.
ஆனால், பிரான்ஸிலிருந்து வரும் தகவல்களின் அடிப்படையில் பிரான்சு அரசு 2 பில்லியன் யூரோ மதிப்பிலான 28 ரஃபேல் எஃப் 4 ரக விமானங்களை வாங்க டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது தெரியவந்துள்ளது.  இவை 2024-ம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் எனவும் தகவலில் தெரியவருகிறது.  மோடி அரசு சொன்ன விலை இதைவிட 41% அதிகம் என்பது இந்த தகவலின் மூலம் உறுதியாகிறது.
modi-ambani-rafale-jet-scamஅதே வேளையில், எஃப் 3ஆர் ரக விமானங்களை வாங்கி அதில் இந்தியாவில் மேற்கொண்டு (அதாவது ரிலையன்ஸ் நிறுவனம்) சிறப்பு மாற்றங்களை செய்யப் போவதாக அதிக விலை கொடுத்து விமானங்களை வாங்குவதற்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகிறது மோடி அரசு.  பிரான்சு அரசின் ஆயுதப் படை அமைச்சர் ஃபிளாரன்ஸ் பார்லே, தனது ட்விட்டர் பக்கத்தில் ‘டசால்ட் நிறுவனத்தின் ரஃபேல் விமான உதிரி பாகங்களை இணைக்கும் இடத்தில் இருக்கிறேன். இங்குதான் 2 பில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தத்தில் தயாராகும் எஃப் 4 ரக விமானங்கள் இணைக்கப்பட உள்ளன” என்கிறார்.
இந்த ட்விட்டை அவருடைய அமைச்சகமும் டசால்ட் நிறுவனமும் ரீ-ட்விட் செய்திருக்கிறது. அமைச்சகம் வெளியிட்டுள்ள தொடர்புள்ள ட்விட்டில் 2024-ம் ஆண்டு 28 எஃப் 4 ரக விமானங்கள் கூடுதலாக படையில் சேர்க்கப்படும் என்றும் 30 விமானங்கள் 2023-ம் ஆண்டு தயாரிக்க ஆர்டர் தரப்படும் என்றும் கூறுகிறது.  எனவே, பிரான்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள தகவல் உண்மை என்பது நிரூபணமாகிறது.

மற்றொரு பிரெஞ்சு நாளிதழான Le Parisien, பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள ரஃபேல் ஒப்பந்தம் குறித்த முழு தகவலை முழுமையாக பிரசுரித்துள்ளது. அதில் விலை விவரங்கள் மட்டுமல்லாது, என்னவிதமான ஆயுதங்கள் சேர்க்கப்பட உள்ளன என்பது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.  ஆயுதப் படை அமைச்சர் அளித்த நேர்காணலில் இந்த விமானத்தில் செய்யப்பட இருக்கிற நவீன தகவல் தொடர்பு உத்திகள் குறித்தும் பேசியிருக்கிறார்.
பிரெஞ்சு நாளிதழ் கட்டுரை தெளிவாக இந்த ஒப்பந்தத்தின் மூலம் என்னவெல்லாம் செய்யவிருக்கிறது என்பதை பிரான்சு அரசு தெரிவிக்கிறது. ஆனால், டசால்ட் நிறுவனம் இந்த நாளிதழ் செய்தியையொட்டி வெளியிட்ட மூன்று பத்திரிகை அறிக்கைகளில், இதுகுறித்து ஒரு வார்த்தையும் சொல்லவில்லை.
அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய, இயங்கத் தயாராக இருக்கும் விமானங்களை வாங்கத்தான் மோடி அரசு பிரான்சுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. இதில் இடைச்செருகலாக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை நுழைத்து எதுவுமே செய்யாமல் அரசின் பணத்தை திருப்பிவிட திட்டமிட்டிருக்கிறது மோடி கும்பல்.  முழுமையான தகவலை வெளியிட்டால் வாடிக்கையாளரை இழக்க வேண்டியிருக்குமே என டசால்ட் நிறுவனமும் இந்த மெகா ஊழலில் கூட்டணி அமைத்திருக்கிறது.
ஆரம்பம் முதலே ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தகிடுதத்தங்கள் செய்ததை மறுத்து வருகிற மோடி கும்பல், முன்னாள் சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா இந்த முறைகேட்டை விசாரிக்கக்கூடும் என்ற பயத்தின் காரணமாக அவரை நள்ளிரவில் தூக்கி அடித்தது. உச்சநீதிமன்றம், மோடி அரசு அளித்த பொய் தகவல்களின் அடிப்படையில் ரஃபேல் முறைகேட்டை விசாரிக்க முகாந்திரம் இல்லை என சொல்லிவிட்டது.
பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒன்றரை மணி நேர நாடாளுமன்ற உரையில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் அளிக்க முடியாமல் திணறினார். நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கும் இவர்கள் தயாராக இல்லை.
தனியார் நிறுவனத்துக்கு அரசு பணத்தை தாரை வார்க்க போடப்பட்டதே ரஃபேல் ஒப்பந்தம். ஒட்டுமொத்தமாக இங்கே இருப்பதாக நம்பப்படும் ஜனநாயகத்தின் எந்த அமைப்பையும் மதிக்காமல், சர்வாதிகாரத்தன்மையுடன் அம்பானிகளின் நலனுக்காக மட்டுமே மோடி கும்பல் உழைப்பது, மீண்டும் தெரிய வந்துள்ளது.
அனிதா
அனிதா
செய்தி ஆ

கருத்துகள் இல்லை: