வெப்துனியா : சேலத்தில் இலவசமாக கறி தராத ஆத்திரத்தில் போலீஸ்காரர் ஒருவர் கறிக்கடைகாரரை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை சேர்ந்த மூக்குத்தி கவுண்டர் என்பவர் கறிக்கடை நடத்தி வருகிறார். அவ்வப்போது அவரது மனைவியும் மகனும் கடையை கவனித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மூக்குத்தி கவுண்டர் கடைக்கு வந்த காவல் அதிகாரி ஒருவர், அவரிடம் இலவசமாக கறி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஃப்ரீயால்லாம் தர முடியாது காசு கொடுங்கள் தருகிறேன் என மூக்குத்தி கவுண்டர் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காவலர் பாலசுப்ரமணியம், மூக்குத்தி கவுண்டரின் மகனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனையடுத்து மூக்குத்தி கவுண்டர் தனக்கு நேர்ந்த அவலங்களை மாவட்ட காவல் ஆணையரிடம் கூறினார். உடனடியாக காவலர் பாலசுப்ரமணியம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். மேலும் மூக்குத்தி கவுண்டரிடம் சென்ற காவலர் பாலசுப்ரமணியம், அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக