வெள்ளி, 18 ஜனவரி, 2019

கல்யாண் ஜுவலறி கொள்ளையர்கள் பிடிபட்டனர் .. திருப்பதியில் 60 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

THE HINDU TAMIL : கோவையில் கல்யாண் ஜுவல் லரி நிறுவனத்துக்கு சொந்த மான நகைகளை கொள்ளை யடித்தவர்களை திருப்பதியில் போலீஸார் கைதுசெய்து, ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டனர்.
கல்யாண் ஜுவல்லரி நிறுவனத்தின் கேரள மாநிலம் திருச்சூர் கிளையில் இருந்து, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கிளைக்கு கடந்த 7-ம் தேதி கொண்டு வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை, காக்காசாவடி அருகே 10 பேர் கொண்ட கும்பல் ஊழியர் களைத் தாக்கி கொள்ளை யடித்து சென்றது.

போலீஸார் நடத்திய விசா ரணையில், திருவள்ளூர் மாவட்டம் பஞ்சம்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரசூல் என்பவரின் மகன் பைரோஜ் தன்னுடைய நண்பர்கள் சிலருடன் சேர்ந்து கொள் ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப் பட்ட நகைகளில் சிலவற்றை தன்னுடைய கூட்டாளிகளுக்கு கொடுத்த பைரோஜ், 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆபரணங் களை தன்னுடைய தாய் சமா, சகோதரர் அகமது சலீம் ஆகியோரிடம் ஒப்படைத்தார். நகைகளை வீட்டில் வைத் திருந்தால் போலீஸார் பிடித்து விடுவார்கள் என்று கருதிய சமா, அகமது சலீம் ஆகியோர் நகைகளுடன் சொந்த ஊரில் இருந்து வெளியேறி பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்தனர்.
2 நாட்களுக்கு முன்பு திருப்பதிக்கு வந்த அவர்கள் நேற்று காலை திருப்பதி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தபோது சந்தேகத்தின்பேரில் திருப் பதி குற்றப்பிரிவு பிரிவு போலீஸார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களி டம் இருந்த பையை வாங்கி சோதனை செய்த போது அதில் தங்க நகைகள், வைரக்கற்கள், வெள்ளி ஆபரணங்கள் ஆகி யவை இருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் நடத் தப்பட்ட விசாரணையில் அவை கோவையில் கொள் ளையடிக்கப்பட்ட நகைகள் என்பது தெரிந்தது. இரு வரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.60 லட்சம் மதிப் புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: