வெள்ளி, 18 ஜனவரி, 2019

பிரிட்டிஷ் துணை தூதர், தூதரக அரசியல் தலைவர் ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு

tamilthehindu: இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் ரிச்சர்ட் பர்லாவ், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை தூதர் ஜெரிமி பில்மோர் பெட்போர்டு ஆகியோர் திமுக தலைவர் ஸ்டாலினை திடீரென சந்தித்துப் பேசினர்.
இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் ரிச்சர்ட் பர்லாவ், இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை தூதர் ஜெரிமி பில்மோர்-பெட்போர்டு லண்டனைச் சேர்ந்த வெளிநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தெற்காசிய அலுவலகத்தின் தலைவர் பெர்கஸ் அல்ட் ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.

ஸ்டாலினுடனான சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம், இந்தியா மற்றும் தமிழ் நாட்டின் சமூக - அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடியதாகக் கூறப்படுகிறது. மேலும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழக, தேசிய அளவிலான அரசியல் சூழல், திமுகவின் பங்கு குறித்த பல விவரங்கள் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சந்திப்பின் போது, பிரிட்டிஷ் தூதரக அரசியல், பொருளாதார மற்றும் பொது விவகாரத் துறை தலைவர் – ரூடி பெர்னாண்டஸ் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சர் பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக திமுக தரப்பில் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை: